Wednesday, November 30, 2022

How to link Aadhar with EB Number online full details in Tamil

 ஆதார் என்னுடன் மின்னிணைப்பு எண்ணினை ஒன்லைன் வழியாக இணைப்பது எப்படி .









Introduction 


தற்போது நமது தமிழ்நாடு அரசானது மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு அவர்களின் மின்னிணைப்பு என்னுடன் அவர்களின் ஆதார் எண்ணினை வரும் டிசம்பர் 31 க்குள் இணைக்க வேண்டும் என்று தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது .


இதன்படி எப்படி நமது மின்னிணைப்பு என்னையும் ஆதார் என்னையும் எப்படி இணைக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம் .


How to link Aadhar with EB Number online


ஆதார் எண்ணை உங்களின் மின்னிணைப்பு என்னுடன் இணைக்க முதலில் 
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தலைத்திற்கு செல்லவும் .



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல இனைய பக்கம் தோன்றும் .



இப்போது உங்களின் மின்னிணைப்பு எண்ணினை Service Connection Number  என்கிற இடத்தில் பதிவு செய்யவும் .

அதனை பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER  என்கிற தேர்வினை click செய்யவும் .


இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் .
அதில் உங்களின் service number மற்றும் ஏற்கனவே நீங்கள் உங்களின் வீடுகளுக்கு மின்னிணைப்பு வாங்கும்போது நீங்கள் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைந்திருந்தால் உங்களுக்கு தொலைபேசி எண் காண்பிக்கப்படும் .


இப்போது உங்களிடம் அதில் காண்பிக்கப்படும் தொலைபேசி எண்  இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் YES என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

உங்களிடம் அந்த தொலைபேசி எண் இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லையென்றால் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

NO என்பதை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் .அதில் உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு  ஒரு One Time Password அந்த கட்டத்தில் பதிவு செய்து Validate Otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 
அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் 



இப்போது  நீங்கள் யாருடைய  மின்னிணைப்பு எண்ணினை யாருடைய ஆதார்  எண்ணுடன் இணைக்கப்போறீர்கள் என்பதை தேர்வு செய்யுயவேண்டும் .


Owner 

மின்னிணைப்பு எண்ணானது எந்த ஒரு நபரின் பெயரில் உள்ளதோ அந்த நபரையே Owner என்று குறிப்பிடுகிறோம் .

இப்போது மின்னிணைப்பு எந்த நபருடைய பெயரில் உள்ளதோ அதே நபருடைய ஆதார் எண்ணினை நீங்கள் இணைக்க விரும்பினால் Owner என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .


Tenant 

இப்போது நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் வாடைக்கு குடியிருக்கும் நபருடைய ஆதார் எண்ணினை மின்னிணைப்பு எண்ணுடன் இணைக்க விரும்பினால் Tenant என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Owner but service connection name not transferred

அடுத்தது மின்னிணைப்பு யாருடைய பெயரில் உள்ளதோ அந்த நபரின் மகன், மகள் ,மனைவி அவருடைய அப்பா அம்மா ,அல்லது அவருடைய ரத்த சொந்தக்கால் யாராவது ஒருவரின் ஆதார் எண்ணினை இணைக்க விரும்பினால் Owner but service connection name not transferred என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .

அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் எந்த நபருடைய ஆதார் எண்ணினை இணைக்க உள்ளீர்களா அவருடைய ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் .


அதனை தொடர்ந்து ஆதார் எண்  பதிவு செய்த அந்த நபரின் பெயரை அவருடைய ஆதரில் உள்ளதுபோல பதிவு செய்யவும் .


இப்போது Browes என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆதார் புகைப்படமானது அதிகப்பற்றமாக  500KB அளவுக்குள் இருக்க வேண்டும் .


அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவேண்டும் இறுதியாக அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் மற்றும் மின்னிணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பதிவு உறுதி செய்யப்படும் .


இதன் பின்னர் உங்களின் ஆதார் என்னும் உங்களின் மின்னிணைப்பு என்னும் இணைவதற்கு அதிகப்பற்றமாக 48 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் .இந்த 48 மணிநேரத்துக்கும் உங்களின் இணைப்பு உறுதி செய்யப்பட்டும் உங்களுக்கு SMS வழியாக உறுதி செய்யப்படும் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும் 

No comments:

Post a Comment