Thursday, June 17, 2021

PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்க கடைசி தேதியை வெளியிட்ட EPFO

 PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்க கடைசி தேதியை வெளியிட்ட EPFO




Introduction :

தற்போது PF ன் சந்தா தாரராக இருக்கும் அனைவரும் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அவரவர் ஆதார் எண்ணினை அவரவர் PF கணக்கில் இணைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே EPFO அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா நோய் தொற்றின் காரணமாக அந்த  தேதியினை மாற்றி புதிய தேதியை தற்போது வெளியிட்டுள்ளது.

அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Aadhar Link with PF number :

தற்போது கொண்டுவரப்பட்ட சமூக பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு ஒரு PF சந்தா வாடிக்கையாளர்களும் அவர்களின் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம் என அறிவிக்க பட்டுள்ளது.



அது மட்டுமில்லாமல் அவ்வாறு இணைதாள் மட்டுமே இனிமேல் உங்களின் pf கணக்கில் உங்களின் நிறுவனதால் PF சந்தா பணத்தினை செலுத்த முடியும்.

மாறாக ஆதார் எண் இணைக்கப்படாத pf கணக்கில் PF சந்தா செலுத்த படாது.

தற்போதைய நிலை :


ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது கொரோனா நோய் தொற்றின் காரணமாக பலரும் மத்திய அரசிடம் ஆதார் எண்ணினை PF கணக்குடன் இணைப்பாதற்க்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி வலியுறுத்திய காரணத்தால் தற்போது அந்த தேதியை மாற்றி புதிய தேதியை மத்திய அரசு மற்றும் epfo புதிய தேதியை வெளியிட்டுள்ளது.


Aadhar link with PF number Last date :

தற்போது ஆதார் எண்ணுடன் PF எண்ணினை இணைப்பாதற்க்கான கடைசி தேதி 31-08-2021 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் முன்னர் உங்களின் pf கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் உங்களின் pf கணக்கில் pf பணம் வரவு வைக்கப்படமாட்டாது .

மேலும் உங்களின் நிறுவனத்தால் ECR (Electronic Challan cum Return) file செய்ய முடியாது.

ஆதலால் வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உங்களின் pf கணக்கில் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட video வை பார்க்கவும்.

No comments:

Post a Comment