Thursday, October 29, 2020

எடப்பாடி அரசு அதிரடி உத்தரவு மாதம் ரூ. 3000 வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்

 மாதம் ரூ. 3000 வழங்குவதற்கான புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர். 




Introduction :

தற்போது தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் இளைஞர்களுக்கான ஒவ்வொரு மாதமும்  ரூ. 3000 வழங்கும் புதிய திட்டத்தை துவங்கி  வைத்தார். 

Full Details :

தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும்  சட்ட கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள் பலரும் முழுமையான வழக்கறிஞர்கள் ஆவதற்கு  குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். 

அவர்கள் முழுமையான வழக்கறிஞர்கள் ஆவதற்கு தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அப்போதுதான் அவர்களுக்கு பார் கௌன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழை பெற முடியும். 

 அதன் பின்னர் அவர்கள் யாராவது ஒரு மூத்த வழக்கறிஞரிடம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் அவ்வாறு 3ஆண்டுகள் அனுபவம் பெற்ற பின்னரே ஒரு இளநிலை வழக்கறிஞர் ஆக செயல்பட முடியும். 

மொத்தத்தில் முழுமையான இளjநிலை வழக்கறிஞர் ஆவதற்கு  குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். சில நபர்கள் குடும்ப வறுமையிலும் தன்னை ஒரு இளநிலை  வழக்கறிஞர் ஆக மாற்ற முற்படும்போது அவர்களுக்கு போதுமான பண வசதி இருக்காது. அதுபோன்ற வறுமையில் வாடும் இளைஞர்களின் நலனை  கருத்தில் கொண்டு அவர்களுக்கு 2 ஆண்டுகள் மாதம் மாதம் ரூ. 3000 வழங்க அரசு புதிய திட்டம் ஒன்றை தொங்கியுள்ளது. 

இதன்படி சட்ட கல்லூரியில் பயின்று வெளிவரும் இளைஞர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 3000 வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கு இளைஞர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உதவி தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . 

No comments:

Post a Comment