Saturday, June 13, 2020

How to Apply for AmmA Cement in online Registration full details

How to Apply for AmmA Cement in online Registration full details





Introduction :

இந்த பதில் நாம்  புதியதாக்க  கட்டிடங்கள் அல்லது வீடுகள்  அல்லது ஏற்கனவே கட்டிய வீட்டினை சரிசெய்வதற்கு தேவைப்படும்   சிமெண்ட்யை  மிக குறைந்தவிலையில்  நமது அரசாங்கமானது விற்பனைசெய்து வருகிறது அதனை வாங்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


தற்போது   நிலவரப்படி ஒரு  மூட்டை சிமெண்ட் ஆனது குறைந்தது 390 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 450ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகிறது .

ஆனால் அம்மா சிமெண்ட் ஆனது மூட்டை ஒன்றிற்கு வெறும் 190 ரூபாய்க்கு  மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது .

நீங்கள் தனியார் நிறுவனத்தின் சிமெண்ட்யை வாங்கினால் உங்களுக்கு இலச்சக்கணக்கில் பணம் செலவாகும் அதே நீங்கள் அம்மா சிமெண்ட் வாங்குவதன் மூலம் நீங்கள் உங்களின் செலவினை குறைத்து உங்களின் பணத்தினை மிச்சம் செய்யமுடியும் .



அம்மா சிமெண்ட் வாங்க நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம் .

How to Apply (Online Registration):

நீங்கள் அம்மா சிமெண்ட் வாங்க ஆன்லைனில் Registration செய்வதற்கு  முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதளத்திற்கு செல்லவும் 

       👉👉👉     https://ammacement.in/Tancem/login.htm


இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே பயனாளிகள் தாங்களே முன்பதிவு செய்ய அந்த தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப பக்கம் தோன்றும் அதனை பூர்த்தி செய்யவேண்டும் .

அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம் 

Application Filling :



1.Benificiary Name: முதலில் உங்களின்  பெயர் ,

2.Mobile No : உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும் ,

3.Email ID : உங்களின் மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்யவும் இருந்தால் பதிவு செய்யவும் ,

4. Ration Card No: உங்களின் ரேஷன் அட்டையின் எண்ணினை பதிவு செய்யவும் ,


5.ID Proof யன கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஆதார் கார்டுயை தேர்வு செய்யவும் .

6.ID No :உங்களின் ஆதார் கார்டு எண்ணினை பதிவு செய்யவும் ,

7.District :உங்களின்  மாவட்டத்தை பதிவு செய்யவும் ,

8.Godown :உங்களுக்கு அருகில் உள்ள சிமெண்ட் குடோன்  பகுதியை  தேர்வு செய்யவும் ,

9. Residential Address : தற்போது நீங்கள் வசிக்கும் முழு முகவரியினை பதிவு செய்யவும் .உதாரணமாக உங்களின் கதவு எண் , தெரு , ஊர் ,மாவட்டம் ,உங்களின் pin code ஆகிய தகவலை பதிவு செய்யவும் .


10.Scheme :இதில் நீங்கள் காட்டும் வீடானது எந்த அரசு திட்டத்தின் கீழ் கட்டவிருந்தால் அதனை தேர்வு செய்யவேண்டும். அல்லது நீங்கள் தனி பட்ட முறையில் உங்களின் சொந்த பணத்தில் கட்டிடம் காட்டினாள் அதனை தேர்வு செய்யவேண்டும் .

அல்லது நீங்கள் உங்களின் பழுதான வீட்டினை சரி செய்வதாக இருந்தால் அதனை தேர்வு செய்யவேண்டும் .

11.Document submit : இதில் நீங்கள் புதுவீடு காட்டினாள் அதற்க்கு Plan Approved ஆவணத்தை காண்பிக்க வேண்டும் நீங்கள் Plan Approved வாங்கி இருக்க வேண்டும் .


நீங்கள் பழைய வீட்டை சரிசெய்ய விரும்பினால் உங்களின் VAO கடிதம் தரவேண்டும் அதனை வாங்கிய பின்னரே நீங்கள் சிமெண்ட் வாங்க முடியும் .

இதில் உங்களுக்கு பொருத்தமான ஆவணத்தை தேர்வு செய்யவேண்டும் .

12.Bags Required :  என்கிற இடத்தில் உங்களுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் தேவை என்பதை பதிவு செய்யவேண்டும் நீங்கள் பதிவு செய்யும் மூட்டைக்கான விளையானத்து கீழே உங்களுக்கு காண்பிக்கப்படும் .

13.Repair Address : இந்த இடத்தில் உங்களின் புதிய வீடு காட்டும் இடத்தின் முகவரி அல்லது நீங்கள் புதுப்பிக்க விரும்பும் வீட்டின் முகவரியினை பதிவு செய்யவும் .

இவையனைத்தையும் பூர்த்தி செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு உங்களின் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் அவையனைத்தையும் ஒரு முறை சரிபார்த்த பின்னர் அந்த பக்கத்தின் கீழே confirm என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யாவும் .

இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதது போல ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கு   ஒரு Reference Number  காண்பிக்கப்படும் அதனை எழுதி வைத்து கொள்ளவும் அல்லது screen short எடுத்து வைத்துக்கொள்ளவும் .



இப்போது இந்த  Reference Number உடன் உங்களின் Plan Approved அல்லது VAO கொடுத்த கடிதத்தை இணைத்து அதனை நீங்கள் தேர்வு செய்த குடோனுக்கு எடுத்து செல்லவும் .


குடோனில் நீங்கள் கொண்டுவந்த ஆவணத்தை சமப்பிக்கவும் இப்போது அவர்கள் உங்களின் தகவலை சரிபோரார்த்த பின்னர் உங்களுக்கு ஒரு CHELLAN  ஓன்று கொடுப்பார்கள் அதனை பேருக்கு அதில் நீங்கள் தேர்வு செய்த சிமெண்ட் மூட்டைகளுக்கான பணம் எவ்வளவோ அதனை பதிவு செய்திருப்பார்கள் .

அதனை கொண்டு அவர்கள் சொல்லும் வங்கியில் அவர்கள் குறிப்பிட்டுள்ள பணத்தினை கட்ட வேண்டும் .


இதன் பின்னர் உங்களுக்கு நீங்கள் பணம் கட்டிய ரசித்து ஓன்று வழங்கப்படும் அதனை பெற்று வந்து குடோனில் கொடுத்தால் உங்களுக்காண சிமெண்ட் மூட்டைகளை அவர்கள் வழங்குவார்கள் .

இவ்வாறு நீங்கள் அம்மா சிமெண்ட் யை பெற்றுக்கொள்ள முடியும் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்


இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து  தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும்  


No comments:

Post a Comment