Saturday, October 17, 2020

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் புதிய வழிமுறைக்கு தளர்வு

 ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவதில் கைரேகை முறைக்கு  தளர்வு தமிழக அரசு பூர்த்தியை அறிவிப்பு


Introduction :

தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்கிற விதிமுறைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது ரேஷன் பொருட்களை வாங்குவதில் அரசு ஒரு புதிய முறையை அறிவித்திருந்தது. 

என்னவென்றால் ரேஷன் பொருட்களை வாங்க அந்த ரேஷன் அட்டையில் உள்ள நபர் ஒருவர் கைரேகை வைக்க வேண்டும் அது verify ஆனால் மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று . 



தற்போது பயன்பாட்டில் உள்ள  இந்த முறையால் மக்கள் உணவு பொருட்களின் வாங்குவதில் பேரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் பலருக்கும் கைரேகை முறையானது பயனளிக்காமல் போகும் நிலையும் உள்ளது என்பதால் இந்த முறையில் தற்போது தமிழக அரசு புதிய தளர்வினை அறிவித்துள்ளது. 

Full Details :


தற்போது இந்தியா  முழுவதும் ரேஷன் கடைகளில் கைரேகை முறையானது கடைபிடிக்க பட்டு வருகிறது. 

இந்த முறையில்  மக்கள் பலரும் பொருட்களை வாங்க அதிகமான கால தாமதம் ஏற்படுவதாகவும் பலருக்கு அவர்களின் கை ரேகையானது ஒத்துப்போகவிலை என்பதாலும் அவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களின் வழங்க படாமல்  திரும்பி அனுப்பப்படுவதாகவும்  அதிகமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது . 

மேலும் இந்த முறையினால்  ஒரு நாளைக்கு 20 நபர்களுக்கு மட்டும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது நடை முறையில் இருக்கும் இந்த கைரேகை முறையானது மக்கள் பலருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுப்பதாக கருதுகிறார்கள். 

இத்தனை கருத்தில் கொண்டு தற்போது ரேஷன் கடைகளில் பின்பற்றப்படும் கைரேகை முறையில் தளர்வினை அறிவித்துள்ளது. 



இதன் படி கைரேகை  முறையானது பயனளிக்கவில்லை என்பதற்காக மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படாமல் இருக்க கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் தலைவர் திரு. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும் கைரேகை முறை பயனளிக்காத  நிலையில் பழைய நடைமுறையில் இருந்த முறையினை பின்பற்றி உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. 

மேலும் இந்த கைரேகை முறையில் உள்ள தொழில் நுட்பங்களை மேம்படுத்துவரையில் பழைய முறையில் உணவு பொருட்களை வழங்கவும் உத்தரவிட பட்டுள்ளது. 

இதனால் தற்காலிகமாக இந்த biometric கைரேகை முறையானது நிறுத்த படுவதாகவும் தமிழக அரசு அரிவித்துள்ளது. 

தற்போது  அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்கனவே உள்ள  ரேஷன் அட்டையை scan செய்யும் முறை அல்லது ஆதார் அட்டையை scan செய்யும் முறை அல்லது Mobile OTP முறை இதில் ஏதாவது ஒரு முறையினை பின்பற்றி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. 

No comments:

Post a Comment