How to apply for Form 10D in Monthly pension Scheme full procedure
Introduction :
இந்த பதிவில் Monthly pension பணம் பெறுவதற்கு online ல் எப்படி
விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு என்னென்ன தகவல்கள் தேவை எந்த வழிகளிலெல்லாம்
விண்ணப்பிக்க முடியும் என்பதை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில்
பார்க்கலாம்.
PF Form 10D Monthly pension scheme :
நம்மில் பலருக்கும் online வழியாக மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்க
முடியுமா? என்கிற சந்தேகம் உள்ளது. மேலும் அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது
குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளது.
முதலில் நமது pf pension பணத்தை எப்படியெல்லாம் எடுக்க முடியும் என்று
பார்க்கலாம்.
நமது மாதாந்திர pension பணத்தை பெற நீங்கள் online மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்
அல்லது pf அலுவலகம் சென்று படிவத்தை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம்.
Online ல் விண்ணப்பிக்க Form 10D யை தேர்வு செய்து விண்ணப்பத்தினை
சமர்ப்பைக்க வேண்டும்.
நீங்கள் சாதாரணமாக Form 19 அல்லது Form 10c யை எப்படி online வழியாக
விண்ணப்பிக்கிறீர்களோ அதே போன்று தான் monthly pension பணத்திற்கும் விண்ணப்பிக்க
வேண்டும்.
Eligible for Monthly pension :
நீங்கள் மாதந்திர பென்ஷன் பணத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் குறைந்தது ஓன்று
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 9.5 ஆண்டுகள் அல்லது அதற்க்கு
அதிகமான வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே நீங்கள் மாதாந்திர pension
பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.
இந்த 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக நீங்கள் பணிபுரிந்திருந்தால் நீங்கள் மாதாந்திர
pension பணத்திற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லாவதவராக கருதப்படுவீர்கள்.
9.5 ஆண்டுகளுக்கு குறைவாக பணி புரிந்திருந்தால் நீங்கள் Form 10C யை தேர்வு
செய்து உங்களின் pension பணத்தை ஒரே முறையில் மொத்தமாக withdrawal
செய்துகொள்ள வேண்டும்.
உங்களுடைய வயது 58யை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
Required Documents for pension claim form 10D :
Monthly pension பணத்திற்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றால் நீங்கள் உங்களின் UAN
ல் ஒரு Nominee யை சேர்க்கவேண்டும் அவ்வாறு சேர்த்தால் மட்டுமே உங்களால் Form 10D
யை தேர்வு செய்ய முடியும்.
Nominee என்றால் உங்களின் இறப்புக்கு பின்னர் உங்களின் pension பணத்திற்கு
உரிமையுள்ளவர்.
மேலும் உங்களின் வயது 58யை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதற்க்கு குறைவாக
இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
Online ல் விண்ணப்பிக்க நீங்கள் உங்களின் UAN ல் இணைத்திருக்கும் வங்கி கணக்கின்
காசோலை கட்டாயம் வேண்டும் இவை இருந்தால் போதும் online ல் நீங்களே
விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் விண்ணப்பித்த அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதாந்திர
pension வழங்கப்படும்.
இந்த pension பணமானது உங்களின் UAN உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில்
நேரடியாக வரவு வைக்கப்படும்.
Monthly pension form 10D Apply using Offline method (using PF office) :
நீங்கள் online வழியாக விண்ணப்பிக்க தெரியாதவராக இருந்தால் நீங்கள் உங்களின் pf
அலுவலகத்திற்கு நேரடியாக சென்று படிவம் 10D யை பூர்த்தி செய்து அதனுடன்
nominee யை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும் அவ்வாறு செய்யும்போது உங்களின்
வங்கி பாஸ்புக் அல்லது வங்கியின் காசோலையை மற்றும் ஆதார் அட்டை கையில் எடுத்து
செல்வது அவசியம்.
இவ்வாறு விண்ணப்பித்தும் நீங்கள் மாதாந்திர pension பணத்தை பெற முடியும்.
When you submit the Life certificate :
நீங்கள் மாதாந்திர pension பெற விண்ணப்பித்த முதல் ஆண்டு மட்டும் Life Certificate submit செய்ய தேவை இல்லை.
இதன் பின்னர் அடுத்த வருடத்தில் இருந்து ஒரு ஒரு வருடமும் நீங்கள் Life certificate submit செய்ய வேண்டும் அவ்வாறு submit செய்தவர்களுக்கு monthly pension நிறுத்தப்படும்.
Life certificate யை நீங்கள் உங்களின் வங்கி அல்லது இ சேவா மையத்தில்
சமர்ப்பிக்கலாம்.
அப்படி சமர்ப்பிக்கும்போது உங்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படும்.
இது ஒரு ஒரு ஆண்டும் செய்ய வேண்டும் அப்போது தான் உங்களுக்கு pension பணம்
வழங்கப்படும்.
நீங்கள் உயிருடன் தான் இருக்கீர்கள் என்பதை உறுதி செய்வதற்க்கே இந்த life
certificate யை சமர்ப்பிக்க வலியுறுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment