Thursday, July 15, 2021

PF Advance Claim was Settled now with in 72 hours only

 PF Advance Claim was Settled now with in 72 hours only



Introduction :

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேவைக்காக நமது PF கணக்கில் இருந்து பணத்தை Advance ஆக பெற விண்ணப்பிப்போம்  அவ்வாறு விண்ணப்பிக்கும்போது அந்த Advance பணமானது நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் நமக்கு கிடைக்காது அதிகமான நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

தற்போது நீங்கள் advance தொகையை சீக்கிரமாக பெற EPFO ஒரு புதிய OPTION யை வெளியிட்டுள்ளது அதை பற்றிய முழுமையான தகவளை இப்போது பார்க்கலாம்.


PF Advance Settled with in 72 Hours :

தற்போது உலக நாடுகள் முழுவதும் ஏற்பட்டுள்ளது கொரோனா நோயால் பொதுமக்கள் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றர்கள் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உதவும் வகையில் PF கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு covid 19 என்கிற ஒரு தேர்வினை கடந்த 2020 ல் EPFO வெளியிட்டிருந்தது.

தற்போது 2021 லும் இந்த நோயின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் PF நிறுவனமானது Covid 19 என்கிற தேர்வினை EPFO இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இப்போது நாம் PF advance பணத்தை வேகமாக பெற வேண்டும் என்றால் நீங்கள் advance பணம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது  Covid 19 என்கிற Advance option யை தேர்வு செய்து Advance பணத்தினை claim செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது உங்களின் PF பணமானது அதிகப்பற்றமாக 72 மணி நேரத்திற்குள் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று EPFO அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

PF Advance பணத்தினை மிகவும் விரைவாக பெற வேண்டுமென்றால் இந்த Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.


How many no of time use this option :

இந்த முறையினை பயன்படுத்தி மொத்தம் 2முறை மட்டுமே PF Advance amount claim செய்ய முடியும்,

நீங்கள் ஏற்கனவே 2020 ல் Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து ஒரு முறை advance amount எடுத்திருந்தால் தற்போது ஒரு முறை மட்டுமே உங்களால் PF ADVANCE எடுக்க முடியும்,

2முறை வரையிலும் இந்த Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து claim செய்யலாம் அதன் பின்னர் மறுபடியும் advance claim செய்ய நேரிட்டால் Illness என்கிற தேர்வினை தேர்வு செய்யும்.


EPFO New Tweet :

ஏற்கனவே விண்ணப்பித்த பலரும் எங்களுக்கு advance claim பணம் வர அதிக நாட்கள் ஆகிறது என்று குறிப்பிட்ட நிலையில் தற்போது 72 மணி நேரத்திற்குள் Advance claim settled செய்யப்படும் என்று EPFO Tweet செய்துள்ளது.


How much Amount take on Advance in Covid 19 :

Covid 19 என்கிற தேர்வினை தேர்வு செய்து Advance amount claim செய்தால் எவ்வளவு பணம் நாம் எடுக்க முடியும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அதை பார்ப்போம்.

நீங்கள் advance பணம் claim செய்யும்போது நீங்கள் தேர்வு செய்யும் காரணம் covid 19 ஆக இருந்தால் உங்களுக்கு 75%employee +employer share ல் எடுத்துக்கொள்ள முடியும்.

அல்லது

 உங்களின் மாத சம்பளத்தில் basic +DA என குறிப்பிட பட்டிருக்கும் தொகையை கூட்டினால் கிடைக்கும் பணத்தில் 3மாத சம்பள தொகை கிடைக்கும்,

மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளில் எது மிக குறைவான தொகையாக உள்ளதோ அந்த பணத்தினை நீங்கள் advance தொகையாக பெற முடியும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் வரக்கூடிய பணத்தின் அளவை விட குறைவான தொகையை நீங்கள் தேர்வு செய்தால் அந்த தொகையானது கிடைக்கும்.


Eligibility of PF Advance in Covid 19 :

நீங்கள் PF கணக்கில் இருந்து Advance பணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்க்கு தகுதி உங்களின் PF கணக்கில் DOE தேதி குறிப்பிட படாமல் இருக்க வேண்டும். DOE தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களால் advance பணத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.

No comments:

Post a Comment