உங்கள் பழைய நிறுவனத்தில் உள்ள உங்களின் pf பணத்தை ஆன்லைன் வழியாக எப்படி எடுப்பது ?
<script async custom-element="amp-ad" src="https://cdn.ampproject.org/v0/amp-ad-0.1.js"></sc
1.இந்த பதிவில் நாம் இதற்க்கு முன் பணி புரிந்த நிறுவனத்தில் உள்ள pf பணத்தை எப்படி எடுப்பது என்பது பற்றி பார்க்கலாம் .ஒருவர் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கலாம் ஆனால் அவருடைய UAN (universal account number ) மாறாமல் ஒரே UAN ஆகவே இருக்கும் .
PF Amount withdrawal minimum KYC documentation details பணத்தை claim செய்வதற்கு தேவை படும் குறைந்தபட்ச ஆவணக்கள் என்னென்ன? இவர்களின் pf பணத்தை ஆன்லைனில் எடுக்கும் பொது அவர் இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்தின் மெம்பெர் ID எண் மட்டுமே காட்டப்படும் அது தவிர வேறு நிறுவனத்தில் பணிபுரிந்த மெம்பெர் ID எண் காட்டப்படாது .
இதனால் மற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த pf பணத்தை உங்களால் எடுக்கவும் முடியாது. இதுவே அனைவரின் சந்தேகமும் கூட !
இதை எப்படி எடுப்பது என்பதை பார்ப்போம் !
நாம் நமது previous company pf பணத்தை எடுப்பதற்கு முதலில் உங்களின் பழைய நிறுவனத்தின் pf பணத்தை தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் pf member id க்கு மாற்றம் (Transfer) செய்யவேண்டும் .
மேலும் தெரிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்கள்
Transfer செய்யும் பொது உங்களின் previous கம்பெனி pf பணமானது தற்போது உள்ள pf கணக்கிற்கு Transfer செய்யப்படும் .இந்த பணம் உங்களின் தற்போதய கணக்கிற்கு வருவதற்கு 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம் ஒருசிலருக்கு இன்னும் அதிகமாகவும் நாட்கள் நீட்டிக்கலாம் .
இந்த பணமானது உங்களின் தற்போதய கணக்கிற்கு வந்ததும் உங்களின் பணம் வந்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள் .அதன் பின்னர் உங்களின் தற்போதய நிறுவனத்தில் உங்களுக்கு DOE (Date of End ) update செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ளவும் DOE update செய்யவில்லை என்றால் உங்களால் முழு pf பணத்தையும் எடுக்க முடியாது .
pf Advance பணத்தை மட்டுமே எடுக்க முடியும் .doe update செய்யப்பட்டிருந்தால் உங்களின் pf பணம் முழுவதையும் எடுக்கலாம் .
இதுபோன்று எத்தனை நிறுவனத்தில் தாங்கள் பணிபுரிந்திருந்தாலும் அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து பணத்தையும் மேலே குறிப்பிட்டது போன்று transfer செய்யவேண்டும் அதன் பின்னர் பணத்தை ஒன்லைன் வழியாக எடுத்துக்கொள்ள முடியும் .
PF பணத்தை Transfer செய்வதற்கும் தாங்கள் பணிபுரிந்த பழைய நிறுவனத்தில் DOE update செய்திருக்கவேண்டும் இல்லையென்றால் Transfer செய்யமுடியாது .
இந்த வழியில் மட்டுமே உங்களின் previous company pf பணத்தை எடுக்கமுடியும் .
Semma mapla
ReplyDelete