பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு எப்படி தொடங்குவது Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY)
Dhan Yojana (PMJDY)
Introduction :
இந்த பதிவில் பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கை துவங்குவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் அந்த கணக்கை துவங்க என்னென்ன தகுதிகள் தேவை ?கணக்கை துவங்க தேவைப்படும் ஆவணக்கள் என்னென்ன ? ஆகிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
இந்த கணக்கை துவங்குவதால் நமக்கு ஏராளமான உதவிகளை அரசு நமக்கு வழங்குகிறது உதாரணமாக தற்போது நிலவிவரும் கொரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது .
இதன் காரணமாக அரசு மக்களுக்கு பலவிதமான திட்டங்களையும் தீட்டி மக்களுக்கு உதவி வருகிறது .
அதில் குறிப்பாக பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கு வைத்திருந்தவர்களுக்கு 2020 மார்ச் , ஏப்ரல் ,மே ஆகிய மூன்று மாதங்களுக்கு ரூபாய் 1500 யை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .
இதுபோன்ற அனைத்து விதமான அரசு வழங்கும் subsidy யை இந்த கணக்கின் மூலமாக நேரடியாகவும் பெற முடியும் .
பிரதான மந்திரி ஜன்தான் யோஜனா வங்கி கணக்கை துவங்குவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:
1.இந்த கணக்கானது ஒரு Zero Balance கணக்கு ஆகும். இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் உங்களின் வங்கி கணக்கில் குறைந்தப்பறமாக எந்த ஒரு அளவு பணத்தினையும் வைத்திருக்க தேவை இல்லை .
2.நீங்கள் உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் அல்லது டெபாசிட் செய்திருக்கும் பணத்திற்கு எல்லா வங்கிகளைப்போல ஆண்டுக்கு 4% வரையில் வட்டி வழங்கப்படும் .
3.இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் அரசு வழங்கும் மானியங்களை இந்த கணக்கின் வழியாக நேரடியாக பெற முடியும் .
4.இந்த கணக்கை துவங்கும்போது உங்களுக்கு இலவசமாக ATM அட்டை வழங்கப்படும் .
5.இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் ஏதாவது விபத்தில் காயம் ஏற்பட்டாலே அவர்களுக்கு 2 இலச்சம் வரையில் இன்சூரன்ஸ் பணத்தினை பெரும் வசதியும் அரசு வழங்குகிறது .
6.ஒருவேலை இந்த கணக்கை வைத்திருப்பவர் இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இறப்புக்கான life Insurance ரூபாய் 30000 வரையில் பெற முடியும் .
7.மேலும் இந்த கணக்கில் Overdraft வசதியும் வழங்கப்படுகிறது .( Overdraft என்றால் உங்களின் கணக்கில் பணம் எதுல இல்லாமல் இருக்கும் பற்றத்திலும் கூட உங்களால் 10000 ரூபாய் வரையில் பணத்தினை கடனாக எடுக்க முடியும் இதுவே Overdraft ஆகும் )
இந்த Overdraft வசதியானது ஒரு குடும்பத்தில் 3பெண்கள் கணக்கு வைத்திருந்தாள் அவர்களில் ஏதாவது ஒருவருக்கு மட்டுமே இந்த வசதியானது வழங்கப்படுகிறது .
இந்த Overdraft வசதியானது கணக்கு துவங்கும் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை உங்களின் வங்கி கணக்கில் குறைந்தது 6 மாதங்கள் அதிகமான பணப்பரிவர்த்தனை செய்திருந்தால் மட்டுமே இந்த வசதியானது வழங்கப்படுகிறது .
8.அடுத்தது இந்த கணக்கினை துவங்கியாதும் உங்களுக்கு ஒரு Rupay Type ATM அட்டை வழங்கப்படுகிறது .இந்த ATM அட்டையை வாங்கி அதனை பயன்படுத்தி ஒரே ஒரு முறையாவது ஏதாவது பணப்பரிமாற்ற பரிவர்த்தனை அல்லது பணமல்லாத பரிவர்த்தனை இதில் ஏதாவது ஒன்றினை செய்திருந்தால் பொது பொது உங்களை கணக்கை துவங்கி வெறும் 90 நாளைக்குள் உங்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட நேரிட்டால் உங்களுக்கு 2 இலச்சம் வரையில் இன்சூரன்ஸ் பணத்தினை பெற முடியும் .
மற்ற சாதாரண Zero Balance கணக்கை துவங்கினால் இதுபோன்ற சலுகைகள் கிடைக்காது .
கணக்கை துவங்க குறைந்தப்பற்ற தகுதி :
1.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் ,
2..குறைந்தது 10வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் .அவ்வாறு 10வயது குழந்தைக்கு இந்த கணக்கை துவங்கும் பொது அந்த கணக்கானது Joint Account ஆகவே கருதப்படும் .
அந்த குழந்தை 18 வயதை எட்டும் வரையில் இந்த கணக்கானது Joint Account ஆகவே செயல்படும் .அந்த கணக்கினை அந்த குழந்தையின் பெற்றோர் நிறுவகிக்கலாம் .
மேலும் அந்த குழந்தை 18வயதை பூர்த்தி செய்த பின்னர் தனிநபர் கணக்காக மாற்றிக்கொள்ள முடியும் .
3.18வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனிநபர் கணக்கினை துவங்கி கொள்ள முடியும் .
கணக்கை துவங்க தேவைப்படும் ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை .
3.உங்களின் முகவரிக்கான ஏதாவது ஒரு ஆவணம் (ஆதார் அட்டை ,வாக்காளர் அடையாள அட்டை ,பாபோர்ட் ,மேலும் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணம் ஏற்றுக்கொள்ளப்படும் )
கணக்கை துவங்கும் வழிகள் :
இந்த கணக்கினை உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் சென்று துவங்க முடியும் ஆன்லைனில் இதுவரை துவங்குவதற்கான எந்த வசதியும் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
Bro enaku 24000 thousandla 20000 than vanthiruku pf enna panrathu plz reply guide me 7845435301
ReplyDeleteEpdi ungala contact panrathu therila
ReplyDeletemanikandan1520@gmail.com
ReplyDelete