PF பணத்தை எடுக்காதீங்க?
Introduction :
நம்மில் பலரும் நாம் ஒரு நிறுவனத்தில் இருந்து பணி நிறைவு பெற்றதும் நமது PF
கணக்கில் உள்ள எல்லா பணத்தினையும் (withdrawal )எடுப்பது சரியானது என எண்ணி
அனைவரும் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் Withdrawal செய்கிறார்கள்.
அதில் ஒருசிலர் தான் withdrawal செய்த pf பணத்தை வேறு ஒரு Bank Account ல்
Deposite செய்வது சரி எனவும் கருதுகிறார்கள் .
இது எந்த அளவிற்கு முட்டாள் தனமானது என்பதையும். PF கணக்கில் உள்ள
நன்மைகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்களும் ஒரு PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக பார்த்து
தெரிந்துகொள்ளுங்கள்.
PF Contribution Deposit :
பலருக்கும் நமது PF கணக்கில் உள்ள பணமானது அவர்களுடைய பணம் தான் அவர்களின்
உழைப்பில் கிடைத்த ஊதியம் தான் என்பது தெரிவதில்லை.
நமது PF கணக்கில் deposit செய்யப்படும் பணமானது நமது மாத சம்பளத்தில் இருந்து 12%
பிடித்தம் செய்யப்பட்டு நமது pf கணக்கில் Deposit செய்யப்படுகிறது.
அதே போல நாம் பணி புரியும் நிறுவனமும் நாம் செலுத்தும் அதே 12% தொகையை நமது PF
கணக்கில் செலுத்தும்.
ஆக ஒரு மாதத்தில் நமது pf கணக்கில் 24% தொகையானது deposit செய்யப்படும். இதுவே PF
Contribution Deposit தொகையக்கும்.
Why do not Withdrawal PF Amount :
🔥
இப்போது ஏன் நமது pf பணத்தை நாம் பணியில் இருந்து விலக்கியதும் எடுக்க
கூடாது?
👉 நமது PF கணக்கானது வங்கி கணக்கை காட்டிலும் மிகவும்அதிக பாதுகாப்பானது.
👉 நமது PF பணத்தை யாராலும் எளிதில் திருடவோ எடுக்கவோ மற்றவரின் கணக்கிற்கு
மாற்றவோ முடியாது.
👉 அதிகமான வட்டியை 8.5%(Interest rate )தரக்கூடியதும் ஓன்று நமது
PF Account Investment.
👉 அதிகமான வருமானத்தை (Income)தரக்கூடியாது.
👉
நீங்கள் எந்த ஒரு வங்கியில் எந்த ஒரு Deposit plan ல் உங்களின் பணத்தை deposit
செய்தாலும் உங்களுக்கு pf கணக்கில் கிடைப்பது போன்று அதிகமான வட்டி
கிடைக்காது.
எந்த ஒரு வங்கியாலும் வழங்க முடியாத அதிகமான வட்டியை வழங்க கூடிய ஓன்று PF
Account .
Reason of PF Amount withdrawal :
First Reason : அறியாமை
பலரும் அவர்களின் pf பணமானது வேலையை விட்டு விலக்கியதும் எடுக்காவிட்டால் நமது
பணம் வீணாகிவிடும் அல்லது பின் வரும் காலங்களில் நமது பணத்தை எடுக்க முடியாமல்
போய்விடும் என்ற பயத்தில் withdrawal செய்கிறார்கள்.
2nd Reason :பயம்
1.நமது PF பணத்தை தற்போது எடுக்காவிட்டால் பின் வரும் காலங்களில் மிக
பெரும் சவால்களை சந்திக்க நேரிடலாம்.
2.நிறுவனம் நிறந்தரமாக மூடப்படலாம் என்ற பயம் .
3.நிறுவனத்தின் support கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற பயம்.
4.நமது கணக்கு முடக்கப்படலாம் என்கிற பயம்.
3rd Reason :High Interest (அதிக வட்டி )
ஒருசிலர் நமது PF கணக்கில் எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்பது தெரியாமல் நமது PF
பணத்தை withdrwal செய்து
மற்ற( Bank Account )வங்கியில் உள்ள Fixed Deposit ல் Deposit செய்கிறார்கள்.
இதுவும் அவர்களின் அறியாமையே காரணம்.
