Thursday, February 25, 2021

9,10,11 வகுப்பு பயிலும் மாணவர்கள் போது தேர்வு இல்லாமல் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு

 9,10,11 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வு இல்லாமல் தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு


Introduction :


2020-ல் ஏற்பட்ட பெரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
மேலும் இந்த கொரோனா நோயின் தாக்கம் மேலும் தொடர்ந்து நீட்டித்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூட பட்ட நிலையில்லையே இருந்தது.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டது. இதற்காக அரசு தொலைக்காட்சில் வாயிலாக மாணவர்கள் பாடம் கற்கவும் பல ஏற்படுகளும்  செய்யப்பட்டிருந்தன .

இந்த சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் 9,10,11 பயிலும் மாணவர்களுக்கு போது தேர்வினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆதலால் 2020 - 2021 கல்வியாண்டின் 9,10,11 பயிலும் மாணவர்கள் பொது தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் புதிய அறிவிபை வெளியிட்டுள்ளார்.

தற்போது கொரோனா நோயின் தாக்கம் குறைந்த காரணத்தால் 9,10,11,12 ஆகிய வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

9,10,11 பயிலும் மாணவர்களுக்கு பொது தேர்வு செய்யப்பட்டது மாணவர்களிடயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment