Sunday, August 30, 2020

PF Account New update 2020 what is use of this update full details in tamil

PF Account New update 2020  what is use of this update full details in tamil






Introduction :


தற்போது நமது PF கணக்கில் ஒரு புதிய Update ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது அது என்னவென்றால் .நாம்  ஒவ்வொருவரும் நமது PF பணத்தில் Advance  claim செய்திட முற்படும்போது Illness என்கிற தேர்வினை தேர்வு செய்து   claim  செய்வோம்  இனிமேல் நீங்கள் illness என்கிற தேர்வினை ஒரு மாதத்தில் ஒரு முறை மட்டுமே தேர்வு செய்து claim apply செய்ய  முடியும் அதர்க்குக்கு மேல் தேர்வு  செய்ய முடியாது .

இந்த  Update எதற்கு ?
என்ன பயன் ?
இதனை பற்று முழுமையாக பார்க்கலாம் .




Illness Update Reason :


தற்போது நமது PF கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள Illness(Claim Approved with in One month) என்ன காரணமென்றால் ஒருவர் அவருடைய PF கணக்கிலிருந்து அவருடைய PF Advance பணத்தை ஒரு முறை claim செய்தால் அதன் பின்னர் மறுபடியும் அடுத்த Claim  செய்வதற்கு குறைந்தது 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் .அதற்க்கு முன்னர் claim செய்யும்போது உங்களின் PF claim நிராகரிக்கப்படும் .


இது  தான் தற்போதைய PF கணக்கின் சொல்லப்பட்டுள்ள Condition  ஆகும். ஆனால் நமது மக்கள் பலருக்கும் நமது  PF  கணக்கின் Condition என்ன வென்று தெரியாத காரணத்தால்  ஒரே  மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறை PF Advance claim க்கு விண்ணப்பிக்கிறார்கள் இதனால் நமது PF Claim ஆனது நிராகரிக்க படுகிறது .

இது Illness என்கிற காரணத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்துவிதமான காரணங்களுக்கும் பொருந்தும் .

இதில் குறிப்பாக பலரும் பல முறை PF Advance Claim செய்வதற்கு Illness என்கிற தேர்வினை தேர்வு செய்கிறார்கள் இதனை தவிர்க்கவே இந்த புதிய Update கொண்டுவரப்பட்டுள்ளது .



இனிமேல் ஒரு மாதத்தில் ஒரு முறை Illness என்கிற தேர்வினை தேர்வுசெய்து PF Advance Claim  செய்தால் அந்த மாதத்தில் மறுபடியும்  illness  என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியாது .

இந்த தகவலை  மக்களுக்கு எடுத்து சொன்னாலும் அது அனைவருக்கும்  தெரியவருவது மிகவும் கடினம் என்பதால்  இதனை தவிர்க்க நமது  PF claim செய்யும் பக்கத்தில் இந்த Update யை கொண்டுவரப்பட்டுள்ளது .

மறுபடியும் Illness தேர்வு செய்ய முடியுமா ? :


மறுபடியும் நீங்கள் Illness என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியும் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் .



ஒரு மாதத்தில் ஓரு முறை மட்டுமே இந்த Illness என்கிற தேர்வினை தேர்வு செய்ய முடியும் .அதன் பின்னர் Illness என்கிற தேர்வு Red Marking பகுதிக்கு சென்றுவிடும் .

இதன் பின்னர் அடுத்த 30 நாட்களுக்கு பின்னர் மறுபடியும்  நாம் claim செய்வதற்கு  ஏற்ற பகுதிக்கு மாறிவிடும் .

Note :


எந்த Update எந்த விதத்திலும் எந்த ஒரு கஷ்டத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை PF Condition தெரியாதவர்கள் தவறாக PF Advance Claim செய்வதை இதன் மூலமாக தரவிர்க்கலாம் .


1 comment: