Sunday, January 3, 2021

EPFO 2019 - 2020 Interest rate when deposit our PF Account full details

 EPFO 2019 - 2020 when deposited our PF Account Interest rate  full details








Introduction : 


இந்த  பதிவில் நமது PF கணக்கில் 2019 - 2020 க்கான வட்டி விகிதம் எப்போது   கிடைக்கும் என்பது குறித்து பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் நிலவி வருகிறது  .

மேலும் பல இணையதளத்தில் பலவிதமான வதந்திகளும்  பரப்பப்பட்டு வருகின்றன பரப்பப்பட்டு வருகின்றன .

இதன் உண்மை நிலவரம் என்ன  என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .


Full Details  :

நமது pf 2019 -2020 இந்த நிதியாண்டிற்க்கான வட்டி விகிதமானது வழங்கப்படாத நிலையில் பலவிதமான  பொய்யான தகவல்கள் பலவிதமான இணையத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறதது .இவை அனைத்தும் உண்மை இல்லை அவர்களின் இணையதள பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக இது போன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது .

இதுவரை பரப்பப்பட்ட பொய்யான தகவல்கள்  :


1. 2019 - 2020 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் ஆனது 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்த 8.5% வட்டியை மொத்தமாக PF சந்தா தாரர்களின் கணக்கில் வரவு வைக்க முடியாத நிலையில் 8.15% முதல் தவனையாகவும்.

 அதன் பின்னர் மீதம் உள்ளது 0.35% வட்டி விகிதத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் PFசந்தாதாரர்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் அறிவித்தது முதல் பொய்யானதாகவல் .


இதுவரையில் ஒரு ரூபாய் கூட எந்த ஒரு PF சந்தாதாரர்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படாதது உண்மை .


2. இதன் பின்னர் தீபாவளி வருவதால் அதை வைத்து அடுத்த ஒரு பொய்யானதகவல்கள் பரப்பப்பட்டது .

வரும் தீபாவளியை முன்னிட்டு அனைத்து PF சந்தா காரர்களுக்கும்  8.5% வட்டியானது வழங்கப்பட உள்ளது என்றும் பல விதமான இணையதளத்திலும் செய்திகள் பரப்பபட்டத்து .

ஆனால் இன்று வரையில் எந்த ஒரு வட்டி தொகையும் எந்த ஒரு சந்தாதாரர்கள் pf  கணக்கிலும்  வரவு வைக்கப்பட வில்லை .


3. இதற்க்கு அடுத்தபடியாக வரும் டிசம்பர் மாத  இறுதிக்குள் 8.5%வட்டி செலுத்தப்படுவதாக அடுத்த ஒரு பொய்யானதாகவல்கள் பரப்பப்பட்டது .

4.தற்போது வரும் ஜனவரி 1 ல் புது வருட  அனைத்து PF சந்தாதாரர்களுக்கும் வட்டிவிகிதம் அவர்களின் PF கணக்கில் செலுத்தப்படும் என்றும் ஒரு பொய்யானதாகவல் பரப்பப்பபட்டது அதுவும் தற்போது பொய்யானது குறிப்பிடத்தக்கது .


PF வட்டியின் உண்மையான நிலவரம் :


நமது PF கணக்கின் 2019 - 2020 க்காக  வட்டிவிகிதம் எப்போது நமது PF கணக்கில் செலுத்தப்படும் என்பது குறித்து இதுவரையில் எந்த ஒரு தகவலும்  அரசாலோ அல்லது EPFO  நிறுவனத்தாலோ எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை  .

ஆதலால் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப வேண்டாம் .தற்போது 2020 - 2021 நிதியாண்டு செயற்பாட்டில் இருக்கும் நிலையில் இதுவரையிலும்  2019 மட்டும் 2020 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் டெபாசிட் செய்வது  குறித்து மத்திய அரசு எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது உண்மை .


PF வட்டிவிகிதம் எப்போது டெபாசிட் செய்யபட்டும் என்பதை அரசு அறிவித்த பின்னர் நமது இணையத்தில் இது குறித்த தகவல் வெளியிடப்படும் பார்த்து தெரிந்துகொள்ளவும் . 


No comments:

Post a Comment