Monday, December 7, 2020

Post office saving Account new Rules launched 11/12/2020

 Post office saving Account new Rules launched on 11/12/2020




Introduction :

தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கிற்க்கான  புதிய விதிமுறைகள் வரும்  டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் அமலுக்கு வரப்போவதாக அஞ்சலக துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதனை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

New Rules :


இதற்கு முன்பு வரையில் அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்றால் வெறும் 50 ரூபாய் இருந்தால் போதும்.

ஆனால் தற்போது இந்த விதி முறையானது மாற்றம் செய்யபட்டுள்ளது. தற்போது அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்க 500ரூபாய் வேண்டும். மேலும் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையும் 500ரூபாய் இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்பு நடை முறைக்கு வரப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை டிசம்பர் 11ம் தேதி முதல் நடை முறைக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இனி வரப்போகும் காலங்களில் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபற்றம் 500ரூபாய் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் உங்களுக்கு அதற்கான கட்டணம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 500ரூபாய்க்கு குறைவாக இருந்தால் ஒரு நிதியாண்டிற்கு 100ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் உங்களின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்த பற்றம் 500ரூபாய் வைப்பது சிறந்தது.

தற்போது அனைத்து வங்கிகளையும்போல அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் 500ரூபாய் வைத்திருப்பது கட்டாயமாக்க பட்டுள்ளது.

1 comment: