Monday, July 11, 2022

PF கணக்கில் 2022 -2023 நிதியாண்டர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?

நமது PF கணக்கில் உள்ள பண்ணாதீர்க்கான வட்டி எப்போது கிடைக்கும்?


Introduction :


தற்போது PF ல் கணக்கு வைத்திருக்கும் அணைத்து சந்தா தாரர்களுக்கும் இருக்கும்  ஒரு மிகப்பெரிய கேள்வி தற்போதய நிதியானண்டிற்க்கான வட்டி எப்போது வழங்கப்படும் என்பதே.

 இதை பற்றிய தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்ப்போம்.


When i get the PF Interest:


தற்போது 
நமது PF கணக்கில் இந்த நிதியாண்டிற்க்கான( 2022-2023)வட்டி 8.1% என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வட்டி தொகையை இதுவரையில் எந்த ஒரு PF சாந்த தாரர்களுக்கும் இன்னும் epfo வழங்கவில்லை.

தற்போது வந்துள்ள தகவளின்படி இந்த நிதியாண்டிற்க்கான வட்டியை epfo ஆனது இந்த ஜூலை மாத இறுதிக்குள் 6கோடி PF சாந்த தாரர்கள் அனைவருக்கும் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் சிலர் அவர்களின் PF தொகையை இந்த நிதியாண்டின் வட்டி நமது கணக்கில் deposit செய்யப்படுவதற்குள் claim செய்தால் என்னவாகும் என்கின்ற பயமும் உள்ளது ?

 எனக்கு வட்டி கிடைக்குமா?
அல்லது வட்டி எப்போது எனது கணக்கில் deposit ஆகும்.

வட்டியை எனது கணக்கில் வரவு வைப்பதற்குள் claim செய்தால் வட்டி கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமும் உள்ளது .

இதற்கான பதில் :

நீங்கள் உங்களின் pf பணத்தை எப்போது வேண்டுமென்றாலும் claim செய்யலாம். வட்டிக்காக காத்திருக்க தேவை இல்லை.

 நீங்கள் இந்த நிதியாண்டின் வட்டி உங்களுக்கு கிடைப்பதற்குள் claim செய்தால் உங்களின் pf பணத்திர்க்கான வட்டியும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை சேர்த்து உங்களின் வங்கியில் செலுத்தப்படும்.

Pf கணக்கில் உள்ள முழு பணத்தையும் நீங்கள் claim செய்தால் உங்களுக்கு இந்த நிதியாண்டிற்கான வட்டி தொகை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்து அதையும் சேர்த்தே உங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இதுவே pf கணக்கின் விதியும் கூட.

ஒருவேளை இந்த நிதியாண்டிற்கான வட்டி எவ்வளவு என்று முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில் நீங்கள் pf கணக்கில் உள்ள தொகையை claim செய்தால் என்னவாகும்?

இந்த நிதியாண்டிற்க்கான வட்டி எவ்வளவு என்பதை தீர்மானம் செய்வதற்கு முன்னர் நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள முழு PF தொகையையும் claim செய்தால் கடந்த நிதியாண்டில் எவ்வளவு தொகை வட்டியாக நிர்ணயம் செய்யப்பட்டதோ அந்த தொகையானது இந்த நிதியாண்டிலும் கணக்கீடு செய்யப்பட்டு அந்த வட்டி தொகையை உங்களுக்கு வழங்கப்படும் இதுதான் PF கணக்கின் விதி.

இதுபோன்ற பயனுள்ள தகவளை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணைய தள பக்கத்தை பின்தொடரவும்.

No comments:

Post a Comment