Sunday, June 23, 2019

Pf claim settled but amount not received in bank account

அணைத்து வாசகர்களுக்கும் இருக்கும் சந்தேகம் எனக்கு pf claim settle என்று status காட்டுகிறது ஆனால் யனது  வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை ஏன் ?



எதனால் பணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்பதை இந்தப்பதிவில் பார்போம் ,


முதலில் உங்களின் pf பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை நீங்கள் ஆன்லைன் வழியாக  பதிவு செய்து குறைந்தது 20 முதல் 30 நாட்களுக்குள் உங்களின் கோரிக்கைக்கான தற்போதைய நிலை (status )என்ன என்பதை pf இணையதளத்தில் பார்க்கலாம் ,






அப்போது உங்களின் தற்போதைய நிலை (status )settle யன கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடாது . அந்த settle என்கின்ற நிலை (status )வந்த பின்னர் குறைந்தது 3 முதல் 5 நாட்களுக்குள் உங்களின் வங்கி கணக்கிற்க்கு வந்துவிடும்  என்பதே அதன் பொருள்  அதுவரை காத்திருக்கவேண்டும் .


அனால் நமது வாசகர்கள் அனைவரும் settle என்கிற status வந்தவுடனே பணம் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் யன எண்ணுகிறார்கள்  அது தவறு .


அதிகப்பற்றமாக ஒரு வாரம் வரை காத்திருக்கலாம் அதற்க்கு மேல் வராமல் இருந்தால்  உங்களின் pf அலுவகத்தை தொடர்பு கொண்டு அதன் தற்போதைய நிலையை பற்றி தெரிந்துகொள்ளவும் .




இன்னும் ஒருசிலருக்கு உங்களின் claim status தற்போதைய நிலை Under process யன இருந்தால் உங்களின் தகவல்கள்  சரிபார்க்க பட்டுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்    .

அடுத்த status வரும்வரை காத்திருக்கவும் .



Thursday, June 20, 2019

EPF Name Correction Online Process and get PF Name Correction

அணைத்து வாசகர்களுக்கும் வணக்கம்  .

இந்த பதிவில் pf கணக்கில் உங்களின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை ஆன்லைன் வழியாக மாற்றம் செய்ய முடியும் .எப்படி மாற்றம் செய்யவேண்டும் என்பதை இந்தப்பதிவில் பாப்போம் .





முதலில் உங்களின்ஆதரில் உங்களின் பெயர் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது உங்களின் pf கணக்கில் உங்களின் பெயர் எப்படி உள்ளது  .என்ன தவறு உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .


அடுத்தது உங்களின் பெயரை உங்களின் ஆதாரில் உள்ளதுபோல உங்களின் pf கணக்கிலும் மாற்றம் செய்யவேண்டும் .இப்போது எப்படி மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம் .


முதலில் உங்களின் (uan) pf கணக்கினை login செய்துகொள்ளுங்கள் இப்போது manage >basic details >கிளிக் செய்துகொள்ளுங்கள்



அடுத்ததாக கீழே உள்ளதுபோல பக்கம் தோன்றும் இந்த பக்கத்தை உங்களின் ஆதரில் உள்ளதைப்போல பூர்த்தி செய்துகொள்ளுங்கள்






Adhaar No,
Name,
DOB,
Gender,
Select employer,


இவைகள் அனைத்தையும் உங்களின் ஆதரில் உள்ளதுபோல பூர்த்தி செய்து பின்னர் கீழே கொடுக்கப்பட்ட update என்கிற செயலியை கிளிக் செய்யவும் .




இதன் பின்னர் உங்களில் பெயர் மாற்றத்திற்க்கான வேண்டுகோள் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனத்திற்கு செல்லும் அவர் அதை ஏற்றுக்ககொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும் .



பின்னர் அவர் ஒப்புதல் அளித்தபின்னர் உங்களின்  பெயர் மாற்றத்திற்க்கான வேண்டுகோள் உங்களின் pf அலுவலகத்துக்கு செல்லும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும் .



இந்த இருவரும் ஒப்புதலுக்கு பின்னர் உங்களின் தவறான பெயர் மாற்றம்  சரிசெய்யப்படும் .
உங்களின் பெயர் மாற்றம் சரிசெய்த பின்னர் உங்களுக்கு sms மற்றும் Email வழியாக தெரிவிக்கப்படும் .



   

Wednesday, June 19, 2019

PF Amount Claim Rejected. what is reason?

அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம். இந்தப்பதிவில் என்னென்ன காரணத்திற்க்காக  நமது pf claim   rejected ஆகி இருக்கலாம் என்பதை பார்போம்.

1,   உங்களுடைய ஆதார் கார்டுல் உள்ள தகவல்கள் உங்களின் pf கணக்கில்          உள்ள தகவல்களுடன் ஒத்துபோவில்லை என்றால் கட்டாயம் உங்களின்            claim நிராகரிக்கப்படும் .

(உதாரணத்திற்கு unverified aadhar யன உங்களின் ஆதார் எண் பக்கத்தில்  குறிப்பிடப்பட்டிருந்தால் இது முதல் காரணம் )





2,   அடுத்து உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் தவறாக                        குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களின் claim நிராகரிக்கப்படும் . (bank account            number ,IFSC Code ) 

3,    நீங்கள் உங்களின் pf முழு தொகையையும் எடுப்பதற்கு பான் எண்                       அல்லது படிவம் 15ஜி இணைக்கவில்லை என்றாலும் உங்களின் claim                     நிராகரிக்கப்படும் .

(பான் எண் unverified யன் பான் எண்ணின் அருகில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பான் எண் இணைக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படும் )இதனாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .


5வருடங்களுக்கு முன்னதாக உங்களின் pf  பணத்தை எடுக்க வேண்டுமென்றால் கட்டாயம் உங்களின் பான் எண்ணினை இணைந்திருக்க வேண்டும் இல்லை என்றால் படிவம் 15ஜி இணைந்திருக்க வேண்டும் இவை இரண்டும் இல்லாத பற்றத்தில் claim நிராகரிக்கப்படும் .




4,    ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடத்திற்கும் குறைவாக                   பணியில் இருந்து pf advance பணம் எடுக்க முயற்றிதாலும்                                             நிராகரிக்கப்படலாம் .


5,     ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து வெளியேறியபின்னர்                        குறைந்தது 3 மாதங்கள் எந்த பணியிலும் சேராமல் காத்திருக்க                              வேண்டும் அதன் பின்னர் claim  செய்வைத்து மிகவும் சரியானது .ஆனால்          அதற்க்கு மாறாக 3மாதங்களுக்கு முன்னதாக உங்களின் pf பணத்தை                எடுக்க முற்பட்டால் உங்களின் claim நிராகரிக்கப்படும் .reason >Less then six            month  இது போன்று வரலாம் .


6,     ஒருவர்  ஒரு நிறுவனத்தில் 6 மாதங்களுக்கும் குறைவாக                                              பணிபுரிந்திருந்து பின்னர் வெளியேறிய பின்னர் அவருடைய pf                              பணத்தை claim செய்ய முற்பட்டாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .

6-மாதங்களுக்கு குறைவாக பணியில் இருந்திருந்தால் உங்களின் pf பணத்தினை  அதற்க்கு அடுத்ததாக பணியில் சேரும் நிறுவனத்தின் மெம்பெர் id-க்கு அந்த பணத்தினை மாற்றம் செய்து பின்னர் எடுத்துக்கொள்ள முடியும் இதுவே சரியான வழியும் கூட .


