இந்த பதிவில் pf கணக்கில் ஏற்படும் முக்கியமான சில சந்தேகங்களையும் அதற்க்கான காரணம் மற்றும் தீர்வையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
1.ஒருவர் அவருடைய PF பணத்தை ஆன்லைன் வழியாக எத்தனை முறை எடுக்கமுடியும் /எடுக்கலாம்?
PF Account Incorrect Bank Details in PF, Re authorization letter
பதில் :
ஒரு தனிப்பட்ட நபர் ஓன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட எத்தன்னை நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் அவர் ஆன்லைன் வழியாக அவருடைய பணத்தை 5 முறை மட்டுமே எடுக்க முடியும் .
இதில் அட்வான்ஸ் பணம் எடுத்திருந்தாலும் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ள படும் .அதற்க்கு மேல் பணம் எடுக்க முற்படும்போது pf அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படும் .
2.PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எடுத்தால் TAX வரி பிடித்தம் செய்யபோடுமா?
பதில்:
பான் எண் மற்றும் form 15G pf கணக்கில் இணைக்கவிட்டாலும் PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணம் எவ்வளவு எடுத்தாலும் வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது .
50000-க்கு மேல் பணம் எடுத்தாலும் எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .
நீங்கள் முழு pf தொகையையும் எடுக்கும்போது மட்டும் வரி பிடித்தம் செய்யப்படும் .
3:PF கணக்கில் தந்தையின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது அதனை எவ்வாறு சரிசெய்வது ?
பதில்:
உங்களின் pf கணக்கில் உங்களின் தந்தை பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை ஆன்லைன் வழியாக சரிசெய்திட முடியாது அதற்க்கான வழிகள் ஆன்லைனில் இல்லை.
இதை சரி செய்திட Joint Declaration form என்கிற படிவத்தை பயன்படுத்தி சரி செய்திடவேண்டும் .இதை பற்றிய முழு விளக்கத்தையும் தெரிந்துக்கொள்ள கீழே உள்ள link -யை கிளிக் செய்யவும் .
4.pf பணத்தை claim செய்தால் எத்தனை நாட்களில் பணம் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் ?
பதில்:
ஒருவர் தனது pf பணத்தை ஆன்லைன் வழியாக claim செய்யும் பொது அவர் ஆன்லைன் claim form படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த நாளில் இருந்து அதிகபட்சமாக 20 ல் இருந்து 30 வேளை நாட்கள் ஆகும் .
உங்களின் pf claim தற்போதைய நிலையை ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியும் ,
எப்படி pf பணத்தை claim செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள link யை click செய்யவும் .
👇👇👇👇👇👇
No comments:
Post a Comment