PF கணக்கில் தகப்பனார் அல்லது கணவரின் பெயரில் தவறுகள் இருந்தால் Claim
Rejected ஆகுமா ?
Introduction :
நமது PF கணக்கில் நமது தகப்பனார் அல்லது கணவக்கரின் பெயரில் தவறுகள் இருந்தால்
பின் வரும் காலங்களில் நமது PF பணத்தை எடுக்கும்போது நமது PF நிராகரிக்கப்படுமா ?
என்கிற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது .அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
Problem 1 :
தற்போது பெண்களில் பலருக்கும் அவர்களின் PF கணக்கில் தகப்பனார் பெயரும்
அவருடைய ஆதார் அட்டையில் கணவரை பெயரும் இருக்கிறது .இது போன்ற தவறுகள் இருந்தால்
அவர்களுடைய PF பணத்தை Claim செய்யும்போது அவருடைய Claim ஆனது
கட்டாயம் நிராகரிக்கப்படும் .
ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை பெண்கள் பலரும் திருமணத்திற்கு முன்னர் தங்களது
தகப்பனாரின் பெயரை அவருடைய பணிபுரியும் நிறுவனத்தில் பதிவு செய்திருப்பார்கள்
அதன் பின்னர் திருமணம் ஆனால் பின்னர் அவர்களுடைய ஆதார் அட்டையில்
அவர்களுடைய தங்களது கணவரின் பெயரினை மாற்றம் செய்கிறார்கள் இதனால் அவருடைய ஆதார்
அட்டையில் உள்ள தகவல்கள் அவர்களுடைய PF கணக்கில் உள்ள தகவல்களுடன்
ஒத்துப்போவதில்லை .
இதனால் அவர்களுடய PF Claim ஆனது நிராகரிக்கப்படுகிறது .
Joint Declaration Form Download Link :
Solution :
இதுபோன்ற தவறுகளை சரி செய்வதற்கு உங்களின் PF கணக்கில் உங்களின் தந்தையின்
பெயருக்கு பதிலாக உங்களின் கணவரை பெயரை மாற்றம் செய்யவேண்டும் .
இதற்க்கு Joint Declaration Form யை பயன்படுத்தி மட்டுமே சரிசெய்ய முடியும்
.
அல்லது உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் கணவரை பெயருக்கு பதிலாக மறுபடியும்
உங்களின் தகப்பனார் அவர்களுடைய பெயரினை மறுபடியும் பதிவு செய்யவேண்டும் .
இதன் பின்னர் உங்களின் ஆதார் எண்ணினை மறுபடியும் உங்களின் UAN KYC ல் இணைக்க
வேண்டம் .
இந்த இரண்டு வழிகளில் எது எளிதாக உள்ளதோ அதனை பின்தொடரவும் .
Problem 2 :
இன்னும் சிலருக்கு ஆண் அல்லது பெண் இருபாலருக்கும் அவருடைய தகப்பனார் பெயர்
தவறாக இருந்தால் Join Declaration Form யை பயன்படுத்தி உங்களின் தவறுகளை
திருத்தம் செய்து கொள்ளவேண்டும் .