Tuesday, October 6, 2020

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, திருத்தம் செய்வதற்கான ஆவணங்களின் பட்டியல் வெளியீடு

ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, ஆகிய தகவல்களை திருத்தம் செய்வதற்கான ஆவணங்களின்  பட்டியல் வெளியீடு



Introduction :


தற்போது நமது ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட நமது பெயர், பிறந்த தேதி, மற்றும் முகவரி ஆகிய தகவல்களில் ஏதாவது தவறு இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கான புதிய ஆவணங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த ஆவணக்களை பயன்படுத்தி என்னென்ன தகவல்களை திருத்தம் செய்யலாம்  என்பதை இப்போ பார்க்கலாம். 



பின்வரும் ஆவணங்களை பயன்படுத்தி நமது தகவல்களை நாம் இ சேவை மையத்திற்கு சென்று திருத்தம் செய்துகொள்ள முடியும். 

மொத்தம் 45வகையான ஆவணங்களை பயன்படுத்தி நம்மால்  நமது தகவல்களை திருத்திக்கொள்ள முடியும் எனவும் uidai அறிவித்துள்ளது. 

பெயரில் திருத்தம் செய்வதற்கு (proof of Identity )


1.பாஸ்போர்ட், 
2.ரேஷன் அட்டை, 
3.பான் அட்டை, 
4.வாக்காளர் அடையாள அட்டை, 
5.Driving licence, 

முகவரி திருத்தம் செய்வதற்கு (Proof of Address )


1.பாஸ்போர்ட், 
2.வங்கி ஸ்டேட்மென்ட், 
3.வங்கி பாஸ்புக், 
4.ரேஷன் அட்டை, 
5.அஞ்சலக சேமிப்பு கணக்கு ஸ்டேட்மென்ட், 
6.வாக்காளர் அடையாள அட்டை, 
7.Driving licence, 
8.மின்கட்டண ரசீது, 
9.தண்ணீர் கட்டண ரசீது, 
10.எரிவாயு இணைப்பு ரசீது , 
11, வீட்டு வாடகை ரசீது, 
12.வாடகை வீட்டிற்க்கான ஒப்பந்த சான்றிதழ், 


பிறந்த தேதி திருத்தம் செய்ய (Proof of DOB )


1.பிறப்பு சான்றிதழ், 
2.பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், 
3.பாஸ்போர்ட், 
4.மதிப்பெண் அட்டை (mark sheet ), 
5.SSLC Certificate, 

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணக்களை பயன்படுத்தி உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை திருத்தம் செய்துகொள்ளலாம். 




6 comments:

  1. PAN எண்ணையும் Proof of DOB ஆக இணைத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. Thala enakku konjam doubt irukku thala unka number illa any social id kidaikuma thala

    ReplyDelete
    Replies
    1. Brother instagram vaanka vaanka unka doubt a anka share pannunka bro reply panren

      Delete