Friday, May 24, 2019

PF Account problems and solutions Explained in Tamil

இந்த பதிவில் pf கணக்கில் ஏற்படும் முக்கியமான சில சந்தேகங்களையும் அதற்க்கான காரணம் மற்றும் தீர்வையும் இந்த பதிவில் பார்க்கலாம் .





1.ஒருவர் அவருடைய PF பணத்தை ஆன்லைன் வழியாக எத்தனை முறை எடுக்கமுடியும் /எடுக்கலாம்?



PF Account Incorrect Bank Details in PF, Re authorization letter

பதில் :

              ஒரு தனிப்பட்ட நபர் ஓன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட எத்தன்னை நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் அவர் ஆன்லைன் வழியாக அவருடைய பணத்தை 5 முறை மட்டுமே எடுக்க முடியும் .

இதில் அட்வான்ஸ் பணம் எடுத்திருந்தாலும் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ள படும் .அதற்க்கு மேல் பணம் எடுக்க முற்படும்போது pf அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படும் .


2.PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எடுத்தால் TAX வரி பிடித்தம் செய்யபோடுமா?

பதில்:
            பான் எண் மற்றும்  form 15G pf கணக்கில் இணைக்கவிட்டாலும்   PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எவ்வளவு  எடுத்தாலும் வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது . 


50000-க்கு  மேல் பணம் எடுத்தாலும் எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .

நீங்கள் முழு pf தொகையையும் எடுக்கும்போது மட்டும் வரி பிடித்தம் செய்யப்படும் .


3:PF கணக்கில் தந்தையின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது அதனை எவ்வாறு சரிசெய்வது ?



பதில்:
           உங்களின் pf கணக்கில் உங்களின் தந்தை பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை ஆன்லைன் வழியாக சரிசெய்திட முடியாது அதற்க்கான வழிகள் ஆன்லைனில் இல்லை.

இதை சரி செய்திட Joint Declaration form என்கிற படிவத்தை பயன்படுத்தி சரி செய்திடவேண்டும் .இதை பற்றிய முழு விளக்கத்தையும் தெரிந்துக்கொள்ள  கீழே உள்ள link -யை கிளிக் செய்யவும் .


4.pf பணத்தை claim செய்தால் எத்தனை நாட்களில் பணம் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் ?

பதில்:
              ஒருவர் தனது pf பணத்தை ஆன்லைன் வழியாக claim செய்யும் பொது அவர் ஆன்லைன் claim form படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த நாளில் இருந்து அதிகபட்சமாக 20 ல் இருந்து 30 வேளை  நாட்கள் ஆகும் .

உங்களின் pf claim தற்போதைய நிலையை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியும் ,

எப்படி pf பணத்தை claim செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள link யை click செய்யவும் .
                                                      

                                                         👇👇👇👇👇👇








                                                    
                                                      https://bit.ly/2YLheUE


5.         pf கணக்கில் உள்ள பெயர் , பிறந்த தேதி ,பாலினம் இதில் ஏதாவது ஓன்று தவறாக pf கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தால்  ஆதார் எண்ணினை pf கணக்கில் இணைக்க முடியுமா ? இதற்க்கு என்ன செய்யவேண்டும் ?எப்படி இணைப்பது ?

பதில்:

             உங்களின் பெயர், பிறந்த தேதி ,பாலினம் இதில் ஏதாவது ஓன்று தவறாக உங்களின் pf கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை ஆன்லைன் வழியாக சரிசெய்திட முடியும் .

இதற்க்கு உங்களின் UAN கணக்கை login செய்து பின்னர் அதில் manage என்ற தேர்வினை தேர்வு செய்து அதில் basic details modify என்கிற தேர்வினை பயன்படுத்தி சரிசெய்திட முடியும் .

இதனை முழுவிளக்கங்களுடன் தெரிந்துகொள்ள கீழே உள்ள Link யை click செய்யவும் .

