Wednesday, May 6, 2020

How to apply TN E Pass Full details with Approved Proof

சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .


Introduction :


தற்போது  தமிழக  அரசு  சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைனில் வழியாக விண்ணப்பித்து அதற்கான அனுமதியினை பெற்று சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்று அரித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

இதன்படி வெளி ஊர்களில் பணிபுரியும் பணியாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு ஒரு அவசர தேவைக்காக மட்டும் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்குகிறது .


இதற்க்கு நீங்கள்  ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து  அதற்கான அனுமதியை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை click செய்யவும் .


https://tnepass.tnega.org/#/user/pass


Step - 1

இந்த இணையதல முகவரியை click செய்தவுடன் உங்களுக்கு ஒரு அக்கம் தோன்றும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவேண்டும்  அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் captch எண்ணினை அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்யும்போது உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு One Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதி செய்துகொள்ளவும் .

Step - 2

இதன் பின்னர் உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் இரண்டு விதமான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் தனிநபர் என்பதை தேர்வு செய்யவும் .



Step  - 3

இதன் பின்னர் விண்ணப்பங்கள் தோன்றும் மொத்தம் மூன்றுவிதமான விண்ணப்பங்கள் தோன்றும் அதில் முதலாவதாக தோன்றும் விண்ணப்பத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய தகவல்களை மட்டும் பகிர்கிறேன் .


 முதல் விண்ணப்ப பக்கம்  அதில் உங்களின் விபரங்களை பூர்த்தி செய்யவேண்டும்
.
படிவம் ஓன்று :

அதில் முதலாவதாக என்ன காரணதடகத்திற்கு ஊருக்கு செல்ல விருப்புகிறீகள் என்பதை தேர்வு செய்யவேண்டும்.அந்த காரணத்திற்க்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டி இருக்கும் என்பது குறிப்பிட தக்கது  .


குறிப்பாக உடல்நலம் சரியில்லாதவர்களை கவனித்துக்கொள்ளவும்  மருந்து வாங்கி தருவதற்காகவும் செல்ல விரும்பினால் அதற்கான மருந்து சீட்டுகள் அல்லது மருத்துவரிடம் வாங்கிய medical report இதில் ஏதாவது ஒன்றினை பதிவேற்றம் செய்யவேண்டி இருக்கும் இது மூன்றாவதாக தோன்றும் படிவத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் .


  மேலும் படிவம் ஒன்றை  பூர்த்தி செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டையை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தின் அளவானது 500Kb அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும் .

நீங்கள் பயணம் செய்யும் வணக்கத்தின் எண் மற்றும் வாகனம் பற்றிய தகவலையும் பதிவு செய்யவேண்டும் .


படிவம் இரண்டு :

இதில் உங்களின் தற்போதைய முகவரி மற்றும் நீங்கள் செல்லவிருக்கும் முகவரி ஆகிய  இரண்டு தகவல்களையும்  பதிவு செய்யவேண்டும் .


படிவம் மூன்று :

படிவம் மூன்றில் நீங்கள் என்ன காரணத்திற்க்காக ஊருக்கு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளீர்களோ அந்த காரணத்திற்க்கான சான்றிதழை பதிவேற்றம் செய்யவேண்டும் .

பதிவேற்றம் செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .



இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு உங்களின் Application என்னானது அனுப்பப்படும் .

இதன் பின்னர் நீங்கல் விண்ணப்பித்த அடுத்த ஓன்று அல்லது இரண்டு நாளைக்குள் உங்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களின் காரணம் நியமானதாக இருந்தால் உங்களுக்கு அனுமதி வழங்கப்படும் .

இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுமதி வழங்கிய  SMS ஓன்று அனுப்பப்படும் அதன் பின்னர் அந்த Sms open செய்தால் அதில் நீங்கள் ஊருக்கு செல்வதற்கான அனுமதி கடிதம் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை print எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களின்பயணத்தை தொடரலாம் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்க்கவும் .




மேலும் பயனுள்ள தகவல்களுக்கு நமது இணையதளத்தை பின்தொடரவும் .

No comments:

Post a Comment