Wednesday, October 28, 2020

நவம்பர் 1 முதல் LPG விநியோகத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள்

நவம்பர் 1 முதல் LPG  விநியோகத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் 






Introduction :

நவம்பர் 1 முதல் LPG விநியோகம் மற்றும் அதன் விதி முறைகளில் பல விதமான மாற்றங்கள் வர போகிறது .இந்த பதிவை முழுமையா படித்து தெரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு மிகவும் முக்கியமான  தகவல் .




Full Detail :

தற்போது நமது LPG விநியோகத்தில் பல மாற்றங்கள் கொண்டுவர பட்டுள்ளது .அந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர போவதாகவும் கூறப்படுகிறது .அதில் முதலாவதாக 

1.LPG Cylinder விநியோகத்திற்கு OTP முறை கடைபிடிக்கப்படும் :

வரும் நவம்பர் 1 முதல் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் OTP முறையை கடை பிடிக்க போவதாக அறிவித்துள்ளது .இதன்படி இனிமேல் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணானது கட்டாயம் வேண்டும். OTP இல்லாமல் உங்களுக்கு சிலிண்டர் விநியோகம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த முறையானது சிலிண்டர் திருட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

2.தொலைபேசி எண் மற்றும் முகவரி மாற்றம் செய்திருந்தால் புதுப்பித்தல் மிகவும் அவசியம்  :

                          LPG வாடிக்கையார்கள் பலர் அவர்களின் தொலைபேசி எண்  மற்றும்  முகவரி மாற்றம் செய்திருந்தால் உடனே உங்களின் விநியோகஸ்தரிடம் தெரிவித்து உங்களின் தொலைபேசி எண்  அல்லது முகவரி மாற்றம் செய்திருந்தால் அதனை புதுப்பித்தல் அவசியம் .அவ்வாறு புதுப்பிக்காத  பற்றத்தில் உங்களுக்கான  சிலிண்டர்  விநியோகம் நிறுத்த படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது .

3.Indane LPG சிலிண்டர் Booking செய்வதற்கான தொலைபேசி எண் மாற்றம் :

தற்போது இன்டானே gas நிறுவனமானது சிலிண்டர் refilling  செய்வதற்கான தொலைபேசி எண்ணினை  நாடு ஒரே தொலைபேசி எண்ணாக மாற்ற திட்டமிட்டு தற்போது Gas Refilling செய்வதற்கான புதிய எண்ணினை  அறிமுகம் செய்துள்ளது .

இதன்படி  இனிவரும்  காலங்களில் Indane gas  வாடிக்கையாளர்கள் 7718955555 இந்த எண்ணினை பயன்படுத்தி உங்களின் சிலிண்டர் Refilling Booking  அறிவிக்கப்பட்டுள்ளது .

4.Cylinder விலை குறித்த அறிவிப்பு :


இனி வரும் காலங்களில் சிலிண்டர் Refilling செய்வதற்கான கட்டணத்தை அந்தந்த மாதத்தின் முதல் தேதியில்  அறிவிக்கப்படும் .அந்த கட்டணமே அந்த மாதத்தின்  இறுதிவரையில் வசூலிக்கப்படும் .

No comments:

Post a Comment