Wednesday, October 14, 2020

My claim has been rejected and no reason has been provided by EPFO What does it mean

Introduction :


நாம் PF பணத்தை Claim செய்யும்போது பல்வேறு பட்ட காரணத்திற்க்காக நமது PF Claim ஆனது நிராகரிக்கப்படுகிறது .இதில் ஒருசிலருக்கு என்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடாமல் இருக்கும் ,பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு  அவர்களின் PF Claim நிராகரிப்புக்கான காரணம் குறிப்பிட பட்டிருக்கும் .



இப்போது என்னென்ன காரணகளுக்கு உங்களின் claim நிராகரிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

1.pf claim rejected member name not printed on cheque:

பெரும்பாலான PF Claim நிராகரிப்புக்கு காரணம் அவர்கள் PF பணத்தை Claim செய்யும்போது அவர்கள் பதிவேற்றும் ஆவணம் (Documents)தான் .

  • நீங்கள் வங்கியின் passbook யை பதிவேற்றம் செய்திருந்தால் பெரும்பாலும் நிராகரிக்க படும் .
  • நீங்கள் வங்கியின் காசோலையை பதிவேற்றம் செய்தும் நிராகரிக்கப்பட்டால் நீங்கள் பதிவேற்றம் செய்த வங்கியின் காசோலையில் உங்களின் பெயர் ஆனது print செய்யப்படாமல் இருக்கும் .
அல்லது
  •  உங்களின் வங்கி காசோலையில்  உங்களின் பெயர் தவறாக print செய்யப்பட்டிருக்கலாம் ,
உதாரணமாக உங்களின் UAN kyc ல் உங்களின் பெயர்  இருப்பதுபோன்று உங்களின் வங்கி காசோலையில் print செய்யப்படாமல் இருக்கலாம் .இப்படி இருந்தாலும் உங்களின் Claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .


2.PF claim rejected due to father name mismatch

  • அடுத்தபடியாக உங்களின் PF Claim  நிராகரிப்புக்கு முக்கிய காரணம் உங்களின் PF கணக்கில் உங்களின் தந்தை அல்லது கணவரின்  பெயர் தவறாக குறிப்பிட பட்டிருந்தால் கட்டாயம் உங்களின் PF Claim  நிராகரிக்கப்படும் .

இதனை உங்களின் UAN  Login செய்து அதில் உங்களின் Profile பக்கத்தை திறந்தாள் உங்களின் தந்தை அல்லது கணவர் பெயர் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும் .


3.PF Claim Rejected Due to Date of Joining /Leaving Dose not match with Company record :

  • உங்களின் நிறுவனத்தில் உங்களின் DOJ அல்லது DOE தேதி இதில் ஏதாவது ஓன்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களின் Claim  நிராகரிக்கப்படும் .
இதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால் உங்களின் PF Passbook யை திறந்து அதில் உங்களுக்கு இறுதியாக எப்போது contribution Credit செய்யப்பட்டதோ அதே மாதம் உங்களின் DOE பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் சரி என்று அர்த்தம் ,

மாறாக வேற ஒரு மாதம் குறிப்பிட பட்டிருந்தால் உங்களின் DOE தேதி தவறு என்று அர்த்தம் .


அதேபோன்று உங்களின் DOJ தேதி தவறா அல்லது சரியா என்பதை தெரிந்துகொள்ள உங்களின் DOJ தேதிக்கு முன்னர் உங்களின் PF Passbook ல் Contribution  credit  செய்யப்பட்டிருந்தால் உங்களின் DOJ தேதி தவறு என்று அர்த்தம் .


4.PF  claim rejected due to incomplete Bank details :

  • உங்களின் PF கணக்கின் KYC ல் நீங்கள் இணைத்திருக்கும் வங்கி கணக்கு எண் அல்லது IFSC Code இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தவறாக KYC ல் Save செய்திருந்தால் உங்களின் PF Claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .
இதற்க்கு நீங்கள் மறுபடியும் உங்களின் வங்கி கணக்கை உங்களின் UAN KYC ல் இணைக்க வேண்டும் .அப்படி இணைத்து Fully Digitally Approved ஆக வேண்டும் Approved ஆனா பின்னர் Claim செய்தால்  ஏற்றுக்கொள்ள படும் .


5.PF Claim rejected due to technical problem :

தற்போது நமது PF இணையதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைவதால் அடிக்கடி நமது PF இணையதளத்தில் Error ஏற்படுகிறது .அதுமட்டுமில்லாமல் Technical Problem தற்போது அதிகமாக ஏற்படுகிறது .

அதுபோன்று Technical  Error வரும் சமயங்களிலும்  நீங்கள் PF Claim-ற்க்கு  விண்ணப்பித்திருந்தால்  உங்களின் Claim நிராகரிக்கப்படும் ,

இதுபோன்று நிராகரிக்கப்பட்டால் நீங்கள் மறுபடியும் விண்ணப்பித்தால் உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ள படும் .

No comments:

Post a Comment