SBI ATM களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது
Introduction :
தற்போது SBI ATM களில் பணம் எடுப்பதற்கான விதிமுறை இன்று 18/09/2020
அமலுக்கு வருகிறது .இதன் படி இனிமேல் ATM Machine களில் 10,000 ரூபாய்
மற்றும் அதற்க்கு மேல் பணம் எடுக்கும்பற்றத்தில் உங்களின் தொலைபேசி
எண்ணிற்கு வரும் OTP எண்ணினை பதிவு செய்தால் மட்டுமே பணம் எடுக்க
முடியும் .
இதனை பற்றிய முழு தகவலை பார்க்கலாம் .
Full Details :
தற்போது ATM களில் ஏற்படும் பண மோசடியை தவிர்ப்பதற்காக SBI வங்கியானது ஒரு புதிய
விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது .
இதன்படி SBI வங்கி வாடிக்கையாளர்கள் எந்த ஒரு SBI ATM Machine களில் ரூபாய்
10,000 அல்லது 10,000 க்கு மேல் பணம் எடுத்தாலும் உங்களின் வங்கி கணக்குடன்
இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அதனை
பதிவு செய்தால் மட்டுமே 10,000 அல்லது 10,000 ரூபாய்க்கு மேல்
உங்களால் பணம் எடுக்க முடியும் அவ்வாறு பதிவு செய்யாதபற்றத்தில் உங்களின்
பரிவர்த்தனை ரத்துசெய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது .
இந்த விதிமுறையானது இன்று செப்டம்பர் 18 /2020 முதல் அமலுக்கு வரும் எனவும் SBI
வங்கி அறிவித்துள்ளது .
தற்போது இந்த விதிமுறையானது SBI வங்கி ATM இயந்திரங்களில் மட்டும் நடைமுறையில்
உள்ளது குறிப்பிடத்தக்கது .கூடி விரைவில் அனைத்து ATM இயந்திரங்களில் நடைமுறைக்கு
வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இந்த முறையானது 24*7 என்ற முறையில் எல்ல நேரங்களிலும் செயல்பாட்டில்
இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் SBI வங்கி வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க
இருந்தால் உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசியை மறக்காமல் எடுத்து
அவசியம் எனவும் அறிவுறுத்த படுகிறது .
மேலும் 10,000 ரூபாய்க்கு கீழ் பணம் எடுக்க OTP தேவை இல்லை
குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களின் நபர்களுக்கும்
பகிருங்கள் .
No comments:
Post a Comment