How to Edit and change the PF Account nominee details in online
Introduction :
தற்போது நமது PF கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்வது என்பது கட்டாயமாக்க
பட்டுள்ளது.
நாம் ஒவ்வொருவரும் நமது PF கணக்கில் நமது குடும்பத்தில் உள்ள ஒரு நபரையோ அல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட நபரையோ nominee யாக இப்பதன் மூலம் நாம் ஏதாவது ஒரு சந்தர்ப்ப
சூழ்நிலையில் எதிர் பாராத நிலையில் இறக்க நேரிட்டால் நமது PF பணம், இலவச
Insurance தொகை மற்றும் PF pension பணம் எளிதில் நமது குடும்ப உறுப்பினர்களால்
Claim செய்ய முடியும்.
மாறாக நாம் ஒரு nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் அந்த insurance
தொகையை எடுக்க முடியாத ஒரு நிலை ஏற்படும்.
How to change PF Nominee
இப்படி நாம் நமது PF கணக்கில் இணைக்கும் nominee ஆனது ஒரு முறை இணைத்து
e sign verify செய்துவிட்டால் அந்த nominee யாக இணைத்த நபரின் சுய
விபரங்களில் ஏதாவது தவறு இருந்தால் அதை எப்படி திருத்தம் செய்வது அல்லது அந்த
நபருக்கு பதிலாக வேறு ஒரு நபரை எப்படி மாற்றம் செய்வது என்கின்ற குழப்பம்
பலரிடமும் உள்ளது.
அதை பற்றி பார்க்கலாம்.
நாம் நமது PF கணக்கில் ஒரு நபரை Nominee யாக இணைத்து esign verify செய்துவிட்டால்
அதன் பின்னர் அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை
மறுபடியும் திருத்தம் செய்ய முடியாது.
மறுபடி சரியான விபரங்களை கொடுப்பதற்கு நீங்கள் உங்களின் UAN யை login செய்து
அதில் nominee என்கின்ற தேர்வினை தேர்வு செய்து அதில் Add new
என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களுக்கான Nominee யை மறுபடியும் புதிதாக
பூர்த்தி செய்யவும்.
அவ்வாறு பூர்த்தி செய்யும்போது ஏற்கனவே நீங்கள் தேர்வு செய்திருந்த அதே நபரை
மறுபடியும் இணைக்கலாம் அப்படி இணைக்கும் போது ஏற்கனவே செய்த தவறுகளை மறுபடியும்
செய்யாமல் சரியான விபரங்களை பதிவு செய்து Nominee யை இணைக்கவும்.
மேலும் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபரை Nominee ஆக தேர்வு செய்ய விரும்பினாலும்
(உதாரணத்திற்கு 2நபர்கள் nominee என்றால் )புதிதாக Nominee யை add செய்யும்போது
sharing %யை ஒரு நபருக்கு 50% ஆக தேர்வு செய்யவேண்டும்.
அவ்வாறு தேர்வு செய்யும் போது Nominee ஆனா இரண்டு நபருக்கும் 50%தொகை கிடைக்கும்.
PF கணக்கை பொறுத்த வரையில் நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்து e sign verify
செய்த அந்த நபரின் சுய விபரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் மறுபடியும் அதை
Re edit செய்ய முடியாது. நீங்கள் மறுபடியும் புதிதாக மட்டுமே ஒரு nominee யை
இணைக்க முடியும்.
Default PF Nominee :
PF கணக்கை பொறுத்தவரையில் நீங்கள் இறுதியாக எந்த நபரை Nominee யாக தேர்வு
செய்கிறீர்களோ அந்த நபர் மட்டுமே Default Nominee யாக கருத்தப்படுவார்.
ஏற்கனவே இணைத்திருந்த Nominee கணக்கில் எடுத்துக்கொள்ள படமாட்டாது.
புதிதாக இணைக்கப்பட்ட Nominee உங்களின் PF கணக்கின் தற்போதைய Nominee யாக
கணக்கில் கொள்ளப்படும்.
பழைய நபரின் தகவல்களை நீங்கள் delete செய்யவும் முடியாது.
இது உங்களின் புதிய Nominee யை எந்த விதத்திலும் பாதிக்காது.
No comments:
Post a Comment