PF Account new announcement Next 3 month Reduce our Pf Contribution
Introduction :
தற்போது நமது EPFO இந்த மே மாதம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
இதன்படி அடுத்து வரும் ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்த அறிவிப்பினை நமது நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார் .
அறிவிப்பு பற்றிய முழு விளக்கம் :
இந்த அறிவிப்பில் கூறியுள்ளது என்னெவென்றால் தற்போது நிலவிவரும் கொரோன நோயால் மக்கள் மத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது . இதனை தவிர்ப்பதற்காகவும் மக்களின் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .வரும் ஜூன் ,ஜூலை ,ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் உங்களின் மாத வருமானத்தில் இருந்து உங்களின் pf பங்களிப்பு 12% இருந்து 10%ஆக குறைக்கப்பட்டுள்ளது .
அதேபோல உங்களின் நிறுவனம் உங்களின் PF கணக்கிற்கு வழங்கவும் பங்களிப்பும் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு 12% இருந்து 10%ஆக குறைக்கப்பட்டுள்ளது .
%குறைப்பதற்கு காரணம் :
இதுவரையில் உங்களின் pf பங்களிப்பு உங்களின் மாத வருமானத்தில் இருந்து 12% வரையில் பிடித்தம் செய்யபட்டு வந்த நிலையில் .தற்போது இந்த பிடித்தம் அளவானது 12% இருந்து 10% ஆக குரைக்கப்பட்டுள்ளது .
தெழிலாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் :
இதற்க்கு காரணம் நீங்கள் உங்களின் pf கணக்கில் சேமிக்கப்படும் நீதியானது வருங்காலத்திற்க்காக மட்டுமே சேமிக்கப்படுவதால் அந்த சேமிப்பு பணத்தால் தற்போது எந்த ஒரு பயனும் இல்லாமல் இருப்பதால் அந்த சேமிப்பு பணத்தின் பங்களிப்பை குறைக்க திட்டமிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளது .இதன்படி ஒருவரின் வருமானத்தில் ஒருவரின் பங்களிப்பு 12% இருந்து 10% ஆக குறைக்கப்படுவதால் அவருடைய மாத வருமானத்தில் 2% அதிகரிக்கும் இதனால் அவருடைய மாத வருமானம் அடுத்த 3 மாதங்கள் 2% அதிகமாக கிடைக்கப்பெறும்.
இதனால் அவருடைய அடிப்படை சிறு சிறு தேவைகளை அவர்களால் பூர்த்தி செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் .
நிறுவனங்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
இதே போன்றும் நிறுவனத்தின் பங்களிப்பு 12% ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது .இதனால் உங்களின் நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளருக்கு 2%வரையில் நிதி சேமிக்கப்படும் இதனால் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த தொகையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
ஆதலால் அடுத்து வரவிருக்கும் 3மாதங்கள் உங்களின் PF பங்களிப்பு 24% ல் இருந்து 20% குரைக்கப்பட்டு உங்களின் PF கணக்கில் செலுத்தப்படும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் :
இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
No comments:
Post a Comment