Sunday, February 7, 2021

வீடு தேடி வரப்போகும் வாக்காளர் அடையாள அட்டை தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி

 வீடு தேடி வரப்போகும்  வாக்காளர் அடையாள அட்டை  புதிய வசதி




Introduction :


தற்போது தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு அஞ்சல் துறையின் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் புதிய வசதியை தமிழக தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை புதிய வசதி :


தற்போது தமிழத்தில் வரவிருக்கும் 2021 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வீடுகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தபால் மூலமாக அவர்களின் வீட்டுக்கே அனுப்பும் புதிய வசதியை நேற்று சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி துவங்கி வைத்தார்.



இதன் படி pan அட்டை எப்படி வீடு தேடி வருகிறதோ அதே போல வாக்காளர் அடையாள அட்டையும் வீடு தேடி வரும்.

இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தபால் துறையுடன் ஒரு புதிய ஒப்பந்தம் ஒன்றையும் பதிவு செய்துள்ளது.
 இதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தபால் துறை மூலமாக அவரவர் வீடுகளுக்கு  வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் தபால் துறை மூலமாக வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்படும் என கூற படுகிறது.

இந்த வசதியால் அனைவருக்கும் புதிய டிஜிட்டல் smart voter ID card வழங்கப்படும்.

தற்போது கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கவலைப்பட தேவை இல்லை கூடிய   விரைவில் உங்களுக்கு உங்களின் வீடு தேடி வரப்போகும் புதிய smart voter id card.


இதே போன்று online வழியாக உங்களின் digital Voter ID card யை பதிவிறக்கம் செய்யும் புதிய வசதியையும் கூடிய விரைவில் வழங்க உள்ளது.

வரப்போகும் புதிய digital voter id ல் உங்களின் புகைப்படம் கூடிய  சுய விபரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வசதி பிப்ரவரி 1முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை செயர்பாட்டிற்கு வரவில்லை. கூடிய விரைவில் செயல் பாட்டில் வரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment