இந்த பதிவில் 2022-ம் ஆண்டு முதல் நிதி நிலையில் வர இருக்கின்ற மாற்றங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
நம் நாட்டின் நிதி நிலைமையை சரி செய்யவும் அதனை மேம்படுத்தும் வகையிலும் புதிய அறிவிப்புகளை RBI வெளியிட்டுள்ளது.
இதனால் குழு முறையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகும் நீங்கள் இந்த ஆண்டில் நிதி நிலையில் வரவுள்ள மாற்றங்களையும் வரவேற்க தயாராக இருங்கள்.
இத்தகைய மாற்றங்கள் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நிதி நிலைமை என்றாலே ஏற்றமும் இறக்கமும் இருக்க தான் செய்யும்.
அந்த வகையில் வரவுள்ள மாற்றங்கள் மக்களுக்கு ஏற்றவாறு இருக்குமா என்பது புதிய ஆண்டில் தான் தெரிய வரும்.
இத்தகைய நிதி நிலைமை மாற்றங்கள் அனைத்து தரப்பினரையும் பாதிக்காதவாறு அமைந்தால் சிறப்பாக இருக்கும். இத்தகைய மாற்றங்கள் கீழேயுள்ள துறைகளில் இருக்கலாம்.
· வங்கி துறை
·
தபால் துறை
·
EPFO
·
ஜிஎஸ்டி
·
எரிவாயு
1.வங்கி துறை
· Debit Card / Credit Card
Debit Card மற்றும் Credit Card பயன்படுத்தி பணம் செலுத்துதல் மற்றும் பணபரிவர்த்தனையில் இன்னும் பாதுகாப்பான சில மாற்றங்கள் வர உள்ளது.
பணம் பரிவர்த்தனை பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஒவொரு முறையும் வாடிக்கையாளர்கள் Debit Card அல்லது Credit Card பயன்படுத்தி பணம் செலுத்தும் போது தங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
அல்லது டோக்கன் முறையில் பாதுகாப்பான சேவையை பெறும் வகையில் மாற்றம் வரவுள்ளது.
· ATM கட்டணம் உயர்வு
பெரும்பாலான மக்கள் தங்களின் அவசர தேவைக்கு பணம் எடுப்பதற்காக ATM-களையே நாடுகின்றனர். தற்போது ATM களில் பணம் எடுப்பதிலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களோ அந்த வங்கி ATM களில் ஒரு மாதத்திற்கு 5முறை பணம் எடுக்க முடியும்.
மெட்ரோ சிட்டியில் மற்ற வங்கி ATM களில் 3முறையும், மெட்ரோ அல்லாத சிட்டிகளில் ATM களில் 5 முறையும் பணம் எடுக்க முடியும்.
2. GST Update
ஜனவரி 1 2022 முதல் GST கட்டணம் உயர உள்ளது. அதாவது காலணிகள் மற்றும் ஆடைகளின் விலை உயரலாம். அதன்படி காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான GST விகிதம் 5% லிருந்து 12% ஆக உயர உள்ளது.
ஜனவரி 2022 முதல் ஆடைகள், ரெடிமேட் ஆடைகள், காட்டன், போர்வைகள் போன்ற ஜவுளி பொருட்களின் GST விகிதம் 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காலணிகளுக்கான GST விகிதம் 5% லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த GST விகிதம் 1000 ரூபாய் வகையிலான காலணிகளுக்கு பொருந்தும்.
3.EPFO சந்தாதாரர்கள் நாமினி இணைத்தல்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருப்பின் உங்களின் Nominee தேர்வு செய்வது கட்டாயம்.
இதனால் நீங்கள் உங்களின் அவசர தேவைக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் உரிமைக்கோரல் செய்ய முடியும். இதுவரை Nominee இணைக்காமல் இருப்பின் டிசம்பர் 2021க்குள் இணைப்பது சிறந்த பயனைக் கொடுக்கும்.