7,   அடுத்தாக நீங்கள் pf அட்வான்ஸ் பணம் எடுக்கும்போது என்ன                                காரணத்திற்கு அட்வான்ஸ் பணம் எடுக்க எடுக்குறீர்கள் என்ற                                காரணத்தில்  அதற்க்கு  பொருத்தமற்ற காரணத்தை தேர்வு செய்தால்                உங்களின் claim நிராகரிக்கப்படும் .அதிகப்பற்றமாக illness என்ற                            காரணத்தை தேர்வு செய்தால் ஓரளவிற்கு பொருத்தமாகும் .


8,   அடுத்தது ஒருசிலருக்கு அவர்களின் pf பணத்தை claim செய்தால் Trust                    என்கிற error வரும் இப்படி error வந்தால் அவர்கள் அவருடைய pf பணத்தை        ஆன்லைனில்  claim செய்யமுடியாது மாறாக உங்களின் நிறுவனத்தில்                நேரடியாக சென்று உங்களின் pf பணத்தை claim செய்யவேண்டும் .


9,      உங்களின் pf கணக்கில் உங்களின் வங்கி கணக்கிற்கு பதிலாக வேறு                 ஒருவரின் வங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்திருந்தால் claim                         நிராகரிக்கப்படும் .


மேற்கூறப்பட்ட அனைத்தும் பொதுவாக claim நிராகரிக்க படுவதற்கான காரணங்கள் .






Monday, June 17, 2019

இனிமேல் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனம் மாறினாலும் UAN மாறாது ?ஒரே uan

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளின் படி  ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி  மற்றோரு நிறுவனத்தில் பணியில் சேரும் பொது அவர்களின் UAN மாறாது .






இதற்க்கு முன்னதாக ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் அவருக்கு புதிதாக பிஎப் கணக்கு துவங்கப்படும் .இதனால் நிறைய குழப்பம் , வேலை புழுக்கள் அதிகம் மற்றும் பழைய பிஏப் கணக்கை close செய்யவேண்டும்   .


இது போன்ற நிறைய காரணங்களால் . இந்த முறையானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது .




தற்போது நிலவரப்படி ஒருவர் எத்தனை நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் அவருடைய uan மாறாமல் இருக்கும் மட்டும் மெம்பெர் மட்டும் மாறிக்கொண்டிருக்கும் .


மேலும் பழமையான முறையில் ஒருவரின் பிஏப் எண்ணினை மறந்து விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ மறுபடியும் அந்த கணக்கினை கண்டுபிடிக்க முடியாது .




தற்போது உள்ள முறைப்படி ஒருவர் அவருடைய uan or பிஏப் என்னுடன் அவருடைய ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

இதன் படி ஆதார் என்னை இணைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் ஒருவரின் uan மறந்துபோனாலும் அவருடைய UAN எண்ணினை வைத்து கண்டுபிடிக்க முடியும் ?


மேலும் ஒரே UAN ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை மட்டும் உங்களின் பிஏப் கணக்கினை( KYC ) சரிபார்த்தல் போதுமானது .



அதுமட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பொது ஒரு மெம்பெர் ID-ல் உள்ள பிஏப் பணத்தை  இன்னொரு மெம்பெர் ID-க்கு எளிதில்  மாற்றிக்கொள்ளவும் முடியும் .




தற்போது  உள்ள நிலவரப்படி பிஏப் வட்டிவிகிதம்  2018-2019    8.65% வழங்கபடுகிறது .




Saturday, June 15, 2019

PF money withdrawal without tax form 15G upload Online easy way upload online

அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம் இந்தப்பதிவில் pf பணத்தை எந்த ஒரு tax இல்லாமல் அனைவராலும் எடுக்க முடியும் என்பதை பார்க்கலாம் .






உங்களின் PF பணத்தை  எடுக்கும் பொது நீங்கள் உங்களின் pf கணக்குடன் பாண் என்னை இணைக்க வில்லை என்றால் உங்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் .

