Saturday, June 12, 2021

ஆதார் எண் குறித்து EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 ஆதார் எண் குறித்து EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு




Introduction :

தற்போது EPFO ஆனது ஆதார் எண் குறித்து ஒரு முக்கியமான  தகவலை வெளியிட்டுள்ளது. இனிமேல் ஆதார் எண் இணைக்காமல் இருக்கும் pf கணக்கில் பணம் deposit செய்யவோ withdrawal செய்யவோ முடியாது.
இது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Important of Aadhar card Linked with UAN:


தற்போது சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தில் 142வது பிரிவின் படி தற்போது ஒரு புதிய விதி முறை ஓன்று கொண்டுவரப்பட்டுள்ளது.அதன் படி ஒவ்வொரு PF சந்தாதாரர்களும் அவர்களுடைய PF கணக்கில் ஆதார் எண்ணினை கட்டாயம் இணைக்க வேண்டும்.

அவ்வாறு இணைத்தால் மட்டுமே இந்த மாதம் (ஜூன் 2021)முதல் உங்கள் கணக்கில் PF பணத்தை உங்களின் நிறுவனத்தால் உங்களின்  கணக்கில் Deposit செய்ய முடியும்.



நீங்கள் உங்களின் UAN உடன் உங்களின் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருந்தால் இனிமேல் உங்களின் PF கணக்கில் எந்த ஒரு CONTRIBUTION பணமும் Deposit செய்ய முடியாது.


How to link aadhar Card with UAN number :


மேலும் ஆதார் எண்ணினை உங்களின் UAN உடன் எப்படி இணைப்பது? என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


மேலும் ஆதார் எண்ணினை உங்களின் UAN உடன் இணைப்பது நீங்களோ அல்லது உங்களின் நிறுவனத்தின்  மூலமாகவோ யார் வேண்டுமென்றாலும் இணைத்து கொள்ளலால்.

உங்களின் கணக்கில் ஆதார் எண் இணைக்க படாமல் இருந்தால் உங்களின் Employer ஆல் உங்களின் PF கணக்கில் PF Contribution deposit செய்ய முடியாது.

இவ்வாறு Contribution Deposit செய்யாமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் நிறுவனத்தால் ECR File செய்ய முடியாது.

இதானல் கட்டாயம் உங்களின் UAN ல் உங்களின் நிறுவனம் சாரப்பாக கட்டாயம் ஆதார் எண்ணினை இணைக்க நேரிடும்.

இந்த ஆதார் எண் இணைக்கும் புதிய
 சட்டமானது இந்த மாதம் ஜூன் 2021 முதல் நடைமுறை படுத்துவதாக தற்போது EPFO அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இனிமேல் அனைவரின் PF கணக்கிலும் ஆதார் கட்டாயம் இணைப்பில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment