Thursday, July 22, 2021

Aadhar card linked with Mobile using new method new update

 வீட்டில் இருந்தபடியே ஆதார்  எண்ணுடன் தொலைபேசி எண்ணினை இணைத்திட வந்துவிட்டது புதிய Update.


Introduction :


தற்போதைய நிலையில் ஆதார் அட்டை என்பது அனைத்துவகையான சேவைகளை  பெறுவதற்க்கான ஒரு முக்கியமான ஆவனமாக கருத்தப்படுகிறது.

இந்த ஆதாரில் ஏதாவது தவறுகள் இருந்தால் online ல் திருத்தம் செய்யும் பலவிதமான வழிகளும் தற்போது உள்ளது.

அதில் குறிப்பாக ஒரு சில முக்கிய சேவைகளை தவிர அணைத்து தகவலையும் online வழியாக நம்மால் திருத்தம் செய்ய முடியும்.


அவற்றில் முக்கியமாக நமது ஆதார் எண்ணுடன்  தொலைபேசி எண்ணினை இணைப்பதற்கு online ல் வழிகள் ஏதும் கிடையாது.

தொலைபேசி எண்ணினை இணைப்பதற்கு  நாம் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும் அல்லது தபால் அலுவலகத்தின் மூலமாக இணைக்க முடியும். இது தவிர வீட்டில் இருந்து இணைப்பதற்கு வழிகள் ஏதும் இல்லை.


New Update aadhar card link வித் mobile number :


தற்போது தபால் துறையின் Ippb ஆனது ஆதார் சேவையினை வழங்கும் UIDAI உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு புதிய tweet ஒன்றை Ippb ஆனது வெளியிட்டிருந்தது.

இதன்படி aadhar எண்ணுடன் தொலைபேசி எண்ணினை இணைக்க எங்கும் அலைய தேவை இல்லை. உங்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து உங்களின் தொலைபேசி எண்ணினை உங்களின் aadhar எண்ணுடன் இணைத்து தரும் விதமாக ஒரு புதிய Update ஒன்றை Ippb கொண்டுவர உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.



இதன்படி உங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள IPPB வங்கி ஊழியர் உங்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து உங்களின் aadhar சேவையினை வழங்குவார்கள்.

அதன்படி இந்தியாவில் 650 post payment bankல் உள்ள 1.46லட்சம் ஊழியர்கள் மூலமாக உங்களின் aadhar எண்ணுடன் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைத்திட மற்ற தகவல்களை திருத்தம் செய்திடவும் உங்களின் வீடுகளுக்கே வந்து தகவல்களை பெற்று உங்களின் aadhar எண்ணில் update செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த சேவைக்கு மற்ற சேவை கட்டனைத்தை காட்டிலும் கட்டணம் சற்று அதிகமாக இருக்கலாம்.




இந்த சேவைக்கான கட்டண விபரம் இதுவரை வெளியாக வில்லை.

இந்த சேவையை எப்படி பெறுவது என்பதற்கு எந்த ஒரு தொலைபேசி எண்களும் இதுவரை வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை நடைமுறைக்கு வந்தால் மக்கள்  பலருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

No comments:

Post a Comment