Tuesday, December 28, 2021

2022 ல் நிதி நிலையில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்

இந்த பதிவில் 2022-ம் ஆண்டு முதல் நிதி நிலையில் வர இருக்கின்ற மாற்றங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

 


நம் நாட்டின் நிதி நிலைமையை சரி செய்யவும் அதனை மேம்படுத்தும் வகையிலும் புதிய அறிவிப்புகளை RBI வெளியிட்டுள்ளது

இதனால் குழு முறையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

புது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் நீங்கள் இந்த ஆண்டில் நிதி நிலையில் வரவுள்ள மாற்றங்களையும் வரவேற்க தயாராக இருங்கள்.

இத்தகைய மாற்றங்கள் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நிதி நிலைமை என்றாலே ஏற்றமும் இறக்கமும் இருக்க தான் செய்யும்

அந்த வகையில் வரவுள்ள மாற்றங்கள் மக்களுக்கு ஏற்றவாறு இருக்குமா என்பது புதிய ஆண்டில் தான் தெரிய வரும்.

 

இத்தகைய நிதி நிலைமை மாற்றங்கள் அனைத்து தரப்பினரையும் பாதிக்காதவாறு அமைந்தால் சிறப்பாக இருக்கும். இத்தகைய மாற்றங்கள் கீழேயுள்ள துறைகளில் இருக்கலாம்.

·         வங்கி துறை
·      தபால் துறை
·      EPFO
·      ஜிஎஸ்டி
·      எரிவாயு

 

1.வங்கி துறை

·       Debit Card / Credit Card

 


Debit Card மற்றும் Credit Card பயன்படுத்தி பணம் செலுத்துதல் மற்றும் பணபரிவர்த்தனையில் இன்னும் பாதுகாப்பான சில மாற்றங்கள் வர உள்ளது.

பணம் பரிவர்த்தனை பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஒவொரு முறையும் வாடிக்கையாளர்கள் Debit Card  அல்லது Credit Card பயன்படுத்தி பணம் செலுத்தும் போது தங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

அல்லது டோக்கன் முறையில் பாதுகாப்பான சேவையை பெறும் வகையில் மாற்றம் வரவுள்ளது.

 

·     ATM கட்டணம் உயர்வு


பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்காக ATM-களையே நாடுகின்றனர். தற்போது ATM களில் பணம் எடுப்பதிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது

வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களோ அந்த வங்கி ATM களில் ஒரு மாதத்திற்கு 5முறை பணம் எடுக்க முடியும்

மெட்ரோ சிட்டியில் மற்ற வங்கி ATM களில் 3முறையும், மெட்ரோ அல்லாத சிட்டிகளில் ATM களில் 5 முறையும் பணம் எடுக்க முடியும்.

 

ATM-ஐ பராமரிப்பதற்கான கட்டணத்தை உயர்த்த RBI ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி 1,2022 முதல் 5 முறைக்கு மேல் ATM களில் பணபரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயிலிருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடன் GST  8 ரூபாய் பிடிக்கப்படும்.

 

2.   GST Update 


ஜனவரி 1 2022 முதல் GST கட்டணம் உயர உள்ளது. அதாவது காலணிகள் மற்றும் ஆடைகளின் விலை உயரலாம். அதன்படி காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான GST விகிதம் 5% லிருந்து 12% ஆக உயர உள்ளது.

 

ஜனவரி 2022 முதல் ஆடைகள், ரெடிமேட் ஆடைகள், காட்டன், போர்வைகள் போன்ற ஜவுளி பொருட்களின் GST விகிதம் 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

காலணிகளுக்கான GST விகிதம் 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த GST விகிதம் 1000 ரூபாய் வகையிலான காலணிகளுக்கு பொருந்தும்.

 

3.EPFO சந்தாதாரர்கள் நாமினி இணைத்தல்


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருப்பின் உங்களின் Nominee தேர்வு செய்வது கட்டாயம்

இதனால் நீங்கள் உங்களின் அவசர தேவைக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் உரிமைக்கோரல் செய்ய முடியும். இதுவரை Nominee இணைக்காமல் இருப்பின் டிசம்பர் 2021க்குள் இணைப்பது சிறந்த பயனைக் கொடுக்கும்.