                                                👇👇👇👇👇👇👇

                                 https://www.youtube.com/watch?v=27Wn-p-ZNxI


இதனை சரி செய்யாமல் உங்களின் ஆதார் எண்ணினை உங்களின் pf கணக்கில் இணைக்க முடியாது , 

 





Wednesday, May 15, 2019

PF Account Incorrect Bank Details in PF, Reauthorization Form with Download Link

 PF Account  Incorrect Bank Details in PF, Reauthorization Form with Download Link 

Introduction:

இந்த பதிவில் உங்களின் pf பணம் claim செய்து அந்த பணம் உங்களின் வங்கி கணக்கு தவறாக இருக்கும் பற்றத்தில் அந்த பணமானது உங்களின் pf அலுவலகத்திற்க்கே திரும்ப சென்றுவிடும் .



இவ்வாறு உங்களின் pf பணமானது Return அனால் நீங்கள் அதனை மூன்று வழிகளில் சரி செய்ய முடியும் .

மூன்று முக்கிய வழிகள் :

1.Re authorization form ,
2.Rise complaint on Grievance ,
3.Re Apply same Claim form .

1.Re authorization form :


உங்களின் வங்கி கணக்கை pf கணக்கில் தவறாக பதிவு செய்திருந்தால் அதனை எப்படி திருத்தும் செய்வதற்கு சிறந்தவழி Re authorization  இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து மேலும் அதனுடன் உங்களின் வங்கி காசோலையை இணைத்து அதனை உங்களின் pf அலுவலகத்திற்கு கொண்டு கொடுக்க வேண்டும் அப்போது உங்களின் வங்கியின் பாஸ்புக்யை எடுத்து செல்வது அவசியம் .


1.Re authorization Form Download Link :



இந்த வழியின் மூலக உங்களின் pf  பணத்தை திரும்ப பெற முடியும் .மற்ற வழிகளை விடவும் இந்த வலியானது 100% உங்களின் பணத்தை திரும்ப பெற்று தரும் .

மற்ற வழிககளைவிட இந்த வழியானது மிகவும் உறுதியாக உங்களுக்கு பணத்தை பெற்று தரும் இதற்க்கு நீங்கள்  அலைச்சலை சந்திங்க நேரிடும் .


2.Rise complaint on Grievance :

இந்த வழியில் உங்களின் pf பணத்தை  நீங்கள் திரும்ப பெறுவதற்கு ஆன்லைன் Grievance என்கிற வழியில் புகாரளிக்க வேண்டும் அவ்வாறு புகாரளிக்கும்போது உங்களின் claim rejected ஆனதற்கான screen short யை pdf படிவமாக மாற்றம் செய்து அதனை புகாரளிக்கும்போது பதிவேற்றம் செய்யவேண்டும் .

இவ்வாறு செய்வதற்கு முன்னர் உங்களின் UAN ல் நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும்  தவறான வங்கி  கணக்கை  மாற்றி புதிய வங்கி கணக்கினை இணைத்திருக்க வேண்டும் .

இதன் பின்னர்தான் நீங்கள் புகாரளிக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களின் பணம் உங்களின் சரியான வாங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் .

ஒருவேளை நீங்கள் கொடுத்த புகாருக்கு அவர்கள் reauthorization படிவத்தை சமர்பிக்கும்படி சொன்னால் மேலே கொடுக்கப்பட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வழிகளை பின்பற்றவும் .


3.Re Apply same Claim form :

மூன்றாவது வழி .உதாரணமாக நீங்கள் படிவம் 19 யை claim செய்து அந்த பணமானது திரும்ப உங்களின் pf அலுவலகத்திற்கு செல்லும்பெற்றத்தில் உங்களின் UAN டன் இணைத்திருக்கும் வங்கி கணக்கை சரி பார்த்து சரியான வங்கி கணக்கை உங்களின் UAN டன் இணைக்க வேண்டும் .

இதன் பின்னர் ஒரு 20 நாட்கள் கழித்து அதே படிவம் 19 யை கிளைம் செய்யும்போது உங்களின் claim process செய்யப்பட்டால் உங்களின் பணம் உங்களின் சரியான வங்கி கணக்கிற்கு வந்து சேரும்  .

