Thursday, May 28, 2020

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு எப்படி தொடங்குவது Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY)

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு எப்படி தொடங்குவது Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY)

Dhan Yojana (PMJDY)



Introduction :

இந்த பதிவில் பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கை துவங்குவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் அந்த கணக்கை துவங்க என்னென்ன தகுதிகள் தேவை ?கணக்கை துவங்க தேவைப்படும் ஆவணக்கள் என்னென்ன ? ஆகிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .


இந்த கணக்கை துவங்குவதால் நமக்கு ஏராளமான உதவிகளை அரசு நமக்கு வழங்குகிறது உதாரணமாக தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது .

இதன் காரணமாக அரசு மக்களுக்கு பலவிதமான திட்டங்களையும் தீட்டி மக்களுக்கு உதவி வருகிறது .

அதில் குறிப்பாக பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கு வைத்திருந்தவர்களுக்கு 2020 மார்ச் , ஏப்ரல் ,மே ஆகிய மூன்று மாதங்களுக்கு ரூபாய் 1500 யை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

இதுபோன்ற அனைத்து விதமான அரசு வழங்கும் subsidy யை இந்த கணக்கின் மூலமாக நேரடியாகவும் பெற முடியும் . 

பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கை துவங்குவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:

1.இந்த  கணக்கானது  ஒரு Zero Balance கணக்கு ஆகும். இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் உங்களின் வங்கி கணக்கில் குறைந்தப்பறமாக எந்த ஒரு அளவு பணத்தினையும் வைத்திருக்க தேவை இல்லை .

2.நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் அல்லது டெபாசிட் செய்திருக்கும் பணத்திற்கு எல்லா  வங்கிகளைப்போல ஆண்டுக்கு  4% வரையில் வட்டி வழங்கப்படும் .

3.இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் அரசு வழங்கும் மானியங்களை இந்த கணக்கின் வழியாக நேரடியாக பெற முடியும் .


4.இந்த கணக்கை துவங்கும்போது உங்களுக்கு இலவசமாக ATM அட்டை வழங்கப்படும் .

5.இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் ஏதாவது விபத்தில் காயம் ஏற்பட்டாலே அவர்களுக்கு 2 இலச்சம் வரையில் இன்சூரன்ஸ் பணத்தினை பெரும் வசதியும் அரசு வழங்குகிறது .

6.ஒருவேலை இந்த கணக்கை வைத்திருப்பவர் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இறப்புக்கான life Insurance ரூபாய் 30000 வரையில் பெற முடியும் .


7.மேலும் இந்த கணக்கில் Overdraft வசதியும் வழங்கப்படுகிறது .( Overdraft என்றால் உங்களின் கணக்கில் பணம் எதுல இல்லாமல் இருக்கும் பற்றத்திலும் கூட உங்களால் 10000 ரூபாய் வரையில் பணத்தினை கடனாக எடுக்க முடியும் இதுவே  Overdraft ஆகும் )

இந்த  Overdraft வசதியானது ஒரு குடும்பத்தில் 3பெண்கள் கணக்கு வைத்திருந்தாள் அவர்களில்  ஏதாவது ஒருவருக்கு மட்டுமே இந்த வசதியானது வழங்கப்படுகிறது .

இந்த  Overdraft வசதியானது கணக்கு துவங்கும் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை உங்களின் வங்கி கணக்கில் குறைந்தது 6 மாதங்கள் அதிகமான பணப்பரிவர்த்தனை செய்திருந்தால் மட்டுமே இந்த வசதியானது  வழங்கப்படுகிறது .

8.அடுத்தது இந்த கணக்கினை துவங்கியாதும் உங்களுக்கு ஒரு Rupay Type ATM அட்டை வழங்கப்படுகிறது .இந்த ATM அட்டையை வாங்கி அதனை பயன்படுத்தி ஒரே ஒரு முறையாவது ஏதாவது பணப்பரிமாற்ற பரிவர்த்தனை அல்லது பணமல்லாத பரிவர்த்தனை இதில் ஏதாவது ஒன்றினை செய்திருந்தால் பொது பொது உங்களை கணக்கை துவங்கி வெறும் 90 நாளைக்குள் உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட நேரிட்டால் உங்களுக்கு 2 இலச்சம் வரையில் இன்சூரன்ஸ் பணத்தினை பெற முடியும் .

மற்ற சாதாரண Zero Balance கணக்கை துவங்கினால் இதுபோன்ற சலுகைகள் கிடைக்காது .

கணக்கை துவங்க குறைந்தப்பற்ற  தகுதி :

1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் ,

2..குறைந்தது 10வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் .அவ்வாறு 10வயது குழந்தைக்கு இந்த கணக்கை துவங்கும் பொது அந்த கணக்கானது Joint Account ஆகவே கருதப்படும் .

அந்த குழந்தை 18 வயதை எட்டும் வரையில் இந்த கணக்கானது Joint Account ஆகவே செயல்படும் .அந்த கணக்கினை அந்த குழந்தையின் பெற்றோர் நிறுவகிக்கலாம் .

மேலும் அந்த குழந்தை 18வயதை பூர்த்தி செய்த பின்னர் தனிநபர் கணக்காக மாற்றிக்கொள்ள முடியும் .

3.18வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனிநபர் கணக்கினை துவங்கி கொள்ள முடியும் .

கணக்கை துவங்க தேவைப்படும் ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை .
3.உங்களின் முகவரிக்கான ஏதாவது ஒரு ஆவணம் (ஆதார் அட்டை ,வாக்காளர் அடையாள அட்டை ,பாபோர்ட் ,மேலும் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும் )

கணக்கை துவங்கும் வழிகள் :

இந்த கணக்கினை உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் சென்று துவங்க முடியும் ஆன்லைனில் இதுவரை துவங்குவதற்கான எந்த வசதியும் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .



இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .


Wednesday, May 27, 2020

SBI Fixed Deposit (FD) interest rate from 27th May 2020 | SBI FD interest rate 2020

SBI Fixed Deposit (FD) interest rate from 27th May 2020 | SBI FD interest rate 2020



Introduction :

தற்போது SBI வங்கியானது தனது வங்கியில் Fixed Deposit செய்திருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்திற்கான புதிய வட்டிவிகிதத்தை அறிவித்துள்ளது .

இதன்படி இரண்டு விதமான வாடிக்கையாளர்களின் வட்டிவிகிதத்தை அறிவித்துள்ளது 

1.பொது பிரிவினர்களுக்கான வட்டி விகிதம் ,
2.மூத்த குடிமக்களுக்கான வட்டிவிகிதம் ,

இதில் மூத்த குடிமக்களுக்கான வட்டிவிகிதம் சாதாரண குடி மக்களை காட்டிலும் 0.5% வட்டி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .


1.பொது பிரிவினர்களுக்கான வட்டி விகிதம் ,

SBI Latest FD Interest Rate for General Public Effective 27 May 


Number of days
%Interest Rate
7 Days to 45 Days
2.9%
46 Days to 179 Days
3.9%
180 Days to 210 Days
4.4%
211 Days to Less then 1 Years
4.4%
1 Years to less then 2 Years
5.1%
2 Years to less then 3 Years
5.1%
3 Years and up to 5 Years
5.3%
5 Years and up to 10 Years
6.4%

மேலே குறிப்பிட்டுள்ளது போல மே 27 முதல் Fixed Deposit கான   வட்டி விகிதம் வழங்கப்படும் எனவும் SBI அறிவித்துள்ளது .


2.மூத்த குடிமக்களுக்கான வட்டிவிகிதம் ,

SBI Latest FD Interest Rate for Senior Citizens  Effective 27 May 

Number of days
%Interest Rate
7 Days to 45 Days
3.4%
46 Days to 179 Days
4.4%
180 Days to 210 Days
4.9%
211 Days to Less then 1 Years
4.9%
1 Years to less then 2 Years
5.6%
2 Years to less then 3 Years
5.6%
3 Years and up to 5 Years
5.8%
5 Years and up to 10 Years
6.2%
மூத்த குடிமக்களின்  Fixed Deposit பணத்திற்கு வட்டி விகிதம் மே 27 முதல்  மேலே குறிப்பிட்டுள்ளது போல வழங்கப்படும் எனவும் SBI அறிவித்துள்ளது .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Saturday, May 23, 2020

PF Acc New problem the bank account linked with this account is also Linked with the following UAN :1024xxxxxxx

This Bank Account is also Linked with the following UAN :1024XXXXXXX .your bank account is not your s then please add your correct bank account and get its approved by the employer to avail online claim facility .

Introduction :


தற்போது ஒருசிலரின் UAN ல் உள்ள pf பணத்தினை claim செய்ய முற்படும்போது அவர்களின் கணக்கில் மேலே குறிப்பிட்டுள்ளது போல error வருகிறது இந்த Error வருவதற்கு காரணம் .என்ன ?

எதனால் இதுபோன்ற Error வருகிறது இதனை எப்படி சரி செய்வது என்பதையும் எந்த பதிவில் பார்க்கலாம் .

Error :

The bank Account Linked with this Account is also Linked with the following UAN :10245XXXXXX (with different demographic) If these UAN are yours then please get the basic details corrected in your other UANs and Link them with your aadhar for transfer of your accounts to the present one.If this bank account is not yoursthen plese add your correct bank account and get its approved it approved by the employer to avail online claim Facility .

Cause of Error :

இது போன்ற Error வருவதற்கு காரணம் நீங்கள் இரண்டு அல்லது அதற்கு அதிகமான நிறுவனங்களில் வெவ்வேறு UAN களை  கொண்டு  பணிபுரிந்திருந்தால் அந்த 2uan ல் நீங்கள் இணைத்திருக்கும் வங்கி கணக்கு எண்ணானது ஒரே வங்கி கணக்கு எண்ணாக இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற Error வரலாம் .


நீங்கள் ஒரே UAN ன் கீழ் வேலைத்திருந்தால் உங்களுக்கு இது போன்ற Error வருவதற்கு வாய்ப்பில்லை .

இது தவிர உங்களின் வாங்கி கணக்கு  எண்ணானது வேறு ஒருவரின் UAN  இணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது உங்களின் மற்றோரு UAN ல் இணைக்கப்பட்டிருந்தாலோ கட்டாயம் இதுபோன்ற Error வரும் .

Solution of Error:

இதுபோன்ற Error உங்களின் UAN ல் வந்தால் அதனை இரண்டு வழிகளில் சரி செய்திட முடியும் .


Step - 1

இதனை சரி செய்வதற்கான முதல் வழி உங்களின் UAN ல் நீங்கள் இணைத்திருக்கும் உங்களின் வங்கி கணக்கினை  மாற்றம் செய்வதன் மூலமாக இதனை சரி செய்ய முடியும் .

இதற்க்கு நீங்கள் உங்களின் UAN யை Login செய்து அதில் KYC என்கிற பக்கத்தினை திறந்து அதில் நீங்கள் ஏற்கனவே இணைத்திருக்கும் உங்களின் வங்கி கணக்கு எண்ணிற்கு பதிலாக புதிய ஒரு வங்கி கணக்கு கணக்கினை KYC பக்கத்தில் Update செய்யவேண்டும் .


உதாரணமாக இதற்க்கு முன்னதாக நீங்கள் உங்களின்  தற்போதைய UAN   ல் இந்தியன் வங்கியின் கணக்கு எண்ணினை இணைத்திருந்தால் தற்போது நீங்கள் வேறு ஏதாவது ஒரு வங்கியின் கணக்கு எண்ணினை இணைக்க வேண்டும் .உதாரணமாக  SBI   வங்கியில் உங்களுக்கு கணக்கி இருந்தால் அதனை இணைப்பதன் மூலமாக சரி செய்ய முடியும் .


உங்களுக்கு வேறு எந்த ஒரு வங்கியிலும் கணக்கு இல்லையென்றால் புதிதாக கணக்கு ஒன்றினை தொடர்வது சிறந்தது .

Step -2 

முதல் வலியினை உங்களால் பின்பற்ற முடியவில்லையென்றால் இந்த 2வது வலியினை பின்பற்றவும் .இதற்க்கு நீங்கள் ஏற்கனவே வேலைசெய்த UAN உனக்களின் தற்போதைய UAN ல் இனித்திருக்கும் அதே வாங்கி கணக்கு எண்ணினை இணைத்திருப்பது உறுதியாக தெரியும் என்றால் .நீங்கள் உங்களின் பழைய UAN யை தற்போதைய UAN டன் இணைப்பதன் மூலமாக இந்த Error யை சரி செய்திட முடியும் .


இவ்வாறு நீங்கள் இரண்டு UAN யை இணைக்க வேண்டும் என்றால் இதற்க்கு முன்னதாக உள்ள UAN ல் உள்ள உங்களின் சுய தகவல்கள் தற்போது உள்ள UAN ல் உள்ள உங்களின் சுய தகவல்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்களால் இரண்டு UAN யை இணைக்க முடியும் .


இந்த முறையானது மிகவும் சிரமானதும் கூட நீங்கள் இணைப்புக்கான பரிந்துரையினை ஆன்லைன் வழியாக  கொடுத்தாலும் அதற்க்கு உங்களின் நிறுவனம் மற்றும் PF அலுவலகம் உறுதியளிக்க வேண்டும் அவ்வாறு உறுதியளிக்கவில்லை என்றால் உங்களால் இரண்டு UAN ம் இணைக்க முடியாது .


இதற்க்கு நீங்கள் முதல் Step  யை  பின்பற்றுவது மிகவும் சிறந்தது .



மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 👇👇👇👇👇👇👇👇.





மேலும்  இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தளத்தினை பின்தொடரவும் ......



**********************நன்றி *******************************

Monday, May 18, 2020

PF Claim In Under process in long time how to this problem solution

PF Claim settle with in 72 Hours in covid - 19 advance claim 

Introduction :

தற்போது நம்மில் பலரும் Advance PF Claim செய்திருப்போம் அதில் covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து PF Advance Claim செய்தால் 3நாளைக்குள் உங்களுக்கு பணமானது கிடைத்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது .இதன்படி அதிகமான நபர்களுக்கு pf பணமானது கிடைத்திருக்கவும் செய்கிறது .

Problem :


இதில் இன்னும் அதிகமான நபர்களுக்கு 20நாட்களுக்கு மேல் ஆகியும் Claim ஆனது Under Process ல் உள்ளது .இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Solution :

மேலே குறிப்பிட்டுள்ளது போல உங்களின் PF Claim ஆனது விண்ணப்பித்து 10 நாட்களுக்கும் அதிகாமாக Under Process இருந்தால் நீங்கள் ஆன்லைனில் Grievance ல் உங்களின் புகாரினை பதிவு செய்வதன் மூலமாக உங்களின் பிரச்சனைகளை சரி செய்துகொள்ள முடியும் .

இதற்க்கு முதலில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்

https://www.epfindia.gov.in/site_en/index.php

இதன் பின்னர் உங்களுக்கு PF இணையத்தளம் open ஆகும் அதில் Grievance பட்டனை தேர்வு செய்யவும் .


அடுத்து உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும் அதில் Register Grievance என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் status என்கிற இடத்தில்  PF Office யானா தேர்வு செய்யவும் .

அதற்க்கு கீழே உங்களின் UAN Number மற்றும் அதற்க்கு அருகில் உள்ள captcha எண்ணினை அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்து அதற்க்கு அருகில் உள்ள Get Details என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் தகவல்கள் கீழே காண்பிக்கப்படும் அதில் உங்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை சரிபார்த்துவிட்டு அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Get OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு One Time Password  ஓன்று அனுப்பப்படும் அதனை கொடுக்கப்பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் .

  

இதன் பின்னர் உங்களின் சுய விபரங்களை பதிவு செய்யவேண்டும் .



இதன்பின்னர் அதற்க்கு கீழே உங்களின் Member ID யை தேர்வு செய்யவும் .


இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் Grievance Related என்கிற தேர்வில் PF Office  என்பதை தேர்வு செய்யவும் .

இதனை அடுத்து Grievance Category என்கிற தேர்வில் Covid  19 Advance Related  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

அடுத்ததாக Grievance Description  என்கிற இடத்தில் உங்களின் description Type செய்யவும் .

உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல type செய்யவும் .


Dear sir / Madam


                   I have Applied for PF Advance claim Under OUTBREAK OF PANDEMIC (COVID - 19 )Reason on __/__/__ but still Now  My Claim is Not settle and my claim status is showing as under process.

so I am Request you to please settle my PF Claim.

அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் attach என்கிற இடத்தில் உங்களின் PF Claim Status யை screen short  எடுத்து அதனை PDF Format ல் மாற்றம் செய்து அதனை பதிவேற்றம் செய்துகொள்ளுங்க .

இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Add என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 இப்போது உங்களின் புகார் சமர்ப்பிக்கப்படும் .இதன் பின்னர் உங்களின் புகாரானது 72 மணிநேரத்திற்குள் விசாரிக்கப்பட்டு உங்களின் claim செய்த பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்





இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

Sunday, May 17, 2020

Plastic pan card apply through Online full details in tamil

Plastic pan card apply through Online full details


Introduction :

இந்த பதிவில் நாம் எப்படி பிளாஸ்டிக் பான் அட்டையினை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


நம்மில் பலரிடம் பான் அட்டை இருக்கும் அவர்களில் சிலருக்கு அந்த பான் முட்டையானது உடைத்திருக்கலாம் அல்லது தொலைத்திருக்கவும் கூடும் .

இன்னும் ஒருசிலர் ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டையை வைத்து பான் நம்பரை விண்ணப்பித்து பெற்றிருப்பார்கள் அவர்களிடமும் இந்த பிளாஸ்டிக் பான் முட்டையானது இருக்காது இவர்கள் அனைவரும் ஆன்லைனில் வெறும் 50 ரூபாய் செலவில் உங்களின் வீட்டில் இருந்து நீங்களே  விண்ணப்பித்து பெற முடியும் .

அதனை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம் .

Plastic PAN Apply :

உங்களின் பான் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு விதமான இணையதளங்கள் உள்ளது அதில் எந்த இணையதளத்தில் உங்களின் பான் அட்டை விண்ணப்பித்து பெறப்பட்டது அந்த இணையதளத்தில் தான் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் .



உங்களுக்கு எந்த இணையதள முகவரியில் விண்ணப்பித்து பான் அட்டை பெறப்பட்டது என்பது தெரியவில்லையென்றால் ஒன்றும் கவலைப்பட தேவை இல்லை .எளிதில் கண்டறிய முடியும் .

PAN Website :

நமக்கு பான் அட்டையினை விண்ணப்பித்து பெறுவதற்கு  மொத்தத்தில்  இரண்டு இணையதளங்கள் மட்டுமே உள்ளது .

1.NSDL PAN REPRINT link1

2.UTI PAN CARD PRINT link2 


 மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இணையதளங்கள் வழியாக மட்டுமே நாம் பான் அட்டையினை பெற முடியும் .

இப்போது உங்களின் பான் அட்டை எந்த இணையதளத்தில் விண்ணப்பித்து பெறப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இணையத்தளத்தினையும் தனி தனியாக ஓபன் செய்துவைத்து கொள்ளவும் .

1.NSDL PAN REPRINT link1



முதலில் NSDL என்கிற இணையதளத்தில் உங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதற்க்கு கீழே உங்களின் பிறந்த மாதம் மட்டும் பிறந்த வருடம் எவ்வாறு உங்களின் பான் அட்டையில் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது  அதே மாதம் மற்றும்  வருடத்தினை பதிவு செய்யவும்  ஆகிய தகவலை பதிவு செய்து .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் captcha வை பதிவு செய்து submit செய்யவும் .


இதன் பின்னர் உங்களின்  OTP  Received செய்வதற்காண தேர்வினை தேர்வு செய்யவும் உதாரணமாக தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இவைகளில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்யவேண்டும் .நீங்கள் தேர்வு செய்யும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி என்னானது நீங்கள் பான் அட்டை விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்பட்டவையாக இருந்தால் மட்டுமே OTP Received ஆகும் .


இப்போது உங்களின் OTP யை பதிவு செய்து submit செய்யவும் .இதன் பின்னர் இந்த பிளாஸ்டிக் பான் அட்டைகாண கட்டணம் ரூபாய் 50 யை செலுத்துவதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் ATM அட்டை மூலமாக 50ருபையினை செலுத்தி உங்களின் பான் அட்டையினை அடுத்த 10 வேலை நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் .

நீங்கள் விண்ணப்பித்த பான் அட்டை உங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சல் அலுவலகம் மூலமாக அனுப்பப்படும் .


ஒருவேளை NSDL இணையதளத்தில் உங்களின் தகவல் காண்பிக்கப்படவில்லையென்றால் நீங்கள் அடுத்தது UTI என்கிற இணையத்தளத்தினை தேர்வு செய்து அதில் உங்களின் தகவல்களை பூர்த்தி செய்து பிண்ணப்பிக்கவும்.

 இந்த இணையதளத்திலும் விண்ணப்பிக்கும் முறை NSDL இணையதளத்தில் விண்ணப்பிப்பதும்  முறையும் ஒரே மாதிரியானதே .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தளத்தினை பின்தொடரவும் .

Friday, May 15, 2020

PF Account new announcement Next 3 month Reduce our Pf Contribution Full details

PF Account new announcement Next 3 month Reduce our Pf Contribution


Introduction :

தற்போது நமது EPFO இந்த மே மாதம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

இதன்படி அடுத்து வரும்  ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட் ஆகிய  மூன்று மாதங்கள் மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்த அறிவிப்பினை நமது நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார் .


அறிவிப்பு பற்றிய முழு விளக்கம் :

இந்த அறிவிப்பில் கூறியுள்ளது என்னெவென்றால் தற்போது நிலவிவரும் கொரோன நோயால் மக்கள் மத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது . இதனை தவிர்ப்பதற்காகவும் மக்களின் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

வரும் ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட் ஆகிய  மூன்று மாதங்கள் உங்களின் மாத வருமானத்தில் இருந்து உங்களின் pf பங்களிப்பு  12% இருந்து 10%ஆக குறைக்கப்பட்டுள்ளது .

அதேபோல உங்களின் நிறுவனம் உங்களின் PF கணக்கிற்கு வழங்கவும் பங்களிப்பும் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு  12% இருந்து 10%ஆக குறைக்கப்பட்டுள்ளது .

%குறைப்பதற்கு காரணம் :


இதுவரையில் உங்களின் pf பங்களிப்பு உங்களின் மாத வருமானத்தில் இருந்து 12% வரையில் பிடித்தம் செய்யபட்டு வந்த நிலையில்  .தற்போது இந்த பிடித்தம் அளவானது 12% இருந்து 10% ஆக குரைக்கப்பட்டுள்ளது .

தெழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் :

இதற்க்கு காரணம் நீங்கள் உங்களின் pf கணக்கில் சேமிக்கப்படும் நீதியானது வருங்காலத்திற்க்காக மட்டுமே சேமிக்கப்படுவதால் அந்த சேமிப்பு பணத்தால் தற்போது எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பதால்  அந்த சேமிப்பு பணத்தின் பங்களிப்பை குறைக்க  திட்டமிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளது .


 இதன்படி ஒருவரின் வருமானத்தில்  ஒருவரின்  பங்களிப்பு 12% இருந்து 10% ஆக குறைக்கப்படுவதால் அவருடைய மாத வருமானத்தில் 2% அதிகரிக்கும் இதனால் அவருடைய மாத வருமானம் அடுத்த 3 மாதங்கள் 2% அதிகமாக கிடைக்கப்பெறும்.

இதனால் அவருடைய அடிப்படை சிறு சிறு தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் .


நிறுவனங்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

இதே போன்றும் நிறுவனத்தின் பங்களிப்பு 12% ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது .இதனால் உங்களின் நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளருக்கு 2%வரையில் நிதி சேமிக்கப்படும் இதனால் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த தொகையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

ஆதலால் அடுத்து வரவிருக்கும் 3மாதங்கள் உங்களின் PF பங்களிப்பு 24% ல் இருந்து 20% குரைக்கப்பட்டு உங்களின் PF கணக்கில் செலுத்தப்படும் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் :



இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

How to Download Aadhar card in 30 second only //Tech and Technics

How to Download Aadhar card in 30 second only


Introduction :

உங்களின் ஆதார் அட்டையினை வெறும் 30 வினாடியில் உங்களின் தொலைபேசியில் நீங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .

இதற்க்கு play store ல் MAdhar  Application கொடுக்கப்பட்டுள்ளது அதனை முதலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் .

Application Download Link :




இந்த application யை பதிவிறக்கம் செய்து அதனை அதில் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP மூலமாக verify செய்துகொள்ள வேண்டும் .


இதன் பின்னர் aadhar Download என்கிற தேர்வினை தேர்வு எண்ணினை செய்யாவும் .இதன் பின்னர் வரும் தேர்வில் ஆதார் என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதற்க்கு கீழே உள்ள captcha எண்ணினை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Request OTP என்கிற தெரிவினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த எண்ணிற்கு ஒரு OTP அதனை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Open என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது Password ஒன்றினை பதிவு செய்யவேண்டி இருக்கும் .

இப்போது உங்களின் Password பதிவு செய்யவும் உங்களின் password உங்களின் பெயரில் ஆங்கிலத்தில்  முதல் 4 எழுத்துக்களையும் அதனுடன் உங்களின் பிறந்த வருத்தையும் சேர்த்தது பதிவு செய்த்தால் போதும் .

உதாரணமாக உங்களின் பெயர் குமார் என்றால் உங்களின் Password   KUMA1999 என்று பதிவு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் அட்டை காண்பிக்கப்படும் இப்போது வலது பக்கம் மேலே ஒரு 3 புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை click செய்யவும் இப்போது Download என்கிற தேர்வு காண்பிக்கப்படும் அதனை click செய்து உங்களின் ஆதார் அட்டையினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .




மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும்  .

Thursday, May 14, 2020

PF Account Related Doubt with best Solution Full details

PF Account Related Doubt with best Solution Full details



Introduction :

நமது PF கணக்கில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கிறது அதில் அதிகமாக அனைவருக்கும் இருக்கும்  இரண்டு முக்கியமான சந்தேகங்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

கேள்வி :


தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் COVID - 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி எத்தனை முறை நாம் PF Advance பணத்தினை claim செய்ய முடியும் .



பதில் : 

தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த குறிப்பிட்ட காரணத்தை பயன் படுத்தி பலரும் அவர்களுடைய PF கணக்கில் இருந்து Advance தொகையை எடுத்து கொள்ளலாம் எனவும் EPFO அறிவித்திருந்தது .

இதன் படி  COVID  - 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி விண்ணப்பித்தால் 3 நாளைக்குள் உங்களின் Claim பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு வரும் எனவும் குறிப்பிட பட்டிருந்தது .

ஆதலால் பலரும் covid -19 என்கிற காரணத்தை தேர்வு செய்து 2 அல்லது அதற்க்கு மேல் Claim செய்வதற்கு முற்படுகிறார்கள் .


இதற்க்கு pf அலுவலகம் அறிவித்துள்ள விளக்கத்தின்படி  ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த COVID - 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது .

ஒரு முறைக்கு மேல் அந்த குறிப்பிடட காரணத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் கூற பட்டுள்ளது . 


கேள்வி : 2



நமது PF பணத்தை Claim செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது உங்களின் வங்கி Passbook அல்லது Cheque Leaf யை பதிவேற்றம் செய்யவேண்டும் ஆனால் Salary Bank Account வைத்திருப்பவர்களிடம் வங்கி Passbook அல்லது Cheque Leaf இவை இரண்டுமே இருக்காது .

இவர்கள் எப்படி விண்ணப்பம் செய்வது என  அனைவருக்கும் சந்தேகம் உள்ளது .இதற்கான தீர்வை பார்க்கலாம் .




பதில் :

வங்கி Passbook அல்லது Cheque Leaf  இவை இரண்டும் இல்லாதவர்கள் அவர்களின் வாங்கி statement யை பதிவிறக்கம் செய்து அதனை JPE அல்லது JPEG ஆகிய Format ல் மாற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் EPFO நிறுவனம் அறிவித்துள்ளது .


உங்களால் உங்களின் வங்கி Statement யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லையென்றால் உங்களின் வங்கியில் சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும் முடியும் .

உங்களுக்கு வங்கியில் statement print கொடுக்கும்பற்றத்தில் அதனை scan செய்து விண்ணப்பிக்கலாம் .


கேள்வி 3:


COVID 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி ஒருமுறை பணம் எடுத்த பின்னர் அடுத்த முறை எந்த தேர்வினை தேர்வு செய்து advance தொகை எடுக்க முடியும் .

பதில் :

தற்போது உள்ள covid 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி ஒரு முறை மட்டுமே ஆன்லைனில் Advance தொகை claim செய்ய முடியும் .அதற்க்கு பின்னர் நீங்கள் Advance  Claim செய்யவேண்டு மென்றால் Illness என்கிற தேர்வினை பயன்படுத்தியே Advance claim செய்யமுடியும் .

இந்த தேர்வின் மூலமாக employee share ல் மட்டும் உள்ள PF பணத்தில் 75% எடுக்க முடியும் .

கேள்வி 4:

ஒருவரால் எத்தனை முறை PF Advance தொகை எடுக்க முடியும் .

பதில் :

ஒருவரால் அதிகப்பற்றமாக ஒரு financial year நிதியாண்டில் 5 முறை மட்டுமே PF Advance தொகையை எடுக்க முடியும் .

அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் மட்டுமே எடுக்க முடியும் .



மேலும் இதுபோன்ற முக்கியனம மற்றும் பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தலைத்தை பின்தொடரவும் .



**********************நன்றி ***************************

Monday, May 11, 2020

How to Recovered deleted Mobile phone Call History simple way

How to Recovered deleted Mobile phone Call History simple way 





Introduction :

இந்த பதிவில் நமத்து தொலைபேசியில் உள்ள நாம் delete செய்த  call Record யையும் எவ்வாறு Recover செய்வது  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .இந்தவளியில் நீங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக உங்களின் தொலைபேசிக்கு வந்த தொலைபேசி அழைப்புகளையும் கூட recover செய்ய முடியும் .


இந்த முறையானது உங்களின் தொலைபேசியில் உள்ள அழைப்புகளை மட்டுமே recover செய்யுமே தவிர உங்களின் sim card அழைப்புக்களை recover செய்யாது .



இதற்க்கு நீங்கள் ஒரு application யை நீங்கள் பதிவிறக்கம் செய்யவேண்டும் .இந்த application யை நீங்கள் எந்த தொலைபேசியின் அழைப்புகளை recover செய்ய விரும்புகிறீர்களோ  அந்த தொலைபேசியில் இந்த application யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .

இந்த application பெயர் E2PDF ஆகும் .

மேலும் இந்த application மூலமாக உங்களின் தொலைபேசியில் உள்ள SMS யையும் Recover செய்திட முடியும் .

Application Download Link :



Step - 1

இந்த application யை Install செய்து அதன் பின்னர் open செய்யவும் அப்போது  உங்களுக்கு இரண்டு விதமான Backup and Restore தேர்வுகள் தோன்றும் .

1.HTML Backup and Restore,
2.PDF Backup and Restore,



அதில் நீங்கள் PDF Backup and Restore, என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் General Call Log என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Step -2

அடுத்து உங்களுக்கு Call Log Details  என்கிற  பக்கம் தோன்றும் அதில் எந்த தேதி முதல் எந்த தேதி வரையில் உள்ள Call History recover செய்யவேண்டுமோ அந்த தேதியை பதிவு செய்யவும் .




இதன் பின்னர் அதற்க்கு கீழே உங்களுக்கு எந்த விதமான அழைப்புகளை Recover செய்யவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும் .


உதாரணமாக 

1. Call Log Details ,
2. Only Dialed Calls,
3. Only Received Calls,
4. Only Missed Calls. 

இப்போது  நீங்கள் Call Log Details என்கிற தேர்வினை தேர்வு செய்யும்போது உங்களின் அனைத்து அழைப்புகளை recover செய்துகொள்ள முடியும் .


உங்களுக்கு missed Calls மட்டும் ரெக்கோவெர்செய்தாள் போதும் என்றால் அதனை மட்டும் தேர்வு செய்தால் போதும் .

Step -3


இதன் பின்னர் நீங்கள் Recover செய்த file க்கு ஒரு Name பதிவு செய்யவேண்டும் .
இதன் இன்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Export To PDF  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது  அந்த பக்கம் ஆனது கொஞ்சம் Load ஆகும் அதன் பின்னர் உங்களின் Call History File ஆனது உங்களின் தொலைபேசியில்  Local Storage சேகரிக்கப்பட்டுவிடும் .

இதன் பின்னர் நீங்கள் Recover செய்த call History பார்ப்பதற்கு  உங்களின் File Manager ல் Local Storage யை Open செய்யவும்  செய்து அதில்  E2PDF என்கிற Folder யை  தேர்வு செய்து Open  செய்யவும் .

இப்போது உங்களின் Recover File  நீங்கள் குறிப்பிட்ட Name ல் இருப்பதை பார்க்கலாம் அதனை open செய்து உங்களின் அனைத்து calls பற்றிய அனைத்து தகவலையும் பார்க்க முடியும் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் ...





மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் ....



Sunday, May 10, 2020

EPFO Claim Rejected .How to check PF Claim Status in Online?

EPFO Claim Rejected .How to check PF Claim Status in Online?





Introduction :

எப்பதுமே ஒருவருடைய PF Claim நிராகரிக்கப்பட்டால்  அது என்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது ?என்ன தவறு செய்தோம் என்பதை  நாம் தெரிந்து கொண்டால் மட்டுமே அதனை சரி செய்து மறுபடிவும் Claim Apply செய்ய முடியும் .அதை தெரிந்துகொள்வதற்கு நாம் முதலில் PF Claim Status யை தெறித்து கொள்வது மிகவும் அவசியம் .

இப்பொது நமது PF Claim என்ன காரணத்தால் நிராகரிக்க பட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்காக்கலாம்.


How to check PF Claim Status in Online?




உங்களின் PF Claim Status யை தெரிந்துகொள்ள உங்களின் PF Passbookயை check செய்யும் வழியினை பின்பற்ற வேண்டும் .

Step - 1


இதற்க்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளத்தை Click செய்யவும் .


https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login 


இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல  ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் UAN Number மற்றும் Password யை பதிவு செய்து அதற்க்கே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய கணக்கிற்கு சரியான விடையினை பதிவு செய்யவேண்டும் .



இவைகளை பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Step - 2

இப்போது உங்களின் UAN பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல காண்பிக்கப்படும் .


இப்போது Please select at-least one Member ID யானா கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தினை தேர்வு செய்யவும் .அதில் உங்களுக்கு எந்த Member ID ன் Claim  Status யை தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த Member ID தேர்வு செய்துகொள்ளவும்  .

Step - 3

இதன் பின்னர் அதன் அருகில் உள்ள View Claim Status என்கிற தேர்வினை தேர்வு  செய்யவும் .



Step - 4

இப்போது உங்களின் Claim என்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் .






இப்போது உங்களின் PF Claim என்ன காரணத்திற்கு நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொண்டு அதனை சரி செய்த பின்னர் மீண்டும் உங்களின் PF Claim ல் Apply செய்யும்பொது உங்களின் Claim ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுக்கு உங்களின் pf பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு  வந்து சேரும் .


மேலும் இதுபோன்ற பயனுள்ள அத்தகவலை தெரின்பத்துக்கொள்ள நமது  இணையதளத்தை பின்தொடரவும் .

                ****************நன்றி ******************

Wednesday, May 6, 2020

How to apply TN E Pass Full details with Approved Proof

சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .


Introduction :


தற்போது  தமிழக  அரசு  சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைனில் வழியாக விண்ணப்பித்து அதற்கான அனுமதியினை பெற்று சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்று அரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இதன்படி வெளி ஊர்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு ஒரு அவசர தேவைக்காக மட்டும் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்குகிறது .


இதற்க்கு நீங்கள்  ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து  அதற்கான அனுமதியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை click செய்யவும் .


https://tnepass.tnega.org/#/user/pass


Step - 1

இந்த இணையதல முகவரியை click செய்தவுடன் உங்களுக்கு ஒரு அக்கம் தோன்றும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும்  அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் captch எண்ணினை அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு One Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்துகொள்ளவும் .

Step - 2

இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு விதமான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் தனிநபர் என்பதை தேர்வு செய்யவும் .



Step  - 3

இதன் பின்னர் விண்ணப்பங்கள் தோன்றும் மொத்தம் மூன்றுவிதமான விண்ணப்பங்கள் தோன்றும் அதில் முதலாவதாக தோன்றும் விண்ணப்பத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய தகவல்களை மட்டும் பகிர்கிறேன் .


 முதல் விண்ணப்ப பக்கம்  அதில் உங்களின் விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும்
.
படிவம் ஓன்று :

அதில் முதலாவதாக என்ன காரணதடகத்திற்கு ஊருக்கு செல்ல விருப்புகிறீகள் என்பதை தேர்வு செய்யவேண்டும்.அந்த காரணத்திற்க்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டி இருக்கும் என்பது குறிப்பிட தக்கது  .


குறிப்பாக உடல்நலம் சரியில்லாதவர்களை கவனித்துக்கொள்ளவும்  மருந்து வாங்கி தருவதற்காகவும் செல்ல விரும்பினால் அதற்கான மருந்து சீட்டுகள் அல்லது மருத்துவரிடம் வாங்கிய medical report இதில் ஏதாவது ஒன்றினை பதிவேற்றம் செய்யவேண்டி இருக்கும் இது மூன்றாவதாக தோன்றும் படிவத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் .


  மேலும் படிவம் ஒன்றை  பூர்த்தி செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டையை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவானது 500Kb அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும் .

நீங்கள் பயணம் செய்யும் வணக்கத்தின் எண் மற்றும் வாகனம் பற்றிய தகவலையும் பதிவு செய்யவேண்டும் .


படிவம் இரண்டு :

இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் நீங்கள் செல்லவிருக்கும் முகவரி ஆகிய  இரண்டு தகவல்களையும்  பதிவு செய்யவேண்டும் .


படிவம் மூன்று :

படிவம் மூன்றில் நீங்கள் என்ன காரணத்திற்க்காக ஊருக்கு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளீர்களோ அந்த காரணத்திற்க்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும் .

பதிவேற்றம் செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு உங்களின் Application என்னானது அனுப்பப்படும் .

இதன் பின்னர் நீங்கல் விண்ணப்பித்த அடுத்த ஓன்று அல்லது இரண்டு நாளைக்குள் உங்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களின் காரணம் நியமானதாக இருந்தால் உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் .

இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுமதி வழங்கிய  SMS ஓன்று அனுப்பப்படும் அதன் பின்னர் அந்த Sms open செய்தால் அதில் நீங்கள் ஊருக்கு செல்வதற்கான அனுமதி கடிதம் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை print எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களின்பயணத்தை தொடரலாம் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்க்கவும் .




மேலும் பயனுள்ள தகவல்களுக்கு நமது இணையதளத்தை பின்தொடரவும் .