PF Full Amount Withdrawal without Tax Full details new update 2020
Introduction:
இந்தப்பதிவில் உங்களின் PF பணத்தை எந்த ஒரு tax பிடித்தம் இல்லாமல் எப்படி Claim
செய்வது என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் இந்த பதிவு தற்போதைய புதிய update
ஆகும் .
நமது PF கணக்கில் நாம் நமது முழு PF தொகையை எடுக்க முற்படும்போது உங்களின் PF
கணக்கில் உள்ள மொத்த பணத்தின் அளவு 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும்போது
உங்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது .
உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த PF பணத்தின் அளவு 50,000 ரூபாய்க்கு
குறைவாக இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .
2016 வருடத்திற்கு முன்னர் வரி பிடித்தம் :
தற்போது ஒருவருடைய PF கணக்கில் ரூபாய் 50,000க்கு அதிகமாக இருக்கும் பற்றத்தில்
அவர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படுகிறது .
ஆனால் 2016/05/31 க்கு முன்னர் வரையில் ஒருவருடைய PF கணக்கில் உள்ள
பணத்தின் மதிப்பு 30,000 ரூபாய் இருந்தாலே வரி பிடித்தம் செய்யப்படும் என்பது
குறிப்பிட தக்கது .
இந்த நிலையானது 2016/06/1 முதல் 30,000ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக
அதிகப்படுத்த பட்டது .
தற்போதைய வரி பிடித்த நிலவரம் :
தற்போது உள்ள நிலவரப்படி ஒருவர் அவருடைய PF கணக்கில் இருந்தது Advance தொகையாக
எவ்வளவு பணம் எடுத்தாலும் வரி பிடித்தம் இருக்காது .
அவர் அவருடைய முழு PF தொகையை எடுக்க முற்படும்போது அவருடைய PF கணக்கில் உள்ள
மொத்த தொகையை கணக்கில் எடுத்து அவர் பான் அட்டை மட்டும் படிவம் 15G /15H
இணைத்திருக்கிறார் என்பதை பொறுத்து வரி பிடித்தம் செய்யப்படும் .
PF பணம் 50,000க்கு கீழ் உள்ளவர்கள் :
உங்களின் PF கணக்கில் உள்ள Employee Share ,Employer Share ,மற்றும் Pension இவை
மூன்றும் சேர்த்து உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு குறைவாக
இருக்கும் பற்றத்தில் அவர்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும்
இருக்காது என தாம்பரம் PF அலுவலகம் தெரிவித்துள்ளது .
PF பணம் 50,000க்கு மேல் உள்ளவர்கள் :
உங்களின் PF கணக்கில் உள்ள Employee Share ,Employer Share ,மற்றும் Pension இவை
மூன்றும் சேர்த்து உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு
அதிகமாக இருக்கும் பற்றத்தில் நீங்கள் உங்களின் PF பணத்தை 5
வருடங்களுக்கு முன்னர் withdrawal செய்ய விரும்பினால் ,
நீங்கள் உங்களின் PF கணக்கில் கட்டாயம் பான் அட்டையை இணைத்திருக்க
வேண்டும் ,படிவம் 15G /15H யை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்க
வேண்டும். அல்லது PF அலுவலகத்தில் சமர்பித்திருக்க வேண்டும் ..
இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தம் இருக்காது என்பது
குறிப்பிடத்தக்கது .
நீங்கள் பான் அட்டை மட்டும் இணைத்திருந்து படிவம் 15G /15H சமர்பிக்காமல்
இருக்கும்போது உங்களுக்கு 10% வரையில் வரி பிடித்தம் இருக்கும் .
நீங்கள் பான் அட்டை மற்றும் படிவம் 15G /15H இவை இரண்டும் சமர்பிக்காமல் PF
Amount Withdrawal செய்யும்போது உங்களுக்கு 34.608% வரையில் வரி
பிடித்தம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
.
அல்லது
அவருடைய PF கணக்கில் உள்ள மொத்த தொகை 50,000க்கு அதிகமாக இருக்கும்போது
அவர் அவருடைய PF பணத்தை 5 வருடங்களுக்கு பின்னர் எடுக்கும்போது அவருக்கு எந்த ஒரு
வரி பிடித்தமும் இருக்காது .
உதாரணமாக:
ஒருவருடைய
PF கணக்கில் உள்ள PF பணத்தின் மதிப்பு 50,000க்கு அதிகமாக இருக்கும் பற்றத்தில்
அவருடைய பணி அனுபவம் 2 வருடங்கள் என்றால் அவர் அவருடைய PF பணத்தை அடுத்த 3
ஆண்டுகள் கழித்த பின்னர் withdrawal செய்தால் அவருடைய காத்திருப்பு காலம் 5
வருடங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு எந்த ஒரு வரி
பிடித்தமும் இருக்காது .
நீங்கள் மேலே குறிப்பிட்ட அந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களின் PF பணத்தை எடுக்க
முற்படும்போது மேலே குறிப்பிட்டுள்ளது போல உங்களின் PF கணக்கில்
கட்டாயம் பான் அட்டையை இணைத்திருக்க வேண்டும் மற்றும் படிவம் 15G /15H யை
பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது PF
அலுவலகத்தில் சமர்பித்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இல்லாமல் PF பணத்தை
எடுக்க முடியும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ பதிவை பார்க்கவும் .
No comments:
Post a Comment