How to find out or Recover Our Forget PF Account UAN full details
Introduction :
இந்த பதிவில் ஒருவர் அவருடைய UAN(Universal Account Number ) மறந்துவிட்டால் அதனை ஆன்லைன் மூலமாக எலியை கண்டுபுடிக்க முடியும் .அதனை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம் .நம்மில் பலருக்கு அவருடைய UAN ஆனது மறந்துபோவது இயல்பான ஓன்று தான் ஆனால் அந்த UAN இல்லாமல் நாம் நமது PF கணக்கில் உள்ள PF பணத்தை எடுக்க முடியாது .
இதற்க்கு கட்டாயம் UAN அந்த UAN மறந்துபோனால் நீங்கள் ஆன்லைன் வழியாக கண்டுபிடித்திட முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும் .
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல ஒரு இணையதள பக்கம் தோன்றும் அதில் Know Your UAN என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
.
இதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Request OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு one Time Password ஓன்று அனுப்பப்படும் அதனை OTP யனா கொடுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் பதிவு செய்யவும் .
இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் captcha யை அதன் அருகில் உள்ள கட்டத்தில் பதிவு செய்யவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Validate OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் OTP verify செய்யப்பட்ட தகவல் குறுஞ்செய்தியாக காண்பிக்கப்படும் .
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல அடுத்து ஒரு பக்கம் தோன்றும் .
இந்த பக்கத்தில் உங்களின் பெயர் ,உங்களின் பிறந்த வருடம் ,ஆதார் எண் ,கீழே கொடுக்கப்பட்டிருக்கும் chaptcha ஆகிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை என்னவென்றால் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணானது உங்களின் uan activation செய்யும்போது கொடுத்த எண்ணாக இருக்க வேண்டும் உங்களின் uan உடன் இணைக்கப்படாத தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படாது .
அதே போன்று உன் களின் uan ஆதார் என்னானது கட்டாயம் இணைத்திருக்க வேண்டும் அவ்வாறு இணைக்காத பற்றத்தில் உங்களின் UAN கண்டுபுடிப்பது மிகவும் கடினம் .
இப்போது மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கு Show My UAN என்கிற தேர்வினை தேர்வு செய்யும்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு உங்களின் UAN ஒரு sms வடிவில் அனுப்பப்படும் .
இவ்வாறு மிகவும் எளிதில் உங்களின் UAN கண்டுபுடிக்க முடியும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
இதுபோன்ற பயனுள்ள தகவலை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின்தொடரவும் .
No comments:
Post a Comment