Sunday, December 26, 2021

PF Office Important Announcement on 2022 new update information

 PF published Important Announcement on all  PF Account Holders



Introduction :


தற்போது நமது EPFO நிறுவனமானது அணைத்து PF சந்தா தாரர்களுக்கும் ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது வரும் 2022 ஜனவரி 1முதல் நடைமுறைக்கு வருவதாகவும் வெளியிட்டுள்ளது.

அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF New Announcement :


தற்போது நமது EPFO ஆனது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதாவது.

வரும் 2022 ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் உங்களின் UAN ல் ஆதார் எண்ணினை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு aadhar எண் இணைக்கப்படாத UAN களில் வரும் ஜனவரி 1க்கு பின்னர் எந்த வித PF Contribution பணமும் இனிமேல் deposit செய்யப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்க்கு முன்னர்  உங்களின் UAN னுடன் உங்களின் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் உங்களின் UAN ல் PF Contribution பணமானது Deposit செய்யப்படும் .


ஆனால்  இனிமேல் உங்களின் UAN னுடன் உங்களின் ஆதார் எண்ணினை இணைக்கவில்லையென்றால் வரும் ஜனவரி 1 2022 முதல் உங்களின் PF கணக்கில் PF Contribution Deposit செய்ய முடியாது என்று தற்போது EPFO அறிவித்துள்ளது . 


ஆதலால் உங்களின் PF கணக்கில் வரும் டிசம்பர் 31க்குள் உங்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம் என்றும் தற்போது EPFO முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

Saturday, December 11, 2021

PF Account New Update on KYC Update on Online full details in tamil

 PF Account New Update on KYC Update on Online full details



Introduction :

தற்போது நமது PF கணக்கில் KYC update செய்வதில் புதிய update கொண்டுவரப்பட்டுள்ளது அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Account New KYC update :

நமது PF கணக்கில் இதற்க்கு முன்னர் kyc ல் aadhar எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணினை இணைக்க மட்டுமே otp தேவை பட்ட நிலையில் தற்போது.



நமது PF கணக்கில் கீழ் காணும் ஆவனத்தில் எந்த ஒரு ஆவணத்தை இணைதாலும் aadhar எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு otp அனுப்பப்படும். அந்த otp எண்ணினை பதிவு செய்தால் மட்டுமே உங்களால் kyc ல் கீழ் காணும் ஆவணத்தை இனி உங்களால் இணைக்க முடியும்.

1. Aadhar card,

2. Bank account,

3. PAN card

மேலும் இதற்க்கு முன்னர் pan எண்ணினை இணைப்பதற்கு otp தேவை இல்லை.


ஆனால் தற்போது pan எண்ணினை இணைப்பதற்கு  ஆதார் OTP கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உங்களிடம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள mobile number இல்லை என்றால் உங்களால் kyc ஆவணத்தை உங்களின் UAN-னுடன் இணைக்க முடியாது.


Aadhar KYC option not show :


அதே போன்று உங்களின் UAN ல் ஒரு முறை aadhar எண் இணைக்கப்பட்டால் மறுபடி உங்களால் aadhar எண்ணினை UAN ல் update செய்ய முடியாது.



Aadhar update செய்வதற்கு எந்த ஒரு தேர்வும் இருக்காது.


அதன் பின்னர் உங்களுக்கு pan, bank, passport போன்ற ஆவணங்களை இணைப்பாதற்கான தேர்வுகள் மட்டுமே காண்பிக்கப்படும்.


உங்களின் UAN ல் உங்களின் aadhar எண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் aadhar aadhar எண் உங்களின் UAN ல் இணைக்க பட்டால் அதனை online வழியாக மாற்றம் செய்ய முடியாது.


UAN ல் குறிப்பிட்டுள்ள தகவளை திருத்தம் செய்ய முடியும் ஆனால் aadhar எண்ணினை திருத்தம் செய்ய முடியாது.

Without Aadhar card link UAN :


உங்களின் pf கணக்கில் இதுவரை aadhar எண்ணினை இணைக்காமல் இருந்தால் தற்போது உங்களுக்கு aadhar என்கிற ஒரே தேர்வு மட்டுமே KYC update பக்கத்தில் காண்பிக்கப்படும்.


நீங்கள் aadhar எண்ணினை இணைத்தால் மட்டுமே உங்களால் pan எண், bank account number யை இணைக்க முடியும்.


இந்த update ல் தற்போது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற  தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Tuesday, December 7, 2021

Kotak Bank Dream Different Life life time Free Credit Card Full Benefits and Futurs Fee and Interest rate full details

 Kotak Bank Dream Different Life life time Free Credit Card Full Benefits and Futurs in Tamil 







Introduction :

இந்த பதிவில் Kotak Bank ன்  Dream Different Life life time Free Credit Card Full Benefits and Futurs மற்றும் அந்த Card என்னென்ன முக்கியமான கட்டண பிடித்தம் மற்றும் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது .என்பது குறித்த அணைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Kotak Bank Dream Different Life life time Free Credit Card :


kotak Bank  ல் வழங்கக்கூடிய one of the  Life Time Free Credit Card இதுவாகும் .இந்த credit Card ற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் குறைந்தது இந்த Kotak Bank  ல் ஒரு Zero Balance Saving Account ஆவது  வைத்திருக்க வேண்டும் .

உங்களுக்கு Kotak Bank  ல் Account இல்லாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள link யை click செய்து உடனடியாக ஒரு Zero Balance Account  யை open செய்ய முடியும் .

Zero Balance Account Open Link :





 மேலும் அந்த கணக்கில் குறைந்தது 15000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் எவ்வளவு தொகையை வேண்டுமென்றாலும் Deposit செய்வதன் மூலமா இந்த credit Card யை பெற முடியும் .

இந்த Credit Card  ல் நீங்கள் எவ்வளவு பணம் Deposit செய்கிறீர்களோ அந்த பணத்தில் 90% தொகையை நீங்கள் Credit Card  ன் Limit ஆக பெற முடியும் .


மேலும் நீங்கள் deposit  பணத்தை உங்களின் Credit Card யை வாங்கிய பின்னர் நீங்கள் உங்களின் Mobile Application  மூலமாக ( withdrawal )எடுத்துக்கொள்ள முடியும் .

உங்களின் பணத்தை deposit செய்து அதன் பின்னர் அந்த பணத்தையும் எடுக்கவேண்டும் என்றால் நீங்கள் kotak வங்கியில் Credit Card  வாங்குவது சிறந்தது .

Kotak Mahendra Bank Benefits 


  • Life Time Free ,
  • No Joining Fee,
  • No Annual fee,
  • Online Offline வழியாக எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்தி கொள்ள முடியும் ,
  • EMI வசதி,


  • இந்த Credit Card ல் 90% பணத்தை உங்களால் ATM மூலமாகவோ அல்லது Transfer செய்யவோ முடியும்.(மற்ற Credit Card அதிகப்பற்றமாக 30%  முதல் அதிகப்பற்றமாக 45%வரையிலான பணத்தை மட்டுமே Transfer செய்ய முடியும்   )

  • மேலும் நீங்கள் ATM Machine மூலமாக எடுக்கும் பணத்திற்கு அதிகப்பற்றமாக 48 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது.  

  • இந்த Credit Card யை வாங்கி அதனை Activation செய்து அடுத்த 45நாட்களுக்குள் 5000 ரூபாய் இந்த கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தினால் உங்களுக்கு 500Bonus Reward Points உங்களுக்கு வழங்கப்படும் .

  • இந்த Card யை பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் 75000ரூபாய் செலவு செய்திருந்தால் உங்களுக்கு 750ரூபாய் Cash Back அல்லது 4PVR Ticket  இலவசமாக வழங்கப்படும் .

  • இந்த Card யை பயன்படுத்தி நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100ரூபாய்க்கும் உங்களுக்கு 2 Rewards Points கிடைக்கும் .

  • இந்த Card நீங்கள் தொலைத்து விட்டால் உடனடியாக உங்களின் வங்கியை தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவித்த பின்னரம் உங்களின் card ல் இருந்து  பணம் திருடப்பட்டால் 50000ரூபாய் வரை insurance claim செய்திட முடியும் .

  • Amazon மற்றும் Flipkart போன்ற இணையதளங்களில் இந்த card யை பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது உங்களின் 5% முதல் 15% வரையில் cash back  யை பெற முடியும் .

  • மேலும் அவசர தேவைக்கும் இந்த Credit Card யை பயன்படுத்தி ATM Machine ல் பணம் withdrawal செய்யவும் முடியும் .

  • இந்த CreditCard ல் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் முழுவதையும் அந்த மாதம் செலுத்த முடியவில்லையென்றால் குறைந்த பற்ற கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தில் 5% முதல் 10%வரையிலான தொகையை மட்டும் செலுத்தினால் போதும் .

மீதம் உள்ள தொகையை அடுத்த ஆண்டு செலுத்தினால் போதும் (நீங்கள் செலுத்த வேண்டிய மீதம் உள்ள கட்டணத்திற்கு வட்டி பிடித்தம் செய்யப்படும் )

Kotak Bank Dream Different credit Card Interest 

 
  • இந்த Credit Card  யை பயன்படுத்தி EMI ல் பொருட்களை வாங்கும்போது அதற்கான வட்டியாக மாதம் 2.99% வரையில் பிடித்தம் செய்யப்படும் .

  • ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம்  35.88%வரையில் பிடித்தம் செய்யப்படும். .

Dream Different Credit Card Fee 


  • இந்த Credit Card யை பயன்படுத்தி ATM Machine  ல் பணம் எடுத்தாலோ அல்லது வாங்கி கணக்கிற்கு  Transfer  செய்தாலோ 10,000 ரூபாய்க்கு 349ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம்  செய்யப்படும் .

  • Overlimit Charges Rs .500.

  • நீங்கள் உங்களின் Card தொலைத்துவிட்டாலோ அல்லது  உடைத்துவிட்டாலோ அதற்க்கு பதிலாக புதிய Credit Card யை பெற 100+GST பிடித்தம் செய்யப்படும் .

  • இந்த Credit Card யை பயன்படுத்தி IRCTC ரயில் Ticket Booking செய்வதற்கான கட்டணத்தை செலுத்தினால் உங்களுக்கு 1.8%வரையில் கட்டண பிடித்தம் செய்யப்படும் .

  • மேலும் Rail way Counter ல் train Ticket வாங்கும் பொது அதற்க்கான கட்டணத்தை இந்த Credit Card யை பயன்படுத்தி செலுத்தும்போது அதற்க்கு 2.5%வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் (அதிகப்பற்றமாக ஒரு ஆண்டிற்கு 500/ரூபாய் வரை மட்டும் பிடித்தம் செய்யப்படும் )

  • இந்த Credit Card யை பயன்படுத்தி இந்தியன் எந்த ஒரு Petrol bunk ல் நீங்கள் பெட்ரோல் வாங்கினாலும் அதற்கான கட்டணத்தை இந்த Credit Card யை பயன்படுத்தி செலுத்தும் பொது அதற்க்கு 1%வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்(அதிகப்பற்றமாக ஒரு ஆண்டிற்கு 3500/ரூபாய் வரை மட்டும் பிடித்தம் செய்யப்படும்) .

  • இந்த Credit Card க்கான கட்டணத்தை வங்கியில் சென்று பணமாக செலுத்தும் பொது அதற்க்கு 100ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .

Kotak Bank Dream Different Credit card Eligibility Criteria


  • இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க குறைந்தது 18வயது முதல் அதிகப்பற்றமாக 75வயதுக்குள் இருக்க வேண்டும் .
  • குறைந்தது 15000 ரூபாய் Fixed Deposit  செய்யவேண்டும் .
  • Cibil Score  தேவை இல்லை 

Kotak Bank Zero Balance Account Open Link 



Kotak Bank Zero Balance Account Opening Videos👇👇👇👇

Wednesday, November 24, 2021

IDFC First bank Digital saving Account Full Benefits and charges details

 IDFC First bank Digital saving Account Full Benefits and charges details


Introduction :


Saving Account ல் அதிகமான பயன்களை வழங்கும் IDFC first bank digital saving account ல் நமக்கு கிடைக்கும் ஏராளமான பயன்கள் மற்றும் அந்த வங்கியில் பிடித்தம் செய்யப்படும் கட்டண விபரங்களை இந்த பதில் பார்க்கலாம்.

மற்ற வங்கிகளை விடவும் அதிகமான Vouchar மற்றும் CashBack யை இந்த வங்கி வாரி வழங்குகிறது.


இப்போது இந்த வங்கியின் கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.

 Benefits of IDFC First bank digital Account :

Account ATM Card Benifits :

இந்த வங்கியில் நீங்கள் ஒரு digital saving account open செய்தால் உங்களுக்கு வழங்கப்படும் ATM Card ல் இரண்டு வகைகள் உள்ளது.

1. Visa Signature Card,
2. Visa Classic Card,

ஆகிய இரண்டு வகையான card களில் உங்களுக்கு எந்த விதமான card வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

1.இந்த வங்கியில் Account open செய்தால் உங்களுக்கு welcome bonus ஆக 250 ரூபாய் மதிப்புள்ள Voucher வழங்கப்படும்.

2.அடுத்து இந்த Account ல் இருந்து மற்றவர்களுக்கு முதல் முறையாக 2000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் பணம் அனுப்பினால் ரூபாய் 500 மதிப்புடைய vouchar வழங்கப்படும்.

3.உங்களின் idfc வங்கி Mobile Banking Application அல்லது NetBanking ல் இருந்து உங்களுடைய முதல் pill payment யை(குறைந்தது 1000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல் செலுத்த வேண்டும் )நீங்கள் அவ்வாறு செலுத்தும்போது உங்களுக்கு 250ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

4.அதே போன்று இந்த IDFC வங்கியின் UPI முறையை முறையை பயன்படுத்தி குறைந்தது 1000ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமான பணத்தை மற்றவர்களுக்கு அனுப்பினால் உங்களுக்கு 250 ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

5.இந்த வங்கியில் குறைந்தது 25000ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமான தொகையை fixed Deposit செய்தாலோ அல்லது RD Account open செய்து அதில் குறைந்தது 5000ரூபாய் deposit செய்தாளோ உங்களுக்கு 250 ரூபாய் Vouchar வழங்கப்படும்.


Benefits of a saving Account with a Visa Signature Debit Card :


1.முதல் pill payment இந்த Card யை பயன்படுத்தி குறைந்தது 1000ரூபாய்க்கு மேல் செலுத்தும்போது 250ரூபாய் மதிப்புள்ள Vouchar வழங்கப்படும்.



2. மாதம் தோறும் Book My show ல் படதிர்க்கான ticket யை முன்பதிவு செய்ய 250ரூபாய் cashback வழங்கப்படும்.

3. இந்த Card யை பயன்படுத்தி 20000ரூபாய் மற்றும் அதற்க்கு மேல் pill payment செய்யும்போது உங்களுக்கு 1000ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

4.whatsapp Banking Register செய்தால் உங்களுக்கு 250ரூபாய் மதிப்புடைய Vouchar வழங்கப்படும்.

5.இந்த card ல் unlimited ATM withdrawal இலவசமாக வழங்கப்படும்.

6. இந்த card பயன்படுத்தினால் Air Accident insurance 1கோடி வரையில் பெற முடியும்.

7. இந்த card யை பயன்படுத்துபவர்களுக்கு இலவச accident insurance 35லட்சம் வரையில் வழங்கப்படும்.


Benefits of a saving Account with a Visa Classic Debit Card :


1.மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே ATM machine ல் பணம் எடுக்க கட்டணம் இல்லை. அதற்க்கு மேல் எடுக்கும்போது கட்டண பிடித்தம் செய்யப்படும்.



2. ஒரு நாளைக்கு அதிகபற்றமாக 100000ரூபாய் வரையில் ATM ல் பணம் எடுக்க முடியும்.

3. ஒரு நாளைக்கு அதிகப்பற்றமாக 1.5லட்சம் வரையில் கட்டணம் செலுத்தவோ அல்லது burchar செய்யவோ முடியும்.

3.personal insurance தனிநபர் காப்பிடு 2லட்சம் வரையில் வழங்கப்படும்.


IDFC Account Open Benefits
:


1.இந்த வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் உங்களுக்கு Credit card, Loan வசதியை எளிதில் பெற முடியும்.

2.இந்த செவிங் கணக்கில் நீங்கள். வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு வட்டி மாதம் தோறும் வழங்கப்படும்.

3. இந்த வங்கியில் 5%வரையில் saving கணக்கிற்கு வட்டி வழங்கபடுகிறது.

4. Cheque book வசதியும் வழங்கபடுகிறது.

5.Net Banking, Mobile Banking, UPI, வசதிகளும் வழங்கபடுகிறது.

6. மற்றவர்களுக்கு பணம் அனுப்ப IMPS, RTGS, NEFT, ஆகிய வசதிகளும் வழங்கபடுகிறது.


Digital Account Fee and charges :


இந்த வங்கியில் கணக்கு துவங்கினால் monthly Maintanance Balance 25,000 ரூபாய் இருக்க வேண்டும்.

இந்த தொகைக்கு குறைந்தால் உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க படும்.

கட்டண விபரம் :


உங்களின் வங்கியில் மாத இருப்பு தொகை 20000 முதல் 25000 ரூபாய்க்கு கீழ் இருந்தால் 50ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

15000ரூபாய் முதல் 20000 வரையில் வைத்திருந்தால் 100ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.