4th Reason :Other Reason (மற்ற காரணங்கள்) :
ஒரு சிலர் மருத்துவ தேவை மற்றும் வீடு கட்டுதல், வீடு வாங்குதல் அல்லது வயது
முதிர்வு, அல்லது ஆடம்பர தேவைக்காகவும் PF பணத்தை withdrawal செய்கிறார்கள்.
Advantage of PF Amount லேட்டா withdrawal :
1. நமது PF கணக்கில் தற்போதைய நிதியாண்டின் 2021-2022 வட்டி விகிதம்
ஆண்டுக்கு 8.5% வழங்கப்பட்டு வருகிறது.
இதற்க்கு முன்னர் அதிகபற்றமாக 9.5%வரையிலும் வட்டி(Interest rate)வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகளில் Fixed Deposit ல் வழங்கப்படும் வட்டியை
காட்டிலும் மிகவும் அதிகம்.
2. நீங்கள் உங்களின் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருந்தால்
அதிகமான வட்டியை (interest )வருமானமாக ஈட்ட முடியும்.
PF Account interest rate history :
4. உங்களின் வயது முதிர்ந்த காலத்தில் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
5. உங்களின் pf பணத்தை எடுக்கவிட்டால் உங்களின் கணக்கு முடக்கப்படாது.
உங்களின் கணக்கில் தொடர்ந்து 3ஆண்டுகள் தொடர்ந்து எந்த ஒரு பரிவர்தனையும்
இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களின் கணக்கு முடக்கபடும்.
உங்களின் கணக்கில் வட்டி தொடர்ந்து deposite செய்யப்பட்டால் உங்களின் கணக்கு
தொடர்ந்து செயல் படும்.
ஆதலால் கணக்கு முடக்கபடும் என்று பணத்தை withdrawal செய்யவேண்டாம்.
4.உங்களின் Pf கணக்கில் ஒரு 1லட்சம் ரூபாய் இருந்தால் உங்களுக்கு ஆண்டுக்கு
8,500ரூபாய் வரையில் வட்டி கிடைக்கும்.
5.pf பணத்தை withdrawal செய்யாமல் இருந்தால் பிற்காலங்களில் உங்களின் மருத்துவ
செலுக்காகவும் அல்லது உங்களின் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு அல்லது அவர்களின்
திருமணத்திற்கு இந்த தொகையை பயன்படுத்தலாம்.
6. Best investment plan.
7.இதற்க்கு முன்னர் நீங்கள் உங்களின் பணியில் இருந்து விலகிய பின்னர் இருக்கும்
உங்களின் pf பணத்திற்கு வட்டி கிடையாது.
ஆனால் தற்போது அந்த விதி முறை மாற்றப்பட்டு உங்களின் pf கணக்கில் இருக்கும்
தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கபடுகிறது.
8. உங்களின் pf பங்களிப்பு தொடர்ந்து 9.5 ஆண்டுகள் அல்லது அதற்க்கு அதிகமான
நாட்கள் இருந்தால் உங்களுக்கு மாதாந்திர pension கிடைக்கும்.
9. மேலும் pf கணக்கின் மூலமாக உங்களுக்கு இலவச insurance வசதியும் கிடைக்கிறது.
நீங்கள் பணியில் இருக்கும் காலத்தில் இறக்க நேரிட்டால் உங்களுக்கு 2.5லட்சம்
முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் வழங்கபடுகிறது.
9. உங்களின் pf கணக்கில் உள்ள employee share மற்றும் employer share இரண்டும்
சேர்த்து 50,000ரூபாய்க்கு அதிகமாக இருந்து நீங்கள் 5 வருடங்களுக்கு முன்னர்
உங்களின் pf பணத்தை எடுக்கும்போது (tax )வரி பிடித்தம் செய்யப்படும். அதற்க்கு
நீங்கள் 5ஆண்டுகள் கழித்து எடுக்கும்போது அதற்க்கு வட்டியும் கிடைக்கும் (tax)
வரி பிடித்தமும் இருக்காது.
இதுபோன்ற பல விதமான நன்மைகள் நமது pf கணக்கில் உள்ளது.ஆதலால் முடிந்த வரை
உங்களின் pf பணத்தை உடனடியாக எடுக்காமல் குறிப்பிட்ட காலத்திக்கு பின்னர்
எடுப்பதான் மூலம் அதிக இலாபத்தை பெற முடியும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதலத்தை பின் தொடரவும்.
No comments:
Post a Comment