Thursday, May 14, 2020

PF Account Related Doubt with best Solution Full details

PF Account Related Doubt with best Solution Full details



Introduction :

நமது PF கணக்கில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கிறது அதில் அதிகமாக அனைவருக்கும் இருக்கும்  இரண்டு முக்கியமான சந்தேகங்களை இந்த பதிவில் பார்க்கலாம் .

கேள்வி :


தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் COVID - 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி எத்தனை முறை நாம் PF Advance பணத்தினை claim செய்ய முடியும் .



பதில் : 

தற்போது உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த குறிப்பிட்ட காரணத்தை பயன் படுத்தி பலரும் அவர்களுடைய PF கணக்கில் இருந்து Advance தொகையை எடுத்து கொள்ளலாம் எனவும் EPFO அறிவித்திருந்தது .

இதன் படி  COVID  - 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி விண்ணப்பித்தால் 3 நாளைக்குள் உங்களின் Claim பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு வரும் எனவும் குறிப்பிட பட்டிருந்தது .

ஆதலால் பலரும் covid -19 என்கிற காரணத்தை தேர்வு செய்து 2 அல்லது அதற்க்கு மேல் Claim செய்வதற்கு முற்படுகிறார்கள் .


இதற்க்கு pf அலுவலகம் அறிவித்துள்ள விளக்கத்தின்படி  ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த COVID - 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது .

ஒரு முறைக்கு மேல் அந்த குறிப்பிடட காரணத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் கூற பட்டுள்ளது . 


கேள்வி : 2



நமது PF பணத்தை Claim செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது உங்களின் வங்கி Passbook அல்லது Cheque Leaf யை பதிவேற்றம் செய்யவேண்டும் ஆனால் Salary Bank Account வைத்திருப்பவர்களிடம் வங்கி Passbook அல்லது Cheque Leaf இவை இரண்டுமே இருக்காது .

இவர்கள் எப்படி விண்ணப்பம் செய்வது என  அனைவருக்கும் சந்தேகம் உள்ளது .இதற்கான தீர்வை பார்க்கலாம் .




பதில் :

வங்கி Passbook அல்லது Cheque Leaf  இவை இரண்டும் இல்லாதவர்கள் அவர்களின் வாங்கி statement யை பதிவிறக்கம் செய்து அதனை JPE அல்லது JPEG ஆகிய Format ல் மாற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் EPFO நிறுவனம் அறிவித்துள்ளது .


உங்களால் உங்களின் வங்கி Statement யை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லையென்றால் உங்களின் வங்கியில் சென்று விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளவும் முடியும் .

உங்களுக்கு வங்கியில் statement print கொடுக்கும்பற்றத்தில் அதனை scan செய்து விண்ணப்பிக்கலாம் .


கேள்வி 3:


COVID 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி ஒருமுறை பணம் எடுத்த பின்னர் அடுத்த முறை எந்த தேர்வினை தேர்வு செய்து advance தொகை எடுக்க முடியும் .

பதில் :

தற்போது உள்ள covid 19 என்கிற தேர்வினை பயன்படுத்தி ஒரு முறை மட்டுமே ஆன்லைனில் Advance தொகை claim செய்ய முடியும் .அதற்க்கு பின்னர் நீங்கள் Advance  Claim செய்யவேண்டு மென்றால் Illness என்கிற தேர்வினை பயன்படுத்தியே Advance claim செய்யமுடியும் .

இந்த தேர்வின் மூலமாக employee share ல் மட்டும் உள்ள PF பணத்தில் 75% எடுக்க முடியும் .

கேள்வி 4:

ஒருவரால் எத்தனை முறை PF Advance தொகை எடுக்க முடியும் .

பதில் :

ஒருவரால் அதிகப்பற்றமாக ஒரு financial year நிதியாண்டில் 5 முறை மட்டுமே PF Advance தொகையை எடுக்க முடியும் .

அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் மட்டுமே எடுக்க முடியும் .



மேலும் இதுபோன்ற முக்கியனம மற்றும் பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையத்தலைத்தை பின்தொடரவும் .



**********************நன்றி ***************************

4 comments: