PF Account Transfer New Future Update Now
Introduction :
தற்போது நமது PF கணக்கில் ஒரு கணக்கில் இருந்து மற்றோரு கணக்கிற்கு PF பணத்தை
Transfer செய்வதில் புதிய ஒரு பயனுள்ள Update யை தற்போது EPFO கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய update பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF Transfer NEW Option :
நாம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் நமது பழைய
நிறுவனத்தின் PF பணத்தை எடுக்கவேண்டும் என்றால் தற்போது நாம் பணிபுரியும்
அல்லது இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்திற்கு பணத்தை Transfer செய்யவேண்டும்.
அவ்வாறு Transfer செய்தால் மட்டுமே நம்மால் பழைய நிறுவனத்தில் உள்ள பந்தை எடுக்க
முடியும்.
இதில் இருக்க கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால். நாம் பழைய நிறுவனத்தின்
பணத்தை புதிய நிறுவனத்திற்கு Transfer செய்யும்போது அதற்க்கு முதலில் நமது
company Employer Approved செய்யவேண்டும்.
அதன் பின்னர் PF நிறுவனம் Approved செய்யவேண்டும் அதன் பின்னார்தான் நமது PF
பணமானது Transfer ஆகும்.
இதில் பலருக்கு ஒரு ஏற்படும் சில பிரச்சனைகள் என்னவென்றால் PF பணத்தை transfer
செய்யும்போது அது பல மாதங்களாக Approved செய்யப்படாமல் இருக்கும் அதற்குள் நாம்
2வது நிறுவனத்தில் பணியில் இருந்து விலகி 3வது புதிய நிறுவனத்தில் பணியில்
சேர்ந்துவிடுவோம்.
இந்த சூழ்நிலையில் நாம் ஏற்கனவே transfer Request கொடுத்திருந்த அந்த Request யை
cancel செய்ய வேண்டும்.
அப்படி cancel செய்யவிட்டால் நாம் 2வது நிறுவனத்தின் பணத்தை 3வது நிறுவனத்திற்கு
Transfer செய்ய முடியாது.
இங்கு நாம் நமது பழைய Transfer Request யை Cancel செய்ய வேண்டுமென்றால் அது
நம்மால் முடியாது.
இதனை நமது employer Cancel செய்யலாம் அல்லது pf நிறுவனம் cancel செய்யலாம்.
அல்லது pf இணையதளத்தில் Online ல் Grievance ல் புகாராளிக்கலாம். மேலே
குறிப்பிட்ட வழிகளில் தவிர வேறு எந்த வழியிலும் நாம் நமது Transfer Request யை
cancel செய்ய முடியாது.
ஆனால் தற்போது நமது PF கணக்கில் நாம் ஒரு நிறுவனத்தின் PF பணத்தை மற்றோரு
நிறுவனத்திருக்கு Transfer செய்தால் அதனை employer approved செய்யாத
நிலையில் நாம் எப்போது வேண்டுமென்றாலும் cancel செய்ய முடியும் அதற்கான புதிய
update யை தற்போது epfo கொண்டுவந்துள்ளது.
நாம் நமது பழைய Transfer Request யை cancel செய்ய எந்த ஒரு OTP ம் இல்லாமல் ஒரு
நிமிடத்தில் Cancel செய்ய முடியும்.
இதனால் பலருடைய பிரச்சனைகள் இந்த ஒரு சிறிய update மூலமாக சரிசெய்யவும் முடியும்.
நீங்கள் PF Request யை cancel செய்ய உங்களின் UAN யை login செய்து அதில் online
service என்கிற தேர்வினை தேர்வு செய்து அதில் வரும் Track Claim Status என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும்.
அதில் உங்களின் PF claim status க்கு கீழே உங்களின் Transfer Request
கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இடது புறம் அந்த Transfer Request யை Cancel
செய்வதற்கு Cancel என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்துங்களின் Transfer
Request யை cancel செய்யலாம்.
ஒரு முறை உங்களின் Request யை cancel தாலும் உங்களின் கணக்கு எந்த விதத்திலும்
பாதிக்காது. நீங்கள் மறு முறை எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் கணக்கை Transfer
செய்து கொள்ளவும் முடியும்.
இந்த update ஆனது பலருடைய பிரச்னைங்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும் என
என்னபடுகிறது.
மேலும் இந்த தகவளை video வடிவில் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.