Wednesday, July 7, 2021

ஆதார் அட்டையின் இரண்டு முக்கிய சேவையை இழுத்து மூடிய UIDAI புதிய அறிவிப்பு

 ஆதார் அட்டையின் இரண்டு முக்கிய சேவையை இழுத்து மூடிய UIDAI புதிய அறிவிப்பு



Introduction :

தற்போது ஆதார் அட்டையானது நாட்டின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் முக்கிய ஆதாரமாக இயங்கிவரும் ஆதார் அட்டை தற்போது மக்களுக்கு எற்கனவே வழங்கி வந்த இரண்டு முக்கிய சேவையை தற்போது நிறுத்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


Aadhar address correction validation letter was stopped :

தற்போது ஆதார் சேவையில் மிக முக்கிய சேவையாக கருத்தப்பட்ட முகவரி மாற்றும் முறையில் நாம் online வழியாக வீட்டில் இருந்துகொண்டே முகவரியை மாற்றம் செய்ய முடியும்.

அந்த முகவரி மாற்று முறையில்  மிக முக்கிய ஆவனமான முகவரி சரிபார்ப்பு கடிதம்(Address validation Letter )முறையை தற்போது UIDAI ஆனது நிறுத்தியுள்ளது.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அவர்களின் முகவரியை மாற்ற முகவரி சரிபார்ப்பு கடிதம் முறையை பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் முகவரி சரிபார்ப்பு கடிதத்தை மட்டும் வைத்து எந்த ஒரு முகவரிக்கும் ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ளலாம்.

தற்போது அந்த  முறையை uidai ஆனது முழுமையாக நிறுத்தியுள்ளது.


இதனால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் ஒரு முகவரியில் இருந்து மற்றோரு முகவரிக்கு மாறும் போது அவர்களின் முகவரியை மாற்ற இனிமேல் முகவரி சரிபார்ப்பு கடிதம் (Address validation letter )முறையை இனிமேல் பயன்படுத்த முடியாது.

இதற்க்கு வேறு ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு மட்டுமே இனிமேல் முகவரி மாற்றம் செய்ய முடியும் என்று தற்போது uidai அறிவித்துள்ளது.


2. Aadhar Reprint Option Stopped (ஆதார் அட்டை மறுபதிப்பு சேவை நிறுத்தம் ):


ஆதார் சேவையில் இரண்டாவதாக நிறுத்தப்பிடும் சேவை Aadhar Reprint.

நாம் நமது aadhar அட்டை தொலைந்துவிட்டால் புதிய aadhar அட்டைக்கு Aadhar Reprint  என்கின்ற சேவையை பயன்படுத்தி வந்தோம் தற்போது அதில் காகித வடிவிலான அகலமான ஆதார் அட்டை print செய்யும் சேவையை தற்போது முழுமையாக நிறுத்தியுள்ளது.


இதற்கு பதிலாக PVC வடிவிலான சின்ன வடிவ ஆதார் அட்டையை வழங்கி வருகிறது.

இனி காகித வடிவிலான ஆதார் அட்டை கிடைக்காது அதற்க்கு பதிலாக PVC வடிவிலான ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளும்படியும் மக்களுக்கு UIDAI புதிய  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


No comments:

Post a Comment