PF Pension பணத்திற்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்தது எவ்வளவு நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
Introduction :
தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு குழப்பம் நாம் PF Pension பணத்திற்கு
விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்தது எத்தனை வருடம் ஒரு நிறுவனத்தில்
பணியில் இருந்திருக்க வேண்டும்? என்பதுதான்.
மற்றோரு சந்தேகம் மாதாந்திர Pension பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால்
எவ்வளவு நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்? என்பதுதான். இரண்டு விதமான pension
படிவங்கள் online ல் காண்பிக்கப்படுவது அனைவருக்கும் ஒரு குழப்பத்தை
ஏற்படுத்துகிறது . அவைகளை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
Pension Type :
Pension னில் இரண்டு வகை உள்ளது அவை
1.Form 10C,
2.Form 10D,
1.Form 10c :
Form 10c என்பது நமது pension பணம் முழுவதையும் ஒரே முறையில் முழுவதுமாக
Claim செய்வதற்கான ஒரு படிவம் ஆகும்.
மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதியில்லாத நபர்கள் அனைவரும் 10c
pension பணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
2.Form 10D :
உங்களின் பணியனுபவம் 9.5ஆண்டுகள் அல்லது அதற்க்கு மேல் உள்ளவர்கள் மாதாந்திர
pension பணத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் 10D என்கிற படிவத்தை
பூர்த்தி செய்யவேணும்.
இந்த மாதம் விண்ணப்பித்தால் அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதாந்திர
pension பணம் வர தொடங்கிவிடும்.
நீங்கள் 10c படிவத்தை விண்ணப்பிக்க கூடாது.
Pension withdrawal Minimum Eligibility :
ஒருவர் PF pension பணத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அந்த நபர் குறைந்தது
7 மாதங்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அதற்கான ஊதியத்தை
பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் குறைவான மாதங்கள் மட்டும் பணியில் இருந்திருந்தால் நீங்கள் pension
பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாதவராக கருத படுவீர்கள் .
7 மாதங்களுக்கும் குறைவாக ஊதியம் பெற்றிருந்தால் அவர் pension
பணத்திற்கு விண்ணப்பிக்கலாம் ஆனால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்க படுவது
உறுதி.
நீங்கள் படிவம் 19 மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர் 10c விண்ணப்பிக்க தகுதி
இல்லாதவராக கருத படுவீர்கள். நீங்கள் 10c விண்ணப்பித்தாலும் உங்களின் Claim
நிராகரிக்கப்படும்.
உங்களின் நிராகரிப்புக்கு காரணம் கீழே கொடுக்கப்பட்டது போல
காண்பிக்கப்படும்.
இது தவிர நீங்கள் இரண்டு நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் ஒரு நிறுவனத்தில்
6மாதங்களும் மற்றோரு நிறுவனத்தில் 3மாதங்களும் பணிபுரிந்திருந்தால் அந்த
இரண்டு நிறுவனத்தின் pf கணக்குகளையும் இணைப்பதன் மூலமாக உங்களின் மொத்த
பணியனுபவம் 9மாதமாக கணக்கிடப்படும் அப்போது நீங்கள் படிவம் 10c pension
பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர் நீங்கள் இப்போது 10c
விண்ணப்பித்தால் உங்களுக்கு நீங்கள் பணி புரிந்த இரண்டு நிறுவனத்தின் pension
பணமும் கிடைத்துவிடும்.
Monthly pension Eligibility :
நீங்கள் மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள்
குறைந்தது 9.5ஆண்டுகள் ஓன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்திலோ பணி
புரிந்திருக்க வேண்டும்.
9.5ஆண்டுகளுக்கும் குறைவாக பணிபுரிந்திருந்தால் நீங்கள் மாதாந்திர pension
பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதியில்லாதவராக கருதப்படுவீர்கள்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 6ஆண்டுகளும் மற்றோரு நிறுவனத்தில் 4ஆண்டுகளும்
பணிபுரிந்திருந்தால் அந்த இரண்டு கணக்குகளையும் இணைப்பதன் மூலமாக உங்களின் மொத்த
பணி அனுபவம் 10ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
நீங்கள் பணியில் இருந்து நின்றபின்னர் நீங்கள் படிவம் 19 மட்டும் விண்ணப்பித்து
பெற முடியும்.
Pension படிவம் 10D யை நீங்கள் உங்களின் வயது 58யை நிறைவு செய்த பின்னர்
நீங்கள் online வழியாக விண்ணப்பிக்கலாம் அல்லது Pf அலுவலகம் மூலமாகவும்
விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் விண்ணப்பித்த அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதாந்திர pension
வழங்கப்படும்.
இதுபோன்ற PF கணக்கு தொடர்பான அனைத்து விதமான தகவல்களை உடனடியாக பெற்றிட நமது
இணையதளத்தை பின்தொடரவும்.
No comments:
Post a Comment