PF Account new update Pf bulk transfer Exempted to un-exempted
Introduction :
தற்போது நமது pf கணக்கில் புதிய ஒரு மாற்றம் (update ) கொண்டுவரப்பட்டுள்ளது,
அதை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
New update :
Exempted PF Amount Transfer to Un-exempted PF
அதாவது தற்போது கொண்டுவரப்பட்ட update படி இனிமேல் trust PF கணக்கில் உள்ள
PF பணத்தை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் EPFO கணக்கிற்கு நம்மால்
Transfer செய்ய முடியும்.
இதற்க்கு முன்பு வரையில் நம்மால் trust PF கணக்கில் உள்ள pf பணத்தை அந்த
நிறுவனத்தில் பணியில் இருந்து விலகியதும் எடுக்க மட்டுமே முடியுமே தவிர EPFO
கணக்கிற்கு transfer செய்ய முடியாது. மற்ற trust கணக்கிற்கு மட்டும் transfer
செய்ய முடியும்.
நீங்கள் பணிபுரியும் நிறுவனமானது ஒரு trust pf நிறுவனமாக இருந்தால் இதற்க்கு
முன்பு வரையில் pf பணத்தை எடுக்க மட்டுமே செய்திருப்பீர்கள் இனிமேல் எடுக்க தேவை
இல்லை.
அதற்க்கு பதிலாக நீங்கள் வேறு நிறுவனத்தில் பணியில் சேரும்போது அந்த நிறுவனம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் epfo pf செலுத்தும் நிறுவனமாக இருந்தாலும் அந்த
நிறுவனத்தின் கணக்கிற்கு உங்களின் பழைய trust pf பணத்தை transfer செய்துகொள்ள
முடியும். இவ்வாறு transfer செய்வதால் உங்களின் பணம் சேமிக்கப்படுகிறது.
இப்படி Transfer செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
1.மத்திய அரசின் கீழ் இயங்கும் EPFO ல் அதிகமான வட்டி வழங்கப்படுகிறது,
2.உங்களின் மொத்த PF பணத்தையும் நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் ஆன்லைன்
வழியாக உங்களால் Claim செய்துகொள்ள முடியும்,
3.உங்களின் இருப்பு தொகை எவ்வளவு என்பதை எப்போது வேண்டுமானாலும் நீங்களே
ஆன்லைன் வழியாக தெரிந்துகொள்ள முடியும்.
4.உங்களுக்கு வட்டி எவ்வளவு வழங்கப்பட்டது என்பதையும் வட்டி செலுத்த
பட்டதா? இல்லையா? என்பதையும் நீங்களே தெரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment