ATM ல் பணம் எடுக்கும்போது கவனம் இல்லையெனில் இதற்க்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்
தற்போது வங்கி ATM களில் பணம் எதுக்கூம்போது உங்களின் கணக்கில் எவ்வளவு
பணம் இருப்பு உள்ளது என்பதை தெறித்து அதன் பின்னர் பணத்தை எடுப்பது
நல்லது.உங்களின் வங்கி கணக்கில் போதிய இருப்பு தொகை இல்லாத நிலையில் நீங்கள்
உங்களின் ATM card யி பயன்படுத்தி பணம் எடுக்க முற்பட்டு பணம்
இல்லையெனில் அதற்க்கான அபராதம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம்
செய்யப்படும்.
தற்போது SBI, Kotak bank, ICICI, YES Bank, HDFC Bank போன்ற பெரிய வங்கிகள்
இதற்கான புதிய கட்டணம் பிடித்தம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை
பற்றிய முழு தகவலையும் இப்போது பார்க்கலாம்.
State Bank of India :
முதலில் sbi வங்கியின் கட்டணத்தை பார்க்கலாம்.
Sbi வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு ஒரு மாதத்திற்கு sbi ATM களில் பணம்
எடுப்பாதற்கு 5 இலவச பரிவர்த்தனையை வழங்குகிறது, மற்ற வங்கி ATM களில்
எடுப்பாதற்கு 3இலவச பரிவர்த்தயை வழங்குகிறது.
இது தவிர உங்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் உங்களின் ATM பரிவர்த்தனை
நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு கட்டணமாக 20ரூபாய் மற்றும் GST பிடித்தம்
செய்யப்படும்.
மேலும் 5 முறைக்கு மேல் sbi atm ல் பணம் எடுத்தால் 10ரூபாய் மற்றும் GST
பிடித்தம் செய்யப்படும்,
மற்ற வங்கிகளில் 3 முறைக்கு மேல் எடுக்கும்போது 20ரூபாய் மற்றும் GST
பிடித்தம் செய்யப்படும்.,
ICICI Bank :
இந்த வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் Atm ல் பணம் எடுக்கும்போது அதற்கான போதிய
இருப்பு தொகை இல்லாமல் இருந்தால் அதற்கு 25ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம்
செய்யப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது.
HDFC Bank :
HDFC வங்கியை பொறுத்தவரையில் நீங்கள் உங்களின் வங்கியில் பணம் இல்லாத நிலையில்
atm ல் பணம் எடுக்க முற்படும்போது உங்களின் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்
அதற்கான கட்டணமாக 25 ரூபாய் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்.
HDFC வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு hdfc ATM களில் 5இலவச
பரிவர்த்தனையை வழங்குகிறது மற்ற வங்கி ATM களில் 3 இலவச பரிவர்த்தயை
வழங்குகிறது.
இலவச பரிவர்த்தனைகளுக்கு பின்னர் செய்யப்படும் பரிவர்த்தனை ஒன்றிற்கு 20ரூபாய்
மற்றும் GST பிடித்தம் செய்யப்படும்.
மேலும் kotak bank, IDFC Bank,Axis Bank, yes bank, ஆகிய வங்கிகளில்
கணக்கும் வைத்திருப்பவர்கள் வங்கியில் போதுமானவன் பணம் இல்லாமல் atm
பரிவிர்த்தனை நிராகரிக்கப்பட்டால் அதற்கு 25 ரூபாய் கட்டணம் பிடித்தம்
செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இனி ATM களில் பணம் எடுக்கும் முன்னர் உங்களின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம்
உள்ளது எந்தை தெரிந்துகொண்டு அதன் பின்னர் பணத்தை எடுப்பது சிறந்தது.
உங்களின் வங்கியில் பணம் இல்லாமல் இருக்கும் பற்றத்தில் எவ்வளவு
இருப்பு தொகை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் atm ல் பணம் எடுக்க முற்பட்டால்
அதற்க்கான கட்டணம் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது
உறுதி.
No comments:
Post a Comment