இதற்க்கு மாற்று வழி என்று பார்த்தால் படிவம் 15ஜி என்கிற படிவத்தை பூர்த்தி செய்து உங்களின் pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.


              ஆனால் ஒருசிலரால் அவர்களின் pf அலுவலகத்தை நேரில் சென்று படிவத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர் .இப்போது அதற்க்கு ஒரு தீர்வு ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது .


அது என்ன தீர்வு என்றால் இந்த படிவம் 15ஜி யை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாகவே  படிவத்தை பதிவேற்றம் செய்யலாம் .


மேலும் இதே கேள்வியை நமது வாசகர்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தனர் ஆன்லைன் வழியாக படிவத்தை பதிவேற்றம் செய்யலாமா ?என்று இப்போது அந்த வசதியை pf இணையதளத்தில் கொண்டுவந்துள்ளனர்

இதன் மூலமாக உங்களின் படிவத்தை ஆன்லைனிவழியாக பதிவேற்றம் செய்து உங்களின் pf பணத்தை எடுக்கும் பொது பிடிக்கப்படும் வரி பிடித்ததை தவிர்க்க முடியும்.




                             👉👉👉   CLICK TO DOWNLOAD FORM 15G



Form 15H Download Link :






இந்த படிவத்தை எப்படி பதிவேற்ற வேண்டும் என்றால் உங்களின் PF  பணத்தை  எடுக்க உங்களின் படிவத்தை தேர்வு செய்ய வேண்டிய பக்கத்தில் இந்த படிவம் 15ஜி பதிவேற்றம் செய்யப்படுவதற்கான தேர்வுகள் தோன்றும் அதனை கீழே படத்தில் காணலாம் .




உங்களின் pf form 19 or form 10c  இவற்றில் எதையாவது ஓன்று தேர்வு செய்த பின்னர் இந்த படிவத்தை பதிவேற்றம் செய்வதற்கான பக்கம் தோன்றும் .

இந்த படிவம் 15ஜி  யை பூர்த்தி செய்து அதனை scan செய்து  PDF வடிவில் மாற்றம் செய்து அதனை 1MP அளவில் இருக்கும்படி செய்துகொள்ளவும் .இந்த படிவத்தை தயார் செய்து வைத்துக்கொண்டு பின்னர் pf பணத்தை எடுப்பதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளவும் .

                                👉👉👉   CLICK TO DOWNLOAD FORM 15G





ந்த படிவத்தை பதிவேற்றம் செய்யும் பக்கம் தோன்றும் போதும் உங்களின் படிவத்தை பதிவேற்றவும் .


அனால் இந்த வசதி அனைவருக்கும் சாத்தியமாகுமா என்படி உறுதியல்ல .மேலும் கூடி விரைவில் இந்த வசத்தி அனைவருக்கும் சாத்தியமாகும் .

   



Saturday, June 1, 2019

How to withdrawal PF amount without any Tax full details

அணைத்து வாசகர்களுக்கும் வணக்கம் இந்த பதிவில்

1.pf கணக்கில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்படுகிறது ?
2.PF அட்வான்ஸ் பணம் எடுத்தாள் வரி பிடித்தம் செய்யப்படுமா? யாருக்கு  எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் ?
3.வரி பிடித்தம் செய்வதை எவ்வாறு தவிர்க்கலாம் ? 


Don't click this link : https://za.gl/EObGgO2

1.pf கணக்கில் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்படுகிறது ?


                         உங்களின் pf சேமிப்பு பணத்தின் அளவு மொத்தகத்தில் 50,000 மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் பான் எண் அல்லது படிவம்  15ஜி சமர்பிக்காத நிலையிலும் 5 வருடங்கள் நிறைவு செய்யாத நிலையிலும் pf பணத்தினை எடுக்கும் பொது   உங்களின் pf பணத்தில்  இருந்து   34.65%(35%)வரி பிடிக்கப்படும்   .