இந்த வழியில் நீங்கள் முயற்சிக்கும்போது மறுபடியும் உங்களின் pf claim நிராகரிக்கப்பட்டு உங்களின் Rejected Reason submit Reauthorization form யனா குறிப்பிடப்பட்டால் மேலே உள்ள வழியினை  பின்பற்றவும் .

இந்த வழியானது 50%வரையுல் மட்டுமே பயணிக்க வாய்ப்பு உள்ளது குறிபிடத்தக்கது .


Saturday, May 4, 2019

PF previous account is different then present account problems solution

PF Amount Transfer error Previous account is different then                  present account problems and Best Solutions




                                 


                               


         உங்களின் pf பணத்தை ஒரு மெம்பெர்(Member) ID-யில் இருந்து இன்னொரு நிறுவனத்தின் மெம்பெர்(Member) ID-க்கு Transfer செய்யும் பொது  கீழே கொடுக்க பட்டதுபோல error வரலாம்


                    Previous Account is different then present Account

Error வருவதன் காரணம் :





                               

           
           இதுபோன்று Error  வருவதற்கு காரணம் உங்களின் (previous) முந்தய நிறுவனத்தின் DOE (Date of End ) DOE :20/05/2017 தேதி 

மற்றும் தற்போது அல்லது இறுதியாக பணி புரிந்த நிறுவனத்தின் DOJ (Date of Joining)DOJ :20/05/2017 தேதியும் ஒரே மாதிரியாக இருந்தால் இந்த error வரும் .

                                                               அல்லது 

                                உங்களின் (previous) முந்தய நிறுவனத்தின் DOE (Date of End )
DOE :14/03/2018 தேதி மற்றும்  தற்போது அல்லது இறுதியாக பணி புரிந்த நிறுவனத்தின் DOJ (Date of Joining) DOJ :14/02/2018 தேதி முந்தய நிறுவனத்தில் பணியில்  சேர்ந்த தேதிக்கு முன்னதாகவும் இருக்க கூடாது அப்படி இருந்தாலும் இது போன்று  error வரும் .

                                                           அல்லது 

                                 உங்களின் தனிநபர் விபரங்களில் (பெயர் ,பிறந்த வருடம் மாதம் நாள் ,பாலினம் ,தந்தை பெயர் ) ஏதேனும் தவறுகள் இருந்தாலும் இது போன்ற error வரலாம் .


இவை அனைத்தையும் சரிபார்த்துக்கொள்ளவும் .இதுபோன்ற தவறுகளால் மட்டுமே இந்த error வருகிறது .


எடுத்துக்காட்டாக :




Best solution 

சரிசெய்வது எப்படி ?


                                இதனை ஆன்லைன் வழியாக சரிசெய்ய முடியாது .
அதற்கான வழி ஆன்லைனில் இல்லை .

 இதற்க்கு joint declaration form  என்கிற படிவத்தை பூர்த்தி செய்து உங்களின் DOE (Date of End) மற்றும் DOJ (Date of Joint) இதில் ஏதேனும் ஒன்றை சரிசெய்வதன் மூலமாகவும் இந்த error-யை சரிசெய்யலாம் .

joint declaration form sample :

Joint Declaration of EPF by the Member & Employer

Date:
To
The Regional PF Commissioner,
…………………………………………….

 Subject: Joint Declaration by the Member & Employer

Dear Sir,
It is found that is an error in the basic details of the employee ----------------------------- PF Account No-------------------------& UAN No -------------------------- in the employees provident Fund Organization Establishment Master .The error occurred due to wrong data upload.
It is Certified that the above person is / was an employee of our establishment and his correct particulars are given bellow:
Establishment Code:……………………………

Particulars
Correct
Wrong Entry in my A/C
Name



Father/Husband Name



EPF/EPS Account No.



UAN Number



Date of Birth (DD/MM/YYYY)



Date of Joining (DD/MM/YYYY)



Date of Joining (DD/MM/YYYY)




I also have enclosed herewith the self attested copy of ID proof (Any one- PAN Card, Voter ID Card, Passport, Driving License, Adhaar Card) for your ready reference.

Therefore, you are requested to make the necessary changes in your records (if required) under information to me. An early action in this regard will be highly appreciated.
Encl.: As above

Yours faithfully,


Name & Signature of the applicant:

Signature of AO(C) with Establishment Seal:

இந்த படிவமானது அணைத்து pf அலுவலகங்களிலும் மட்டும் ஆன்லைன் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியும் .

இந்தபடிவத்தை பூர்த்தி செய்து நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திடம் ஒப்புதல் வாங்கியபின்னர் அதனை உங்கள் pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .

பின்னர் இந்த தேதி திருத்தும் செய்யப்பட்ட பின்னர் உங்களால் உங்களின் முந்தய நிறுவனத்தின் pf Transfer செய்யமுடியும் .
       

                                          Download : Joint Declaration form


















How to withdrawal previous company pf amount through online

உங்கள் பழைய நிறுவனத்தில் உள்ள உங்களின் pf பணத்தை ஆன்லைன் வழியாக எப்படி எடுப்பது ?

<script async custom-element="amp-ad" src="https://cdn.ampproject.org/v0/amp-ad-0.1.js"></sc
                                1.இந்த பதிவில் நாம் இதற்க்கு முன் பணி புரிந்த  நிறுவனத்தில் உள்ள pf பணத்தை எப்படி எடுப்பது என்பது பற்றி பார்க்கலாம் .


ஒருவர் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கலாம் ஆனால் அவருடைய UAN (universal account  number ) மாறாமல் ஒரே UAN ஆகவே இருக்கும் .

PF Amount withdrawal minimum KYC documentation details பணத்தை claim செய்வதற்கு தேவை படும் குறைந்தபட்ச ஆவணக்கள் என்னென்ன? இவர்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுக்கும் பொது  அவர் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID எண் மட்டுமே காட்டப்படும் அது தவிர வேறு நிறுவனத்தில் பணிபுரிந்த மெம்பெர் ID எண் காட்டப்படாது .

இதனால் மற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த pf பணத்தை  உங்களால் எடுக்கவும் முடியாது. இதுவே அனைவரின் சந்தேகமும் கூட !



இதை எப்படி எடுப்பது என்பதை பார்ப்போம் !

                       நாம் நமது previous company pf பணத்தை எடுப்பதற்கு முதலில் உங்களின் பழைய நிறுவனத்தின் pf பணத்தை தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் pf member id க்கு மாற்றம் (Transfer) செய்யவேண்டும் .

மேலும் தெரிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்கள் 







Transfer செய்யும் பொது உங்களின் previous கம்பெனி pf பணமானது தற்போது உள்ள pf கணக்கிற்கு Transfer செய்யப்படும் .இந்த பணம் உங்களின் தற்போதய கணக்கிற்கு வருவதற்கு 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம் ஒருசிலருக்கு இன்னும் அதிகமாகவும் நாட்கள் நீட்டிக்கலாம் .

இந்த பணமானது உங்களின் தற்போதய கணக்கிற்கு வந்ததும் உங்களின் பணம் வந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள் .அதன் பின்னர் உங்களின் தற்போதய நிறுவனத்தில் உங்களுக்கு DOE (Date of  End ) update செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ளவும் DOE update செய்யவில்லை என்றால் உங்களால் முழு pf பணத்தையும் எடுக்க முடியாது .


pf Advance பணத்தை மட்டுமே எடுக்க முடியும் .doe update செய்யப்பட்டிருந்தால் உங்களின் pf பணம் முழுவதையும் எடுக்கலாம் .


இதுபோன்று எத்தனை நிறுவனத்தில் தாங்கள் பணிபுரிந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து பணத்தையும் மேலே குறிப்பிட்டது போன்று transfer செய்யவேண்டும் அதன் பின்னர் பணத்தை ஒன்லைன் வழியாக எடுத்துக்கொள்ள முடியும் .


PF பணத்தை Transfer செய்வதற்கும் தாங்கள் பணிபுரிந்த பழைய நிறுவனத்தில்  DOE update செய்திருக்கவேண்டும் இல்லையென்றால் Transfer செய்யமுடியாது .


இந்த வழியில் மட்டுமே உங்களின் previous  company  pf பணத்தை எடுக்கமுடியும் .