 10000முதல் 15000 வரையில் வைத்திருந்தால் 150ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

5000ரூபாய் முதல் 10000ரூபாய் வரையில் இருந்தால் 200ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

5000ரூபாய்க்கும் கீழ் உங்களின் கணக்கில் பணம் இருந்தால் 400ரூபாய் கட்டணம் பிடித்தம் இருக்கும்.

இந்த வங்கியின் ATM card யை மற்ற நாடுகளில் பயன்படுத்தி பணம் எடுத்தால் 2%கட்டண பிடித்தம் இருக்கும்.
(Internationl ATM money withdrawal charges 2%)

Cheque Return charges 50ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

Tuesday, November 23, 2021

PF பணத்தை எடுக்காதிங்க EPFO மகிழ்ச்சயான அறிவிப்பு

 PF பணத்தை எடுக்காதிங்க  EPFO மகிழ்ச்சயான அறிவிப்பு 






Introduction :

தற்போது நமது EPFO ஆனது அணைத்து PF சந்தா தாரர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

அதன் படி உங்களின் pf கணக்கின் உள்ள pf பணத்தை எடுக்காமல் இருந்தால் அதிகமான வட்டியை பெற முடியுமாம்.

இதனை பற்றிய முழுமையான தகவளை தற்போது பார்க்கலாம்.

PF Interest Rate:


தற்போதைய நிதியாண்டான 2020 to- 2021 ல் நமது PF கணக்கிற்கு அதிகபற்றமாக 8.5% வரையில் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் அதிக வட்டியை வழங்கும் ஒரு மிக சிறந்த inversment என்றால் அது PF inversment மட்டுமே ஆகும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் 8.5% வட்டியை மேலும் அதிகரிக்க தற்போது EPFO முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது EPFO புதிய investment ல் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த investment ல் EPFO தனது சந்தா தாரர்களின் பணத்தை முதலீடு செய்கிறது என்பதை பார்க்கலாம்.

EPFO investment Details :



EPFO ஆனது நம்மிடம் இருந்து பெறப்படும் பணத்தினை எங்கேல்லாம் முதலீடு செய்கிறது எவ்வளவு முதலீடு செய்கிறது?

1.45% முதல் 50% பணத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

2.35% முதல் 45% பணத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

3.5% முதல் 15% பணத்தை அதிக லாபம் தரும் share market ல் முதலீடு செய்து வருகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள முதலீடுகள் (investment )மூலம் பெறப்படும் வட்டி மற்றும் லாபத்தில் இருந்து நமது PF கணக்கில் முதலீட்டு செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி வழங்கப்பட்டு வருகிறது .

New Investment plan on EPFO :


தற்போது PF பணத்திற்கு 8.5% வட்டி வழங்கபடுகிறது.

இந்த வட்டியை அதிகரிக்க கடந்த 19/11/2021 வெள்ளி கிழமையன்று ஒரு கூட்டம் நடத்த பட்டது அதில் புதிய inversment ல் முதலீடு செய்வது குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது .

அதன்படி EPFO முதலிட்டில் ஒரு 5% தொகையை மட்டும்( inversment trust )உள் கட்டமைப்பு நிறுவனங்களில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி power Grid என்கின்ற உள் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கூடிய முக்கிய நிறுவனமான Power grid inverstment trust நிறுவனகளில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு 5%தொகையை மட்டுமே inversment trust நிறுவனத்தில் inverst செய்வதன் மூலமாக மக்களின் பணத்திற்கு எந்த விதமான ஆபத்தும் அல்லது பெரிய அளவிலான பாதிப்பும் வராது.

EPFO inversment designation :



இது போன்ற inversment குறித்த முடிவுகளை FIAC ஆனது முடிவு செய்கிறது.

FIAC -Finance Inversment &Audit Committee

High Interest Rate :


இனி வரும் காலங்களில் உங்களின் pf பணத்தை எடுக்காமல் இருந்தால் உங்களுக்கு இதற்க்கு முன்பு கிடைத்த வட்டியை விடவும் அதிகமான வட்டியை லாபமாக பெற முடியும்.

தற்போது EPFO மேற்கொண்டுள்ள புதிய inversment காரணமாக நமது pf கணக்கில் கிடைக்கும் வட்டி அதிகமாகும் எனவும் EPFO அறிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு வட்டி உயர்வு ஏற்படும் என்பது குறித்து குறிப்பிடவில்லை.