உங்களின் pf  சேமிப்பு தொகை 49999 க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் பான் எண் அல்லது படிவம்  15ஜி சமர்பிக்காத நிலையிலும் 5 வருடங்கள் நிறைவு செய்யாத நிலையிலும் pf பணத்தினை எடுக்கும் பொது உங்களின் pf பணத்தில்  இருந்து 10% மட்டுமே வரி பிடித்தம் செய்யப்படும் .


2.PF அட்வான்ஸ் பணம் எடுத்தாள் வரி பிடித்தம் செய்யப்படுமா? யாருக்கு எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் ?


                         நீங்கள் பணியில் இருக்கும் போது  உங்களின் pf கணக்கில்  இருந்து 50000க்கும் அதிகமான அட்வான்ஸ் பணம் எடுத்தாளும் கூட  உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தம் செய்யப்படாது.

ஆனால் நிறுவனத்தில் பணியில்  இருந்து விலகிய பின்னர்   உங்களின் pf கணக்கில்  இருந்து அட்வான்ஸ்   பணம் 50000க்கு மேல் எடுக்கும் போது பான் எண் அல்லது படிவம்  15ஜி சமர்பிக்காத நிலையிலும் 5 வருடங்கள் நிறைவு செய்யாத நிலையிலும் pf பணத்தினை எடுக்கும் பொது உங்களின் pf பணத்தில்  இருந்து   34.65%(35%)வரி பிடிக்கப் படும்  .


 உங்களின் pf  சேமிப்பு தொகை  49999 க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் பான் எண் அல்லது படிவம்  15ஜி சமர்பிக்காத நிலையில் உங்களின் pf பணத்தில் அட்வான்ஸ் பணம் எடுக்கும்போது  உங்கள் pf பணத்தில்  இருந்து 10% மட்டுமே வரி பிடித்தம் செய்யப்படும் . 



                     மேலும் உங்கள் pf கணக்கில் 50000க்கு மேல் சேமிப்பு தொகை இருக்கும் பட்சத்தில்  பான் எண் அல்லது படிவம்  15ஜி சமர்பிக்காத நிலையில் உங்களின் pf பணத்தில் அட்வான்ஸ் தொகை எடுப்பதற்கான விண்ணப்பம் நிராகரிக்கவும் படலாம் .

Don't click this link : https://za.gl/EObGgO2

3.வரி பிடித்தம் செய்வதை எவ்வாறு தவிர்க்கலாம் ? 


                                   
                                                      pf சேமிப்பு தொகையை எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் எடுப்பதற்கு முதல் வழி .

1.உங்களை pf  சேமிப்பு தொகையை  குறைந்தது 5 வருடங்களுக்கு முன்னதாக எடுப்பதை தருவிக்கும் சிறந்தது .

5 வருடங்கள் நிறைவு செய்தபின்னர் உங்களின் pf பணத்தை எடுக்கும் பொது பான் எண் இணைக்க தேவை இல்லை எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .இது முதல் வழி .


2.உங்களின் pf சேமிப்பு தொகையை 50000க்கு அதிகமாக இருக்கும் பொது கண்டிப்பாக பான் எண்ணினை உங்களின் pf கணக்கில் இணைந்திருக்க வேண்டும் ,

பான் எண்ணினை இணைத்து அதனை verify செய்திருக்க வேண்டும் . இப்படி செய்திருந்தால் வரி பிடித்தம் இருக்காது .


3.உங்களின் பான் எண்ணினை உங்களின் pf கணக்கில் இணைக்க முடியவில்லை எனில் அதற்க்கு பதிலாக படிவம் 15ஜி -இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்களின் pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி சமர்ப்பிக்கும் போதும் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .இந்த மூன்று வழிகளில் வரி பிடித்தம் செய்வதை தவிர்க்க முடியும் .





                           உங்களின் சந்தேகங்களை கீழே பதிவிடவும்



                                                                    நன்றி

BY
           -Manikandan