தமிழ்நாடு அரசு உதவி தொகை ரூபாய் 1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் ? தெரிந்துகொளவ்து எப்படி ?
Introduction:
தற்போது உலகநாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மிகவும் மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர் .
இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக நமது தமிழ்நாடு முதல்வர் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசின் உதவி தொகையாக ரூபாய் 1000 நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார் .
இந்த உதவி தொகையையே பெற்றுக்கொள்ள எந்தெந்த ரேஷன் ஆடை தாரர்கள் தகுதியானவர்கள் என்பதை நாம் ஆன்லைன் வழியாக எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .
தெரிந்துகொள்வது எப்படி ?
இதற்க்கு முதலில் ஒரு தொலைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும் அந்த செயலியின் பெயர் TNEPDS இந்த செயலியின் பதிவிறக்கம் செய்வதற்கான link கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .
Application Download Link :
இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பின்னர் :
இந்த application யை ஓபன் செய்யவும் .இப்போது உங்களுக்கு main Menu அதில் உங்களின் ரேஷன் அட்டை எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது அந்த தொலைபேசி எண்ணினை கொடுக்கப்பட்ட கட்டத்தில் பதிவு செய்யவும் .
அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்த்தில் பதிவு செய்யவும் .
இதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு செய் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்து உங்களின் தொலைபேசி எண்ணினை உறுதிசெய்து கொள்ளவும் .
இப்போது உங்களின் தகவல் திறக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு ஒரு Main Menu அதில் உரிமம் என ஒரு தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
இப்போது அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் கீழே பாருங்கள் அதில் அரசு உதவி தொகை ரூ 1000 என கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்களுக்கு ஓன்று என குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களுக்கு 1000ரூபாய் உதவி தொகை பெற தகுதி உள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும் .
அதன் அருகில் உள்ள கட்டத்தில் 1 என குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் அரசு அறிவித்த உதவி தொகை உங்களுக்கு வழங்கப்பட வில்லை என்பதை உறுதி செய்யமுடியும் .
இந்த செயலியின் மூலமாக இன்னும் அதிகமான தகவல்களை நீங்கள் எளிதில் தெரிந்துகொள்ள முடியும் .
No comments:
Post a Comment