Showing posts with label Trending new. Show all posts
Showing posts with label Trending new. Show all posts

Saturday, November 23, 2024

PF Claim Rejected Reason in 2024 full details in Tamil

 PF Claim  விண்ணப்பித்தால் என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க படலாம் 2024


1.தவறான வங்கி கணக்கு எண் :

உங்களின் UAN இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கு எண்  அல்லது IFSC Code இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களின் Final Claim  நிராகரிக்கப்படும் .

2.Bank Cheque Leaf :

நீங்கள் Final Claim க்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் Upload செய்யும் Bank Cheque Leaf ல் உங்களின் பெயர் Print செய்யப்படாமல் இருந்தால் நிராகரிக்கப்படும் .

அதானால் Name Printed செய்யப்பட்ட Cheque Leaf மட்டுமே Upload செய்யவேண்டும் .

3.Bank Passbook Problem

 A.  நீங்கள் Final Claim  விண்ணப்பிக்கும்போது Upload செய்யும் Bank Passbook ல் உங்களின் உங்களின் பெயர் தவறாக print செய்யப்பட்டிருந்தால் Name Miss Mach  ஏற்பட்டு உங்களின் Claim நிராகரிக்கப்படும் .

B . உங்களின் Bank Passbook ல் print செய்யப்பட்ட Account No,IFSC Code,தெளிவாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும் ,

C.  உங்களின் Bank Passbook ல் Bank Manager sign இல்லாமல் இருந்தாலும் நிராகரிக்கப்படும் .

D . அதே போல உங்களின் Bank Passbook print ஒன்றிற்கு மேல்   மற்றோரு print   Printing செய்யப்பட்டிருந்தால் உங்களின் Claim நிராகரிக்கப்படலாம் 

4.Previous Company Transfer Pending 

நீங்கள் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனர்களில் பணிபுரிந்திருந்தால் அதனை இறுதியாக பணிபுரிந்த நிறுவனத்திற்கு Transfer  செய்யவேண்டும் அது Transfer  ஆன பின்னர் Claim செய்யவேண்டும் .

அதற்க்கு முன்னர் Claim செய்தால் உங்களின் Claim ஆனது நிராகரிக்கப்படும் .

5.Total PF Balance Above 50,000 (15G not upload) 

உங்களின் PF Account ல் உள்ள Employee & Employer Share ன் மொத்த தொகை 50,000க்கு அதிகமாக இருந்தால்  நீங்கள்  pan no மற்றும் Form 15G  Upload செய்யவேண்டும் .அப்படி நீங்கள் உப்லோஅது செய்யவில்லையென்றால் உங்களின் Claim நிராகரிக்கப்படும் .

6.Adhar Card Husband /Fathers Name Correction:

உங்களின் ஆதார் என்னை உங்களின் PF கணக்கில் இணைத்த பின்னர் உங்களுடைய  ஆதார் அட்டையில் அப்பா அல்லது கணவரின் பெயர் மாற்றம் செய்திருந்தால் உங்களின் Claim நிராகரிக்கப்படலாம் .

7.Claim PDF File Not Open:

உங்களின் Final Claim Application Form PDF File  சில நேரங்களில்  Technical Problem காரணமாக Open ஆகாமல் இருந்தால் நிராகரிக்கப்படும் .

8.Upload Bank Passbook or Cheque Leaf Not Clear

உங்களின் Upload Documents Bank Passbook (or) Cheque Leaf  தெளிவாக இல்லாமல் இருந்தால் நிராகரிக்கப்படும் .

9.Insfficient Service:

இறுதியாக வேலை செய்த  நிறுவனத்தில் போதிய Experience காலம் இல்லாமல் இருந்தாலும் நிராகரிக்கப்படும் .

10. Contribution Missing :

உங்களின் PF Account  ல் அணைத்து மாதங்களும் தவறாமல்  Contribution Deposit செய்யப்பட்டிருக்கவேண்டும் அவ்வாறு இல்லாமல் ஏதாவது ஓரிரு மாதங்கள் Contribution Deposit செய்யப்படாமல் இருந்தால் உங்களின் PF Claim நிராகரிக்கப்படும்  .

இதனை சரி செய்ய உங்களின் நீறுவனத்தில் Clarification Letter வாங்கி அதனை PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் (என்ன காரணத்திற்க்காக Contribution deposit செய்யவில்லை என்பதற்கு) அதன் பின்னர் மீண்டும் PF Claim க்கு Apply செய்யவேண்டும் .

11.Double Time Contribution Deposited:

அதேபோல உங்களின் PF Account ல் ஏதாவது ஒரு மாதம் இரண்டு முறை Contribution Deposite பட்டிருந்தாலும் உங்களின் PF Claim நிராகரிக்கப்படும் .

இதனை சரி செய்ய உங்களின் நீறுவனத்தில் Clarification Letter வாங்கி அதனை PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் (என்ன காரணத்திற்க்காக Contribution இரண்டு முறை  deposit செய்யப்பட்டது என்று )அதன் பின்னர் மீண்டும் PF Claim க்கு Apply செய்யவேண்டும் .


13.Contribution Wrong Entry:

இதில் உதாரணமாக 9வது  மாதம் Deposited செய்யவேண்டிய Contribution பணத்தை தவறுதலாக Employer 10மாதம் என  குறிப்பிட்டு Deposited செய்யப்பட்டால் உங்களின் Claim  நிராகரிக்கப்படும் .

இதனை சரி செய்ய உங்களின் நீறுவனத்தில் Clarification Letter வாங்கி அதனை PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் (என்ன காரணத்திற்க்காக Contribution deposite செய்யவேண்டிய மாதத்தை தவறாக குறிப்பிட்டு  deposit செய்யப்பட்டது என்று )அதன் பின்னர் மீண்டும் PF Claim க்கு Apply செய்யவேண்டும் .


Wednesday, April 10, 2024

How to Find Your Forget PAN Card Number very simple method full details with Application Download Link

 How to Find Your Missing PAN Card Number


Introduction :




இந்த பதிவில் உங்களின் மறந்துபோன பான் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம் .

இந்த முறையை  பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய  பான் எண்ணினை கண்டுபிடிக்க உங்களிடம் ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன்  இணைக்கப்பட்ட தொலைபேசி எண்  கையில் இருப்பது கட்டாயம் .


இந்த முறையில் உங்களின் பான் எண்ணினை மிகவும் எளிமையான முறையில்  கண்டுபிடிக்கலாம் அதற்க்கு இந்த Application ல் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவும் .

இப்போது எப்படி கண்டுபிடிப்பது ?என்பதை பார்க்கலாம் .

How to Find My PAN Number :


இந்த முறையில் உங்களின் பான் எண்ணினை கண்டறிய ஒரு Application யை நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டும் அதன் மூலமாகவே உங்களின் பான் எண்ணினை கண்டறிய முடியும் .

Application பத்திவிரக்கம் செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


Application Download Link :





Application யை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை ஓபன் செய்துகொள்ளவும் .
அதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .



இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்துகொள்ளவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .

இப்போது உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் பெயரை  உங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணில் இருக்கும்படி பதிவு செய்துகொள்ளவும் .



மேலே கூறப்பட்டதுபோல அணைத்து தகவலக்கையும் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் PAN NUMBER SHOW என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


அதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பண்டறிவதற்கான கட்டணம் ரூபாய் 100யை செலுத்த வேண்டும் இதற்க்கு நீங்கள் phonepe gpay paytm போன்ற எந்த ஒரு application மூலமாகவும் நீங்கள் செலுத்தலாம் .


கட்டணம் செலுத்திய பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .


இப்போது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் அனுப்பப்படும் அதனை அதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் நிரப்பவும் .


இத்துடன் உங்களின் பான் எண்ணானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இதனை எப்படி பார்க்கவேண்டும் என்றால் .


இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அம்புகிரி குறிப்பிடும் அந்த தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் பான் கார்டு எண்ணானது உங்களுக்கு காண்பிக்கப்படும் கீழே கொடுக்கப்பட்டதுபோல .


Application Download Link :




மேலும் இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட விடியோவை click செய்யவும் .

Monday, May 17, 2021

Free Free free Airtel 49 rupees plan totally free airtel new offer

 Airtel NEW OFFER 49Rupees Plan totally Free


Introduction :

தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் தற்போது airtel நிறுவனமாத்து ஒரு இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Free 49Rupees Prepaid plan :

தற்போதை airtel நிறுவனமானது கொரோனா நோயினால் வேலை இழந்து கஷ்டப்படும் நளிவடைந்த prepaid வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில்  49 ரூபாய் மதிப்புள்ள Airtel ரிச்சார்ஜ்  திட்டத்தை தனது 5.5கோடி வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளது.



இதே போன்று 79 ரூபாய்க்கு recharge செய்யும் வாடிக்கையாளருக்கு அந்த plan -ல் கிடைக்கபெரும் அணைத்திலும் இரட்டிப்பு பயனை பெற முடியும்.
v>

உதாரணமாக நீங்கள் 79 ரூபாய்க்கு Recharge செய்தால் உங்களுக்கு கிடைக்க பெரும் talktime மற்றும் data அளவுகள் இரட்டிப்பாக கிடைக்கும் .

Jio Free Offer :



இதற்க்கு முன்பாக jio நிறுவனமானது தனது prepaid வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் மாதத்திற்கு 300 நிமிட இலவச அழைப்புகளை வழங்கியது.

அதிக பற்றமாக ஒரு நாளைக்கு 10 நிமிடம் இலவசமாக எந்த ஒரு நெட்ஒர்க்ற்கும் பேசிக்கொள்ள முடியும்.
 இதனை போன்று தற்போது airtel நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு சில Offer களை வழங்க உள்ளது.


49Rupees Free Offer Plan full Details:


Airtel வாடிக்கையாளர்கள் எந்த ஒரு Recharge ம் செய்யாமல் 49 ரூபாய் மதிப்பிலான plan யை இலவசமாக பெறலாம்.

இந்த 49 ரூபாய் plan ல் 38 ரூபாய் மதிப்பளவில் talktime மற்றும் 100 MP Free data வையும்  28 நாட்களுக்கு வழங்குகிறது.

மேலும் இந்த திட்டம் prepaid வாடிக்கையாளருக்கு மட்டுமே பொருந்தும்.
நடப்பு வாரத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் airtel நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thursday, February 25, 2021

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் உயர்வு அதிருப்தியில் மக்கள்

மாதத்தில் மூன்றாவது முறையாக சமையல் எரிவாயு விலை 100 ரூபாய்  உயர்வு   அதிருப்தியில் மக்கள் 








Introduction :

இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல்  எரிவாயுவின் விலை தொடர்ந்து 3வது  முறையாக 25ரூபாய் உயர்த்தப்பட்டு இந்த மாத்தில் மட்டும்  100 ரூபாய்  உயர்வை  சந்தித்துள்ளது .

Full Details :

LPG சமையல் எரிவாயுவின் விலையானது தொடர்ச்சியாக விலை  உயர்வு  பெற்று தற்போது மேலும்  25 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது  .கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு cylinder விலையானது ரூபாய் 785 ஆக இருந்த நிலையில தற்போதயா சமையல் எரிவாயு cylinder விலையானது  810 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .



தற்போது  நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விளை மாறுவதுபோல சமையல் எரிவாயுவின் விளையும் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது மட்டும்  மாநியமில்லாத  LPG Cylinder விலையானது 810 ரூபாய்யை தொட்டுள்ளது .


இந்த தொடர்ச்சியான விலைஉயர்வு  சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை  பெரிதும் பாத்தித்துள்ளது .


கடந்த டிசம்பர் மாதத்தில் மாநியமில்லாத cylinder விலையானது 710 ரூபையாக விலை நிர்ணயம்  செய்யப்பட்ட நிலையில்  டிசம்பர் மாதம் 4ம் தேதி ரூபாய் 25 அதிகரித்து ரூபாய் 735 ஆக விலையுயர்வு செய்யப்பட்டது  .அதன்   பிப்ரவரி மாதம் 15ம் தேதி  ரூபாய் 50 அதிகரித்து LPG Cylinder  விலையானது ரூபாய் 785ஆக  உயர்த்த பட்டது. .



அதன் பின்னர் தற்போது இந்த மாநியமில்லாத சிலிண்டர் விலையானது மேலும் ரூ 25 அதிகரித்து 810ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது .

இவ்வாறு தொடர்ந்து cylinder விலையானது அதிகரித்தால் மக்கள் மறுபடியும்  பழைய வாழ்க்கைக்கே திரும்ப செல்லவேண்டிய நிலை வரலாம் .

 இது போன்ற தொடர் விளையேற்றம் இருந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும்   பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படும். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை அடியோடு மறந்துவிட கூடும் .




Saturday, October 17, 2020

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் புதிய வழிமுறைக்கு தளர்வு

 ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் கைரேகை முறைக்கு  தளர்வு தமிழக அரசு பூர்த்தியை அறிவிப்பு


Introduction :

தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்கிற விதிமுறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரேஷன் பொருட்களை வாங்குவதில் அரசு ஒரு புதிய முறையை அறிவித்திருந்தது. 

என்னவென்றால் ரேஷன் பொருட்களை வாங்க அந்த ரேஷன் அட்டையில் உள்ள நபர் ஒருவர் கைரேகை வைக்க வேண்டும் அது verify ஆனால் மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று . 



தற்போது பயன்பாட்டில் உள்ள  இந்த முறையால் மக்கள் உணவு பொருட்களின் வாங்குவதில் பேரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் பலருக்கும் கைரேகை முறையானது பயனளிக்காமல் போகும் நிலையும் உள்ளது என்பதால் இந்த முறையில் தற்போது தமிழக அரசு புதிய தளர்வினை அறிவித்துள்ளது. 

Full Details :


தற்போது இந்தியா  முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை முறையானது கடைபிடிக்க பட்டு வருகிறது. 

இந்த முறையில்  மக்கள் பலரும் பொருட்களை வாங்க அதிகமான கால தாமதம் ஏற்படுவதாகவும் பலருக்கு அவர்களின் கை ரேகையானது ஒத்துப்போகவிலை என்பதாலும் அவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களின் வழங்க படாமல்  திரும்பி அனுப்பப்படுவதாகவும்  அதிகமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது . 

மேலும் இந்த முறையினால்  ஒரு நாளைக்கு 20 நபர்களுக்கு மட்டும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது நடை முறையில் இருக்கும் இந்த கைரேகை முறையானது மக்கள் பலருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுப்பதாக கருதுகிறார்கள். 

இத்தனை கருத்தில் கொண்டு தற்போது ரேஷன் கடைகளில் பின்பற்றப்படும் கைரேகை முறையில் தளர்வினை அறிவித்துள்ளது. 



இதன் படி கைரேகை  முறையானது பயனளிக்கவில்லை என்பதற்காக மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் தலைவர் திரு. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும் கைரேகை முறை பயனளிக்காத  நிலையில் பழைய நடைமுறையில் இருந்த முறையினை பின்பற்றி உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. 

மேலும் இந்த கைரேகை முறையில் உள்ள தொழில் நுட்பங்களை மேம்படுத்துவரையில் பழைய முறையில் உணவு பொருட்களை வழங்கவும் உத்தரவிட பட்டுள்ளது. 

இதனால் தற்காலிகமாக இந்த biometric கைரேகை முறையானது நிறுத்த படுவதாகவும் தமிழக அரசு அரிவித்துள்ளது. 

தற்போது  அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்கனவே உள்ள  ரேஷன் அட்டையை scan செய்யும் முறை அல்லது ஆதார் அட்டையை scan செய்யும் முறை அல்லது Mobile OTP முறை இதில் ஏதாவது ஒரு முறையினை பின்பற்றி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது.