Sunday, May 17, 2020

Plastic pan card apply through Online full details in tamil

Plastic pan card apply through Online full details


Introduction :

இந்த பதிவில் நாம் எப்படி பிளாஸ்டிக் பான் அட்டையினை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


நம்மில் பலரிடம் பான் அட்டை இருக்கும் அவர்களில் சிலருக்கு அந்த பான் முட்டையானது உடைத்திருக்கலாம் அல்லது தொலைத்திருக்கவும் கூடும் .

இன்னும் ஒருசிலர் ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டையை வைத்து பான் நம்பரை விண்ணப்பித்து பெற்றிருப்பார்கள் அவர்களிடமும் இந்த பிளாஸ்டிக் பான் முட்டையானது இருக்காது இவர்கள் அனைவரும் ஆன்லைனில் வெறும் 50 ரூபாய் செலவில் உங்களின் வீட்டில் இருந்து நீங்களே  விண்ணப்பித்து பெற முடியும் .

அதனை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம் .

Plastic PAN Apply :

உங்களின் பான் அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிக்க இரண்டு விதமான இணையதளங்கள் உள்ளது அதில் எந்த இணையதளத்தில் உங்களின் பான் அட்டை விண்ணப்பித்து பெறப்பட்டது அந்த இணையதளத்தில் தான் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் .



உங்களுக்கு எந்த இணையதள முகவரியில் விண்ணப்பித்து பான் அட்டை பெறப்பட்டது என்பது தெரியவில்லையென்றால் ஒன்றும் கவலைப்பட தேவை இல்லை .எளிதில் கண்டறிய முடியும் .

PAN Website :

நமக்கு பான் அட்டையினை விண்ணப்பித்து பெறுவதற்கு  மொத்தத்தில்  இரண்டு இணையதளங்கள் மட்டுமே உள்ளது .

1.NSDL PAN REPRINT link1

2.UTI PAN CARD PRINT link2 


 மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இணையதளங்கள் வழியாக மட்டுமே நாம் பான் அட்டையினை பெற முடியும் .

இப்போது உங்களின் பான் அட்டை எந்த இணையதளத்தில் விண்ணப்பித்து பெறப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு இணையத்தளத்தினையும் தனி தனியாக ஓபன் செய்துவைத்து கொள்ளவும் .

1.NSDL PAN REPRINT link1



முதலில் NSDL என்கிற இணையதளத்தில் உங்களின் பான் மற்றும் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதற்க்கு கீழே உங்களின் பிறந்த மாதம் மட்டும் பிறந்த வருடம் எவ்வாறு உங்களின் பான் அட்டையில் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது  அதே மாதம் மற்றும்  வருடத்தினை பதிவு செய்யவும்  ஆகிய தகவலை பதிவு செய்து .இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் captcha வை பதிவு செய்து submit செய்யவும் .


இதன் பின்னர் உங்களின்  OTP  Received செய்வதற்காண தேர்வினை தேர்வு செய்யவும் உதாரணமாக தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இவைகளில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்யவேண்டும் .நீங்கள் தேர்வு செய்யும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி என்னானது நீங்கள் பான் அட்டை விண்ணப்பிக்கும்போது பதிவு செய்யப்பட்டவையாக இருந்தால் மட்டுமே OTP Received ஆகும் .


இப்போது உங்களின் OTP யை பதிவு செய்து submit செய்யவும் .இதன் பின்னர் இந்த பிளாஸ்டிக் பான் அட்டைகாண கட்டணம் ரூபாய் 50 யை செலுத்துவதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் ATM அட்டை மூலமாக 50ருபையினை செலுத்தி உங்களின் பான் அட்டையினை அடுத்த 10 வேலை நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் .

நீங்கள் விண்ணப்பித்த பான் அட்டை உங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அஞ்சல் அலுவலகம் மூலமாக அனுப்பப்படும் .


ஒருவேளை NSDL இணையதளத்தில் உங்களின் தகவல் காண்பிக்கப்படவில்லையென்றால் நீங்கள் அடுத்தது UTI என்கிற இணையத்தளத்தினை தேர்வு செய்து அதில் உங்களின் தகவல்களை பூர்த்தி செய்து பிண்ணப்பிக்கவும்.

 இந்த இணையதளத்திலும் விண்ணப்பிக்கும் முறை NSDL இணையதளத்தில் விண்ணப்பிப்பதும்  முறையும் ஒரே மாதிரியானதே .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தளத்தினை பின்தொடரவும் .

1 comment: