நாளை முதல் அமலுக்கு வரும் SBI வங்கியின் புதிய கட்டண அறிவிப்பு
Introduction :
State bank of india வங்கியின் புதிய கட்டண அறிவிப்பு நாளை ஜூலை 1 -2021 ம்
தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமான பொதுத்துறை வங்கியாக செயல்படும் SBI Bank
தனது வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் ATM machine களின் வழியாக பணம்
எடுப்பாதற்க்கான புதிய கட்டண பிடித்த செய்யும் விபரங்களை வெளியிட்டுள்ளது.அதனை
பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Money Withdrawal Using ATM and Direct Bank
:
தற்போது SBI Bank ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள தகவல்.
ஜூலை 1க்கு பின்னர் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் 4முறை மட்டுமே இலவசமாக
ATM Machine வழியாகவோ அல்லது வங்கிக்கு நேரடியாக சென்றோம் பணம் எடுக்க
முடியும்.
5வது முறை நீங்கள் ATM Machine வழியாக பணம் எடுத்தால் உங்களுக்கு 15ரூபாய்
+GST கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என்றும்,
மேலும் நீங்கள் நேரடியா வங்கிக்கு சென்று chellan பூர்த்தி செய்து பணம்
எடுத்தாலும் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக எடுக்க முடியும்.
நீங்கள் 4 முறை ATM machine வழியாக பணம் எடுத்த பின்னர் 5வது முறையாக நீங்கள்
வங்கிக்கு சென்று பணம் எடுத்தாலும் அல்லது ATM Machine வழியாக பணம் எடுத்தாலும்
உங்களுக்கு 15+GST ரூபாய் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும்.
இந்த கட்டண பிடித்தம் அணைத்து வகையான வங்கி கணக்கு வைத்திருக்கும்
வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
மேலும் BSBD வகை கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இந்த கட்டண பிடித்தம்
பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
CHEQUE Leaf Charges :
அதே போன்று உங்களுக்கு வழங்கப்படும் காசோலைக்கும் கட்டண பிடித்தம் இருக்கும் என்று
கூறப்பட்டுள்ளது.
காசோலைக்கான கட்டணத்தை பார்க்கலாம்.
நாம் கணக்கு துவங்கியதும் நமக்கு வழங்கப்படும் முதல் 10 காசோலை மட்டும்
இலவசமாக வழங்கப்படும் அந்த 10 காசோலை பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும்
இருக்காது . அதன் பின்னர் வாங்க கூடிய 10 காசோலைகளுக்கு 40ரூபாய் +GST
கட்டணமா பிடித்தம் செய்யப்படும்.
அதே போன்று 25 காசோலைகள் கொண்ட காசோலை களுக்கு 75 ரூபாய் +GST கட்டணமாக
பிடித்தம் செய்யப்படும், மேலும் அந்த காசோலைகளுக்கான பரிவர்த்தனைகளுக்கும்
கட்டண பிடித்தம் இருக்கும் என்று வெளியிட்டுள்ளது SBI வங்கி.
அவசர காசோலைகளுக்காண கட்டணம் 10 காசோலைகளுக்கு 50ரூபாய் +GST கட்டணமாக
பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பிடுகிறது .
குறிப்பு :
மற்ற வங்கி ATM அல்லது வங்கிகளில் பணம் அல்லாத பரிவர்த்தனைகளுக்கு எந்த வித
கட்டணமும் பிடித்தம் செய்யப்படாமட்டது என்று SBI வங்கி அறிவித்துள்ளது .