Thursday, June 11, 2020

Multiple bank account linked with our PF Account problem with solution.

Multiple bank account linked with our PF Account  problem  with solution.


Introduction :

உங்களின் UAN ல் ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு ஒரு குழப்பம் வரும்.

 அதாவது இப்போது உங்களின் UAN ல் 2 அல்லது 3 வேறு வேறு வங்கியின் கணக்குகளை link இணைத்திருந்தால் நாம் PF Claim  செய்யும்போது எந்த வங்கி கணக்கின் காசோலை அல்லது வங்கி passbook யை பதிவேற்றம் செய்வது என்று .

 இப்போது எப்படி உங்களின் வங்கி கணக்கினை உறுதி செய்வது எந்த வங்கி கணக்கின் காசோலை அல்லது வங்கி passbook யை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றால்   .

இதனை உறுதி செய்ய நீங்கள் முதலில் உங்களின் UAN Login செய்யுவேண்டும் .அப்படி login செய்யும்போது உங்களின் சுய தகவல்கள் அதாவது உங்களின் பெயர் மற்றும் உங்களின் விபரங்கள் உங்களுக்கு முதல் Home பக்கத்தில் காண்பிக்கப்படும் .



அவ்வாறு காண்பிக்கப்படும் பக்கத்தின் Bank Account Number யனா கொடுக்கப்பட்டிரும் அதில் உங்களின் வங்கி கணக்கு எண்ணானது காண்பிக்கப்படும் .அதில் உங்களுக்கு எந்த வங்கியின் கணக்கு எண்ணானது காண்பிக்கப்பட்டுள்ளதொ அந்த வங்கியின் காசோலை அல்லது வங்கி passbook யை நீங்கள் PF Claim செய்யும்போது பதிவேற்றம் செய்யவேண்டும் .

அந்த வங்கி கணக்கே உங்களின் UAN டன் இணைக்கப்பட்ட இறுதியான வங்கி கணக்கு ஆகும்  .உங்களால் உங்களின் UAN ல்  இறுதியாக இணைக்கப்பட்ட அந்த வங்கியின் காசோலை அல்லது Passbook யை  தான் நீங்கள் பதிவேற்றம் செய்யவேண்டும்  .

மாறாக வேறு வங்கி கணக்கினை  நீங்கள் பதிவு செய்தால் அந்த கணக்கு verify ஆகாது .

அப்படி இருக்கையில்  உங்களால் PF Claim Submit செய்யவும் முடியாது .

இந்த பதிவின் மூலம் எந்த வங்கி கணக்கின் தகவல்களை PF Claim செய்யும்போது பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன் .

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் . 



இதுபோன்ற பயனுள்ள தகவல்களை நீங்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .

No comments:

Post a Comment