நாளை முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடை முறைக்கு வருகிறது
Introduction :
தமிழகத்தின் முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஆவின் பால் விலை
லிட்டருக்கு 3ரூபாய் குறைக்கப்பிடும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்
அதற்கான ஆவணத்தில் கையெழுந்திட்டார்.
இந்த விலை குறைப்பானது நாளை மே 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆவின் பால் விளைகுறைப்பு :
தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி நாளை மே 16-ம் தேதி முதல் தமிழகத்தில் 5
வகையான ஆவின் பால் விநியோகத்தின் விலை லிட்டருக்கு 3ரூபாய் குறைப்பு நடை முறைக்கு
வருகிறது .
புதிய பால் விலை:
தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி ஆவின் நீல நிற பாலின் விலை லிட்டர் 40
ரூபாய்க்கும் அரை லிட்டர் 20 ரூபாய்க்கும் விற்பனையக்கும்.
அதே போன்று பச்சை நிற பாலின் விலை அரை லிட்டர் ரூபாய் 22 க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
ஆறஞ்சு நிற பால் விலை அரை லிட்டர் ரூபாய் 24 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று இளஞ்சிவப்பு நிற பால் அரை லிட்டர் விலை ரூபாய் 18.50 க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
மேலும் பால் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கும் லிட்டருக்கு 3 ரூபாய் விலை
குறைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
இதன் படி ஆவின் நீல நிற பால் பாக்கெட் விலை பால் அட்டை வைத்திருப்போறுக்கு
ரூபாய் 37க்கும் பச்சை நிற பாக்கெட் விலை லிட்டருக்கு ரூபாய் 42 ஆகவும்.
ஆறஞ்சு நிற பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 46 ரூபாய்க்கும், இளஞ்சிவப்பு நிற
பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய புதிய முதல்வராக பதவியேற்ற திரு ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 7ம் தேதி
பதவியேற்றதும் அவர் 5 விதமான கோப்புகளில் கையெழுந்திட்டார்.அதில் இரண்டாவதாக
கையெழுதிட்ட ஆவணம் ஆவின் பால் விலை குறைப்பு ஆகும்.
அதன்படி நாளை மே 16 ம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு நடைமுறைக்கு
வருகிறது.
மேலும் இந்த விலை குறைப்பினால் ஆண்டுக்கு 300கோடி வரையில் இழப்பு ஏற்படும்
என்றும் ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment