Friday, February 5, 2021

SBI Bank new Charges Update ATM Insufficient Balance transaction

 SBI Bank new Charges Update ATM Insufficient Balance transaction



Introduction :


தற்போது நாட்டின் மிக முக்கியமான போது துறை வங்கியான SBI  வங்கியானது  தற்போது ஒரு புதிய கட்டண விதியை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இதன் படி இனிமேல் உங்களின் வங்கியில் போதுமான பணம் இல்லாமல் இருக்கும் பற்றத்தில் ATM ல் பணம் எடுக்க முற்பட்டால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது . இதனை பற்றிய முழுமையான தகவலை பார்க்கலாம்.


Rs. 20 with GST charges on insufficient ATM transaction :


தற்போது பொதுத்துறை வங்கியான  SBI வங்கியானது வெளியிட்டுள்ள அறிக்கை என்ன வென்றால்.

இனிமேல் நீங்கள் உங்களின் sbi வங்கியில் போதிய பணம் இல்லாத நிலையில் உங்களின் கணக்கில் உள்ள இருப்புதொகையை தெரிந்துகொள்ளாமல் ATM card யை பயன்படுத்தி பணம் எடுக்க முற்பட்டால் உங்களின் கணக்கில் போதுமான இருப்பு தொகை இல்லாததால் உங்களின் ATM பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டு அப்போது உங்களுக்கு Insufficient Balance error காண்பிக்கப்படும்.




இவ்வாறு பணம் இல்லாமல் பணம் எடுக்க முற்பட்டு உங்களின் பரிவர்த்தனை நிராகரிக்க படும் போது உங்களின் வங்கி கணக்கில் இருந்து 20 ரூபாய் மற்றும் GST கட்டணகள் பிடித்தம் செய்யப்படும்.

ஆதலால் நீங்கள் sbi வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இனி ATM ல் பணம் எடுக்கும் முன்னர் உங்களின் வங்கி இருப்பு தொகையை தெரிந்து கொண்டு பணத்தை எடுக்க முயற்சிப்பது சிறந்தது.



அவ்வாறு தெரிந்துகொள்ளாமல் பணம் எடுக்க முற்பட்டு பரிவர்த்தனை நிராகரிக்க பட்டால் ஒரு ஒரு பரிவர்த்தனைக்கும் 20ரூபாய் +GST பிடித்தம் செய்யப்படும்.

இதுபோன்ற கட்டண பிடித்தத்தை ஏற்கனவே பல தனியார் வங்கிகள் நடைமுறை படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment