PF Account Date of birth Correction new update now 2021 full details
Introduction :
தற்போது நமது PF கணக்கில் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு புதிய Update ஒன்றை
தற்போது EPFO வெளியிட்டுள்ளது.
இந்த Update ஆனது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெரிய Update என்றும் கூறலாம்.
இந்த update மூலமாக PF சந்தா தாரர்கள் அனைவரும் பெருமளவில் பயன்பெறுவார்கள்
எனவும் நம்பலாம்.
அந்த update பற்றிய முழுமையான தகவளை தற்போது இந்த பதிவின் மூலம் நாமும்
தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
PF Account New Update DoB Correction :
தற்போது நமது PF கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள
புதிய Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த ஆண்டில்
ஏதாவது தவறு 3ஆண்டுக்குள் இருந்தால் நாம் இனிமேல் pf அலுவலகம் போகாமல் online
வழியாக திருத்தம் செய்யலாம்.
PF அலுவலகம் போக தேவை இல்லை.
மேலும் இதற்க்கு முன்னர் நமது பிறந்த நாளில் ஏதாவது தவறு 1 வருடத்திற்குள்
இருந்தால் மட்டுமே நம்மால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.
ஒரு வருடத்திற்கு மேல் உங்களின் பிறந்த வருடத்தில் மாற்றம் இருந்தால் அதனை
திருத்தம் செய்வதற்கு நாம் PF அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும் போது அதற்கான( proof )ஆதாரம் ஒருஜினல் (Original )ஆவணத்தையும்
கொண்டு சென்றால் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.
ஆனால் தற்போது 3ஆண்டுகள் வரை உங்களின் பிறந்த வருடத்தில் தவறு இருந்தால்
அதனை online வழியாகவே திருத்திக்கொள்ள புதிய ஒரு update யை தற்போது EPFO
கொண்டுவந்துள்ளது.
PF Account Correction Documents New Update :
இரண்டாவது முக்கியமான ஒரு Update என்னவென்றால் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த வருடம் தவறாக இருந்தால் அதனை திருத்தம்
செய்வதற்கு கீழ் காணும் மூன்று ஆவணக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள பட்டது.
1. Education Certificate,
2. Passport,
3. Birth Certificate,
மேலே குறிப்பிட்ட மூன்று ஆவணங்களில் ஏதாவது ஓன்று இருந்தால் மட்டுமே நமது பிறந்த
தேதியை திருத்தம் செய்ய முடியும். இதனால் மிகவும் வயதானவர்களால் அவர்களின் பிறந்த
வருடத்தை திருத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.
அவர்களிடம் எந்த ஒரு certificate மற்றும் passport ம் இருக்காது. இதனால்
அவர்களால் அவர்களுடைய ஆவணங்களை திருத்தம் செய்யவும் இயலாமல் இருந்தனர்.
தற்போது அதற்கான ஆவணங்களில் புதிய சில ஆவணங்களை EPFO ஆனது
சேர்த்துள்ளது.
தற்போது பிறந்த ஆண்டினை திருத்தம் செய்வதற்கான புதிய ஆவணங்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு ஆவணம் இருந்தாலும் உங்களால் உங்களின் PF
கணக்கில் உள்ள உங்களின் தவறான பிறந்த தேதி மற்றும் வருடத்தை திருத்தம்
செய்ய முடியும்.
New Documents Name :
1. Any school and Education Certified,
2. Passport,
3. Birth Certificate,
4. Aadhar Card,
5. Voter ID Card & any
6. Driving License,
7. ESI Card,
8. Any Gov issue Birth Related Documents,
9. Certificate Bast of any state Gov/central
Gov Organization,
10. Medical Certified issues by civil surgeon
after examining member,
இனிமேல் யார் வேண்டுமானாலும் அவர்களின் பிறந்த வருடம் 3 ஆண்டுக்குள் தவறாக
குறிப்பிட பட்டிருந்தால் online வழியாக திருத்தம் செய்ய முடியும்.
PF அலுவலத்திற்கு அலைய தேவை இல்லை.
நாம் அனைவரிடமும் ஆதார் அட்டை என்கிற ஓன்று கட்டாயம் இருக்கும் அந்த ஆதார் அட்டை
ஓன்று போதும் நமது பிறந்த வருடத்தை திருத்தம் செய்வதற்கு.
இனிமேல் வயதானாவர்களும் அவர்களின் பிறந்த வருடத்தத்தை திருத்தம் செய்ய முடியும்.
இந்த மூன்று வருடங்கள் என்பது மிகவும் குறைவானது இதனை ஒரு 5 வருடமாக அதிகரித்து
வழங்கியிருந்தால் இன்னும் பலர் பயணடைய கூடும்.
E -Aadhar /Aadhar Card KYC Correction :
உங்களின் தவறுகளை திருத்தம் செய்வதற்கு நீங்கள் ஆவணங்களை online வழியாக
பதிவேற்றம்(Upload )செய்யவேண்டும்.
Upload செய்வதற்கு நீங்கள் Aadhar scan cope அல்லது online -ல் பதிவிறக்கம்
செய்யப்பட்ட E - Aadhar Card இருந்தால் போதும் அதனை பதிவேற்றம் செய்து திருத்தம்
செய்யலாம்.
இந்த தகவல் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை கீழே பதிவு செய்யும்கள் உங்களின்
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த தகவளை பகிரவும் யாராவது ஒருவருக்கு
பயன்படும்.
இது போன்ற பயனுள்ள தகவளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது
youtube channel
யை
subscribe
செய்யுங்கள். நமது இணையதள பக்கத்தை கீழே உள்ள follow button யை click செய்து
பின்தடருங்கள்