PF சந்தா தாரர்களுக்கு ஒரு கெட்ட செய்தி புதிய பட்ஜெட் தாக்கல் 2021
Introduction :
தற்போது மத்திய அரசின் 2021 க்காக புதிய பட்ஜெட் தாக்கலில் PF சந்தா தாரர்களுக்கு
ஒரு கெட்ட செய்தியாகவே அமைந்துள்ளது .
ஆமாம் இனி ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் PF கணக்கில் பணம் Deposit
செய்யப்பட்டால் அந்த PF சந்தா தாரர்களுக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்று
புதிய பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
PF கணக்கில் இருக்க கூடிய மிக முக்கியமான ஓன்று வரிவிலக்கு தற்போது அந்த பயனையும்
பறிக்கும் வண்ணம் தற்போதைய பட்ஜெட்தாக்கல் அமைந்துள்ளது.
புதிய பட்ஜெட் தாக்கல் :
தற்போது பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட 2021க்காக புதிய
பட்ஜெட் ல் pf சந்தா தாரர்களுக்கு பாதகம் விளைவிக்கும் விதமாக உள்ளது.
ஆனாலும் இது அதிகம் வருவாய் இட்டும் நபர்களுக்கே பாதகம் விளைவிக்கும் விதமாக
உள்ளதே தவிர அனைத்து pf சந்தா தாரர்களையும் பாதிக்காது.
2.5 லட்சத்துக்கு மேல் PF deposit செய்பவர்களுக்கு வரி பிடித்தம் :
தற்போது கொண்டுவரப்பட்ட பட்ஜெட் தாக்களின் படி ஒரு தனிநபர் pf கணக்கில்
ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கு மேல் deposit செய்யப்பட்டால் அதனால் கிடைக்கும்
வட்டிக்கு வருபிடித்தம் செய்யப்படும்.
ஒருவருடைய மாத வருமானத்தில் இருந்து 12% தொகையும் அதே 12% தொகையை அவர்
பணிபுரியும் நிறுவனமும் வழங்கும்.
இந்த மொத்த deposit செய்யப்படும் பணத்தின் அளவு ஆண்டுக்கு 2.5 க்கு குறைவாக
இருந்தால் வரி பிடித்தம் இருக்காது.
அதற்க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வரி சலுகை கிடையாது. வரி
பிடித்தம் செய்யப்படும்.
இந்த புதிய கொள்கை அதிக வருவாய் பெரும் நபர்களுக்கு மட்டுமே பாதகமாக உள்ளதே தவிர
மற்றவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
PF கணக்கில் அதிகம் சேமிக்க மிக முக்கிய காரணம் அதிக வட்டி மற்றும் வரி விலக்கு.
இவை இரண்டினால் மட்டுமே அதிகமான நபர்கள் PF கணக்கில் அதிக பணத்தினை சேமித்து
வந்தனர்.
இந்த நிலையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பட்ஜெட் அதை சீர்க்குளைக்கும்
வண்ணம் உள்ளது.
இனி வரும் காலங்களில் pf கணக்கில் பணத்தினை சேமிக்கும் பழக்கம் குறையலாம்.
No comments:
Post a Comment