"height: 0px; text-align: left;">
PF பணத்தை Withdrawal செய்வது சரியானதா ?
Introduction :
நம்மில் பலரும் தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும்
பணிபுரிகிறோம் .இதில் பெரும்பாலான நிறுவனங்களில் PF பணபிடித்தம் செய்யப்படும் .
இப்படி பிடித்தம் செய்யப்படும் PF பணத்தின் நன்மைகள் என்ன ?எப்போது இந்த PF
பணத்தை எப்போது எடுக்க வேண்டும்? என்பது பற்றிய தகவல் யாருக்கும்
தெரிவதில்லை .பலரிடத்திலும் இந்த அறியாமை உள்ளது .
இதனால் பலரும் அவரவர் PF பணத்தை அவருடைய பனிக்காலம் முடிந்த உடனே withdrawal
செய்துவிடுகின்றார்கள் .
இந்த பதிவில்
- நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா?
- எதனால் நமது PF பணத்தை withdrawal செய்ய கூடாது ?
- நாம் நமது PF பணத்தை எடுக்காமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
- யாரெல்லாம் PF பணத்தை எடுக்கலாம் ?
1.நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா?
- நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா என்று கேட்டல் அது அவருடைய தனிப்பட்ட தேவைகளை பொறுத்தே குறிப்பிட முடியும் .
- நாம் நமது PF பணத்தை எடுக்காமல் இருப்பதால் நமக்கு அதிகமான வட்டி இலாபமாக கிடைக்கும் .
- ஆனால் நமது தேவையானது அதைவிட மிக முக்கியமானதாக இருந்தால் நாம் நமது தேவைகளை கருத்தில் கொண்டு நமது PF பணத்தை withdrawal செய்வது சரியே .
உதாரணமாக :
- நாம் அதிகமான கடன் தொல்லை இருக்கும் போது அல்லது வீடு மனை ,நிலம் வாங்க ,திருமணம் செலவிற்கு திடீரென ஏற்படும் மருத்துவ செலவிற்கு நமது PF பணத்தை withdrawal செய்வது மிகவும் சரியான தேர்வு தான்.
- இவை தவிர ஆடம்பர தேவையான Mobile phone வாங்க சுற்றுலா செல்வதற்கு நமது அனாவிசிய செலவிற்காக PF பணத்தை withdrawal செய்வது மிகவும் தவறு .
- ஒருவர் வீடு கட்டுவதற்கு அதிகமான வட்டிக்கு கடன் வாங்குவதை விட நமது PF பணத்தை withdrawal செய்வது அவருடைய கடன் தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் சரியான முடிவு ,ஏனெனில் 8.5% வட்டிக்கு ஆசைபட்டு 20% வட்டிக்கு கடன் வாங்குவது முட்டாள் தானம் .
- தற்போது நமது PF கணக்கில் 8.5% வட்டி மட்டுமே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது .
ஆதலால் நமது PF பணத்தை withdrawal செய்வது சரியா என்றால் அது
நமது தேவைகளை பொறுத்தது .
2.எதனால் நமது PF பணத்தை withdrawal கூடாது ? :
- தற்போது மற்ற சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் PF பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் மிக மிக குறைவு .
.
- நாம் ஏன் ? நமது PF பணத்தை withdrawal செய்ய கூடாது என்றால் PF என்பது நமது முதுமை காலத்தில் நம்மால் வேலை செய்ய முடியாத தருணத்தில் நமது அடிப்படை தேவைகளுக்கும் நமது மருத்துவ செலவிற்கும் பயன்படும் என்தற்காக டெபாசிட் செய்யப்படும் ஒரு சேமிப்பு ஆகும் .இதை நாம் தற்போதே withdrawal செய்து பயன்படுத்திவிட்டால் பின்வரும் காலங்களில் நமது சேமிப்பு என்பது பூஜியமாகவே இருக்கும் .
- இதனால் நாம் அடுத்தவர்களை நம்பி இருக்கும் ஒரு நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் .
- இதை விட முக்கியமாக தற்போது அனைத்து வங்கிகளிலும் நாம் சேமிக்கும் பணத்திற்கான வட்டி விகிதம் வெறும் 4 % மட்டுமே அது மட்டுமின்றி தற்போது அந்த வட்டிவிகிதமும் 3.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது .
- மேலும் Fixed Deposit செய்யும் பணத்திற்கான வட்டி விகிதமும் குறைவாகவே தற்போது வழங்கப்பட்டு வருகிறது .
- ஆனால் நமது PF கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் ஆனது 8.5% ஆக வழங்கப்பட்டு வருகிறது இது நமது வாங்கி சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியை காட்டிலும் 2மடங்கு அதிகம் ஆகும் .
- உங்களின் PF கணக்கில் குறைந்தது ஒரு இலச்சம் ரூபாய் இருக்கும் பற்றத்தில் நீங்கள் உங்களின் PF பணத்தை withdrawal செய்யமல் இருப்பது மிகவும் நல்லது .உங்களின் PF பணத்திற்கு ஆண்டுக்கு 8500ரூபாய் வரையில் வட்டி கிடைக்கும் .
தற்போது ஏற்பட்டுள்ள கொரோன நோய்த்தொற்றால் தற்போதைய
நிதிநிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் நீங்கள்
உங்களின் PF பணத்தில் மட்டுமே அதிகமான இலாபத்தை பெற முடியும் .
மற்ற சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை விட உங்களின் PF கணக்கில் உள்ள பணமானது
உங்களுக்கு அதிக வருவாயை ஈட்டி தரும் .
3.PF பணத்தை எடுக்காமல் இருப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் :
- அதிகமான வட்டியை இலாபமாக ஈட்ட முடியும் ,
- மற்ற சேமிப்பு கணக்குகளை விட அதிகமான வட்டி வழங்கப்படுகிறது ,
- இன்றய உங்களின் சேமிப்பு பின்வரும் காலங்களில் பலமடங்காக உங்களுக்கு கிடைக்கும் ,
- மற்றவர்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை ,
- முதுமைகாலத்தில் உங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் ,
- நீங்கள் பணி நிறைவு பெறும்போது உங்களின் கையில் ஒரு பெரிய சேமிப்பு தொகையானது இருக்கும் ,
- உங்களின் அடிப்படை தேவைகளை உங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியும் ,
- பணிபுரியும் காலங்களில் உங்களின் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது உங்களின் PF சேமிப்பு பணமானது உங்களின் குழந்தைகள் மற்றும் உங்களின் மனைவி ஆகியோரின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
4.யாரெல்லாம் PF பணத்தை withdrawal செய்யலாம் ?
- மருத்துவ செலவிற்கு ,
- வீடு வாங்க ,
- நிலம் வாங்க ,
- வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு ,
- குறுகிய காலம் மட்டுமே பணிபுரிந்திருந்தால் ,
- உங்களின் வயது முதிர்வு காலத்தில் ,
நம்மில் பலரும் ஒரு நிறுவனத்தில் 1 வருடம் அல்லது 2வருடங்கள் மட்டுமே பணிபுரிந்து
பின்னர் வேறு எந்த ஒரு நிறுவனத்திலும் பணியில் சேராமல் இருக்கும்
பற்றத்தில் உங்களுக்கு PF சேமிப்பும் என்பது மிகவும் குறைவாகவே
இருக்கும் .இதுபோன்றவர்கள் உங்களின் PF பணத்தை withdrawal செய்வது தவறில்லை
.
ஏன்னென்றால் காலப்போக்கில் அவர் அவருடைய PF எண் மற்றும் PF சேமிப்பு
என்பதை மறந்துவிடவும் கூடும் .இதனால் அவருடைய பணமானது யாருக்கும் பயனளிக்காமல்
போக கூடும் .
அதிகமான சேமிப்பு இருப்பவர்கள் அதை நம்பி withdrawal செய்யாமல் இருக்கும்
பற்றத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. அனால் ஒரு நிறுவனத்தில் 1 வருடத்திற்கும்
குறைவாக பணிபுரிந்திருந்தால் காலப்போக்கில் அதனை எடுக்க முடியாத ஒரு சூழல்
ஏற்படலாம் .
குறைந்தது 6 மாதங்கள் பணிபுரிந்திருந்தால் உங்களின் PF பணத்தை எடுக்க
முடியும் .நீங்கள் 6 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தால் உங்களின் பணத்தை
withdrawal செய்வது நல்லது .மீண்டும் வேறு நிறுவனத்தில் பணியில் சேர இருந்தால்
PF பணத்தை எடுக்காமல் இரண்டு கணக்கையும் இணைப்பது சிறந்தது .
GOOD
ReplyDelete..............எந்த மாதத்தில் பி.எப் இன்டரஸ் இ-பாஸ்புக்கில் வரவு வைக்கப்படும்..................
ReplyDeleteஅப்படி சரியா நேரத்தை நாம் சொல்ல முடியாது வட்டி விகிதம் எவ்வளவு என்பதை முடிவு செய்யும் வரை pf வட்டி கணக்கில் வரவு வைக்க படாது
DeleteHow to contact send mail id or mobile number
ReplyDeleteநான் முதலில் ஒரு நிறுவனத்தில் எட்டு(8)ஆண்டுகள் வேலை செய்தோன்.அங்கு PF பிடித்தம் செய்யப்பட்டது.பின்பு இரண்டாவது ஒரு நிறுவனத்தில் 20நாடகள் வேலை செய்தோன் அங்கு PF நம்பர் தரப்பட்டது ஆனால் வேலையில் இருந்து விலகியதால் PF பணம் செலுத்தவில்லை நான் இப்போது என் PF பணத்தை எவ்வாறு எடுக்க முடியும்? PF பணத்தை எடுக்க உதவி செய்யுங்கள்.அதற்கான feesஐ தருகிறோம். நன்றி. 9788679402 மாரியப்பன்.
ReplyDelete